பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரணுமா? தாத்தா, பாட்டியின் நிலம், வீட்டை அனுபவிக்க இந்த பரிகாரம் போதுமே
சென்னை: பூர்வீக சொத்துக்கள் இருந்தும் அனுபவிக்க முடியவில்லையா? வழக்கு, பஞ்சாயத்துக்களில் பாட்டி, தாத்தா சொத்துக்கள் சிக்கி உள்ளதா? தடங்கலாக உள்ள பூர்வீக சொத்துக்கள், இழந்து போன சொத்துக்களையும் மீட்க எளிய பரிகாரங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
ஒருவருக்கு தாய், தந்தை மற்றும் தாய், தந்தை வழி முன்னோர்களால் கிடைக்கும் சொத்தே பூர்வீகச் சொத்தாகும். பூர்வீக சொத்துக்கள் யாருக்கு கிடைக்கும், யாருக்கு இழுபறியாகி கிடைக்கும் என்றெல்லாம் முன்னோர்கள் கணித்துள்ளார்கள்..

உதாரணத்துக்கு ஜனன கால ஜாதகத்தில் 5,9-ம்மிடத்துடன் செவ்வாய் சுப சுப வலிமை பெறுவதுடன் குரு,சனி, சம்பந்தம் இருப்பவர்கள் வம்சாவழியாக பூர்வீகச் சொத்தை பயன்படுத்தும் பாக்கியம் பெற்றவர்களாம்... அதேபோல, ஜனன கால ஜாதகத்தில் 5-ம் அதிபதி 6-ல் இருந்தால் பூர்வீகச் சொத்தை கடனுக்காக இழக்க நேரிடுமாம்.. 5-ம் அதிபதி 8ல் இருந்தால் பூர்வீக சொத்தால் அங்காளி, பங்காளி வம்பு, வழக்கு, அவமானம் ஏற்படுமாம்.. 8 ம் இடத்திற்கு சுப கிரக சம்பந்தம் இருப்பவர்களுக்கு வழக்கில் ஜெயம் உண்டாகுமாம்.
பூர்வீக சொத்து: எனவே, பாட்டன் பூட்டன் சம்பாதித்து வைத்த பூர்வீக சொத்துக்கள் அனைவருக்குமே எளிதாக கிடைத்துவிடுவதில்லை.. அந்த சொத்துக்களின் மீது பங்குதாரர்களின் தகராறு, கோர்ட்டு கேஸ் வழக்குகளில் போன்றவைகளால் தடங்கலாகி நின்றுவிடும். இதனால் சொத்துக்கள் இருந்தும் அதை அனுபவிக்க முடியாமல், அதனை மீட்பதற்காக பலரும் போராடி கொண்டிருப்பார்கள்.
இதற்கெல்லாம் சிலவகை எளிய பரிகாரங்களையும் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.. குறிப்பாக, சிவப்பு நிற செம்பருத்தி பூக்களை மாலையாக கட்டி, உங்களது ஊரிலுள்ள பெண் தெய்வங்கள், மாரியம்மாள், எல்லையம்மாள் போன்ற தெய்வத்திற்கு மாலையாய் செலுத்த வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் இப்படி அம்பாளை வழிபட்டு வரும்போது, பூர்வீக சொத்து பிரச்சனை, பல வருடமாக இழுத்துக்கொண்டே இருந்தாலும், விரைவில் வெற்றி கிடைக்குமாம்.
வராகி அம்மன்: அதேபோல, வராகி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகளில் காலை 6 முதல் 7மணி அல்லது இரவு 8 முதல் 9 மணி அளவில், மண் அகல் விளக்கில் கரு நீல துணியில், சிறிது வெண் கடுகை முடிந்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரும்போது, இழந்த சொத்துக்களை மட்டுமல்ல, இழந்த செல்வம், புகழ், கவுரவம் அனைத்தையும் திரும்ப பெறலாம்.
ஒருவேளை, பூர்வீக நிலம், விற்பனையாகாமல் இருந்தால், காணி இருக்கும் இடத்தில் உங்களுடைய தாத்தா பாட்டியின் போட்டோக்களை வைத்து, அவர்களுக்கு ரோஜா பூ மாலையை சாற்றி, 2 விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். அவர்களுக்கு பிடித்த உணவை படைத்து, 3 நாட்கள் தொடர்ச்சியாக இதை பரிகாரம்போல செய்து வந்தால், தாத்தா, பாட்டியின் ஆத்மா சாந்தி ஏற்பட்டு, விரைவில் சுமூக முடிவு கிடைக்கும்.
செவ்வரளி பூக்கள்: அதேபோல, செவ்வாய்க்கிழமைகளில் திருச்செந்தூர் முருகப்பெருமான் படத்திற்கு சந்தன, குங்குமம், பூக்கள் என அலங்காரம் செய்ய வேண்டும். தாம்பூல தட்டில் செவ்வரளி பூக்களால் முருகப்பெருமானை 108 முறை, ஓம் என்ற மந்திரத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டு வரவேண்டும். இதனால் இழந்த சொத்துக்களையும் பெற முடியும், பூர்வீக சொத்துக்களும் தானாக வந்து சேருமாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications