திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பத்மாவதி தாயாருக்கென தனி சன்னிதி இல்லாதது ஏன் தெரியுமா?
சென்னை: ஆயிரம் அத்திவரதருக்கு சமமான கோயில் ஒன்று உள்ளதே அது உங்களுக்கு தெரியுமா? திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தாயாருக்கு தனி சன்னிதி இல்லாதது ஏன் என்பது குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: ஆயிரம் அத்தி வரதருக்கு சமமான ஒரு கோவில், 100 திருப்பதிக்கு சமமான ஒரு கோவில் 100 திருப்பதி தரிசனத்திற்கு சமமான பத்மாவதி, ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு திருமணம் நடந்த இடம் என்ற வரலாற்று பெருமையுடைய நாராயணவனம் தலத்திற்கும் மற்றும் ஆயிரம் அத்தி வரதருக்கு சமமான தரிசனம் பெறக்கூடிய ஒரு ஆலயம் என்கிற பெருமை உடையதுமான நாகலாபுரம் ஸ்ரீவேதநாரயண பெருமாள் தலத்திற்கும் தான்.

சந்திரனை அடிப்படையாக கொண்ட சந்திர மாஸ கணக்குபடி வைகாசி மாத சுக்ல பட்ச தசமி திதியன்று நாராயணவனம் என்கிற இடத்தில்தான் பத்மாவதி ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்துள்ளது.
அப்படிபட்ட வரலாற்று பெருமையுடைய தலத்தையும் ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான வேத நாராயண பெருமாள் கோவில் தலத்தையும் இன்று நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். பெரும்பாலானோருக்கு ஒரு சந்தேகம் இருக்கும். பொதுவாக நாம் எந்த பெருமாள் கோயிலுக்குச் சென்றாலும் அங்கே அருகிலேயே தாயார் சன்னதியும் இருக்கும்.
ஆனால் திருப்பதியில் மட்டும் தாயார் எங்கோ தொலைவில் திருச்சானூரில் இருக்கிறாரே! ஏன் இப்படி? இதற்கு விடை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாளின் ஊர். திருச்சானூர் பத்மாவதி தாயாரின் ஊர். பெருமாள் தாயாரைப் பார்க்க திருச்சானூருக்கு வந்தார். அதனால் அங்கு பெருமாளுக்கு தனி சன்னதி இருக்கிறது.
ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்த இடம் நாராயண வனம். இங்கு பெருமாளும், தாயாரும் ஒரு சேரக் காட்சியளிக்கின்றனர்.
தல சிறப்பு: இங்கு பெருமாளும் தாயாரும் மணம் முடித்தக் காரணத்தால் இது கல்யாணக் களையுடன் மகிழ்ச்சியைக் குறிக்கும் மங்களகரமான இடம். இங்கு பெருமாள் மணமகன் அலங்காரத்திலும், தாயார் மணமகள் அலங்காரத்திலும் அருள்பாலிக்கின்றனர்.
திருப்பதியிலும், திருச்சானூரிலும் தனித்தனியாக இருக்கும் இவ்விருவரும் ஒன்று சேர்ந்து எழுந்தருளியிருப்பது காணக் கிடைக்காத அற்புதக் காட்சி. நாராயணவனத்தில் உள்ள கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் திருப்பதியை விட பழமையான கோவிலாகும்.
இது தான் பத்மாவதி தாயாரின் அவதார ஸ்தலம். நாராயணவனத்தில் தான் பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்தது.
உடைவாள், கையில் திருமண காப்போடு பெருமாள் அருளும் இந்த க்ஷேத்ரம் தான் உலகின் முதல் வெங்கடாஜலபதி கோவில்.
இரண்டாவதுதான் திருப்பதி! திருப்பதி வெங்கடாஜலபதி பத்மாவதி தாயாரை இங்கு தான் மணந்தார். இடுப்பில் உடைவாளோடு, கையில் கல்யாண காப்போடு பெருமாள் இருக்கும் கோவில்கள் இரண்டு. ஒன்று குணசீலம் இன்னொன்று நாராயணவனம்.
இந்த கோவிலை திருமணம் ஆகாதவர்கள் தரிசித்தால் திருமணம் தடை விலக்கும் ஸ்தலம் இது. சுருக்கமாக நாராயணவனம் கல்யாண பெருமாள் என்று சொன்னால் தான் அனைவர்க்கும் இங்கே தெரியும்.
கையில் திருமண காப்போடு இருக்கும் இந்த பெருமாள் திருமண தடையை நீக்குவதில் வல்லவர். திருமலையில் பெருமாளை நீண்டநேரம் காத்திருந்து தரிசிக்க முடியாத குறையைப் போக்க விரும்புபவர்கள், இந்தத் நாராயணபுரம் தலத்துக்கு வந்து, தாங்கள் விரும்பும் அளவுக்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பெருமாளையும் தாயாரையும் ஒருசேர தரிசித்து மகிழலாம்.
உள்ளே சென்று பெருமாளை வணங்கிவிட்டு, வெளியே வரும்போது ஸ்ரீ பத்மாவதி தாயார் திருமணத்திற்கு மாவு அரைத்த இயந்திரம் ஒன்றை பார்க்கலாம்!
தரிசனம் முடித்து வெளியே வந்ததும், அருமையான ருசியோ ருசியான கோயில் பிரசாதம் புளியோதரையை சிந்தாமல் சிதறாமல் தொன்னையில் அள்ளிக் கொடுக்கின்றார்கள். பக்தர்கள் தங்களுக்கு திருமணம் கைக்கூடவும், கடன்தொல்லையில் இருந்து விடுபடவும், சகல செல்வங்களும் கிடைக்க பெருமாளை வேண்டி செல்கின்றனர்.
வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கும், தாயாருக்கும் அபிஷேகம் செய்து திருமஞ்சனம் சாற்றி நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்டது.
மிக மிக அழகாய் பராமரித்துக் கொண்டு வருகிறார்கள்.
பெயர்ப் பலகை அனைத்தும் மின்னும் வண்ண செப்பேட்டில், திருப்பதியில் உள்ளது போன்றே இங்கும் உள்ளது.
திருப்பதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நாராயண வனம் உள்ளது. இந்த நாராயண வனத்தில் அருணா நதி பள்ளத்தாக்கு உள்ளது. பத்மாவதி என்று அழைக்கப்படும் தாயார் இந்த இடத்தில்தான் வளர்ந்தார்கள்.
நாராயண வனம் எங்கு இருக்கிறது?: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியிலிருந்து 35 கிமீ தொலைவிலும் புத்தூரிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ளது. திருச்சானூரிலிருந்து 31 கிமீ தொலைவும், சென்னையிலிருந்து 95 கிமீ தொலைவில் ஊத்துக்கோட்டை திருப்பதி சாலையில் உள்ளது.
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கும். இங்கு ஆறு கால பூஜைகளும், பலவிதமான உற்சவங்களும் நடப்பதால் பக்தர்கள் எப்பொழுது சென்றாலும் ஏதேனும் ஒரு பூஜை அல்லது உற்சவத்தில் கலந்து கொள்ளலாம். இத்தலத்திற்கு 7 கிமீ தொலைவில் நாகலாபுரம் தலம் உள்ளது. இது மச்சாவதாரத் திருத்தலம். இன்னும் சற்றுத் தொலைவில் பிரதோஷப் பூஜை தோன்றுவதற்கு மூலக்காரணமாக இருந்த தலமான சுருட்டப்பள்ளி பள்ளிக் கொண்டீஸ்வரர் ஆலயம் இருக்கிறது.
நாராயணவனத்தில் தரிசனம் முடித்து அப்படியே அருகில் நாகலாபுரத்தில் இருக்கின்ற வேதநாராயணப் பெருமாள் திருக்கோயிலுக்கு சென்றால் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்பது போல, ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி தரிசனம் பெற்ற மகிழ்ச்சியுடன் ஆயிரம் அத்திவரதர் தரிசனத்திற்கு சமமான ஸ்ரீ வேதநாராயண பெருமாளின் தரிசனத்தையும் நாம் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications