குளவிகள் வீட்டில் கூடு கட்டியிருக்கா? குளவி கூடு கட்டினால் நல்லதா? கெட்டதா? அடேங்கப்பா இவ்ளோ இருக்கா
சென்னை: குளவிகள் வீடுகளில் கூடு கட்டுவது நல்லதா? கெட்டதா? இந்த குளவி கூட்டினை நாம் கலைக்கலாமா? குளவிகள் கூடு கட்டுவது குறித்து ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளவை யாவை?
பொதுவாக வீடுகளிலும், வீடுகளுக்கு பக்கத்திலும் தேன்கூடு இருக்க கூடாது என்பார்கள்.. காரணம், தேன் கூடு வீட்டில் இருந்தால் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்குமாம்.. அத்துடன் கடன் தொல்லைகளும், வறுமையும் சேர்ந்து கொள்ளும் என்பார்கள்.

ஆனால் குளவிகளை அப்படி சொல்வதில்லை.. வீட்டில் குளவி கூடு கட்டுவது மிகவும் நல்லது என்கிறார்கள்.. பொதுவாக, இந்த குளவிகள், அதன் கூடுகளை பார்த்து பார்த்து கவனமாக கட்டுமாம்..
மென்மையான மண்: முழுக்க முழுக்க தூய்மையான மண்ணை கொண்டே இந்த கூட்டினை குளவிகள் கட்டுகின்றன.. அதாவது, மரத்தின் கூழிலிருந்தும், சிதைந்துபோன மரங்களிலிருந்து மரத்தூளை கொண்டு வந்து, பற்களாலேயே கடித்து அதனை மென்மையாக்கி விடுமாம்.. இந்த தூளில் தன்னுடைய எச்சிலை கலந்து, அதில்தான் அறுகோண கூட்டை உருவாக்கும். இந்த கூட்டிலேயே அறைகளையும் அமைத்து கொள்ளும். ஒவ்வொரு அறைக்குள்ளும், ஒவ்வொரு முட்டையை பத்திரமாக வைத்து கொள்ளும்.
பெரும்பாலும், இனப்பெருக்கத்துக்காகவே இந்த கூடுகளை குளவிகள் கட்டுகின்றன.. எனவே, வீட்டில் குளவிகள் கூடு கட்டினால், திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பார்கள்.. வீட்டின் நிதி ஆதாயமும் சீராக இருக்குமாம்.. கடன் வாங்கியிருந்தாலும், அதை எளிதாக திருப்பி தர முடியும்.. கடன் கொடுத்திருந்தாலும், அந்த பணம் சிரமமின்றி திரும்ப கிடைத்துவிடுமாம்.
வடகிழக்கு: அதுமட்டுமல்ல, பூஜை அறையில் குளவிகள் கூடுகள் கட்டினால் அது மிகவும் நல்லது.. அதுவும் வடகிழக்கு மூலையில் கூடு கட்டினால், அது இன்னும் நன்மைகளை தரக்கூடியது. இந்த கூடுகளை எக்காரணம் கொண்டும் கலைத்துவிடக்கூடாது.
ஆனால், சமையலறையில் கூடுகளை கட்டிவிட்டால், அது நிதி ஆதாரத்தை பலவீனமாக்கி, வறுமையில் தள்ளிவிடுமாம்.. அதேபோல, புதிதாக கூட்டை கட்டிவிட்டு, குளவிகள் அதிலிருந்து வெளியேறி விட்டால், வீட்டில் ஏதோ சிக்கல் என்று அர்த்தமாம்.. இது அபசகுணமாகவும் கருதப்படுவதால், உடனே அந்த கூட்டினை கலைத்து அப்புறப்படுத்திவிட வேண்டும்.
சுண்ணாம்பு: அதேபோல, குளவிகள் எதிர்பாராமல் கொட்டிவிட்டால், விஷம் ஏறிவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும். குளவி கொட்டிய இடத்தில் சிறிதளவு சுண்ணாம்பு வைத்தால், விஷம் ஏறாமல் இருக்கும் என்பார்கள்.. அதேபோல குழந்தைகளுக்கு கை எட்டும் இடத்தில் எதிர்பாராமல் குளவி கூடு கட்டிவிட்டால், அந்த கூட்டினை கலைத்துவிட வேண்டும். மேலும், அந்த இடத்தில் கோமியத்தை மீண்டும் மீண்டும் தெளித்து வந்தால், அதே இடத்தில் குளவிகள் கூடு கட்டாது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications