இரவில் நிம்மதியான தூக்கம் வேணுமா? தூங்கும் முன்பு இதை மட்டும் சாப்பிட்டு படுங்க.. பெஸ்ட் பரிகாரம்
சென்னை: தினமும் 8 மணி நேரம் தூங்கி, அதிகாலையில் எழுந்துவிடுவது சிறந்த ஆரோக்கியமாக கருதப்படுகிறது. நிம்மதியான தூக்கத்திற்கு ஆன்மீகத்தில் ஏராளமான விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதில் ஒருசிலவற்றை பற்றி மட்டும் பார்ப்போம்.
தினந்தோறும் முறையான தூக்கம் இருந்தால்தான் ஆரோக்கியமான வாழ்வு அமையக்கூடும்.. உணவு மற்றும் பழக்கவழக்கங்களை முறையாக கடைப்பிடித்தால், இந்த ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும்.. அதேபோல, மனதை எப்போதுமே மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு ஆரோக்கியமான மனிதன் தினமும் 6 முதல் 8 மணி நேரம் இரவு நேரத்தில் தூங்க வேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள்.. இதற்கு தூங்க செல்வதற்கு முன்பே கண்களுக்கு ஓய்வு தர வேண்டும்..
தூங்கும் முன்பு, கம்ப்யூட்டர், டிவி, செல்போன், டேப்லெட் என எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.. காரணம் இதிலிருந்து வெளியாகும், "நீல ஒளி" மூளையை களைப்படைய வைப்பதுடன், ஓய்வுக்கும் நமக்கு வழிவிடாது.
என்ன சாப்பிடலாம்: இரவு தூங்க போவதற்கு முன்பு, கால் பாதங்களில், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி மசாஜ் செய்தால், நல்லதொரு தூக்கம் வரும்.. அல்லது சோம்பு தண்னீர் அல்லது சோம்பு டீ தயாரித்து குடிக்கலாம் என்கிறார்கள் உணவு நிபுணர்கள்..
ஆனால், தூங்க போகும் முன்பு வெள்ளரிக்காய் சாப்பிடக்கூடாது.., காபி, டீ குடிக்கக்கூடாது. உலர் பழங்களையும் சாப்பிடக்கூடாது என்கிறார்கள் நிபுணர்கள்.
அதேபோல, ஆன்மீகத்திலும் முறையான, நிம்மதியான தூக்கத்திற்கு நிறைய வழிகள் சொல்லப்பட்டுள்ளன.. தியானம், யோகா இரண்டுமே பழங்காலம் தொட்டே கடைப்பிடித்து வரும் பழக்கமாக உள்ளது. கவனத்தை சிதறவிடாமல், நம்முடைய மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல், தியானத்துக்கு உண்டு. தியானம் செய்வதால், மன அழுத்தம் குறைகிறது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
தியானம், யோகா: தியானத்தில் மூச்சு தியானத்தை இணைத்துக்கொண்டால், பதற்றத்தை எளிதாக விடுவிக்கலாம்.. மன அழுத்தத்தை குறைத்து கொள்ளலாம்.. இதனால், எளிதாக தூக்கம் வந்துவிடுவதுடன், புத்துணர்ச்சியையும் தருகிறது..

யோகா பயிற்சிகளை தினந்தோறும் செய்து வருவதால், இரவில் தூக்கம் மேம்படுவதோடு மட்டுமல்லாமல் மன அழுத்தமும் குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. பாலாசனம், விபரீத கரணி ஆசனம், சவாசனம், உத்தனாசனம் போன்ற ஆசனஙகள் நல்ல தூக்கத்தை தரக்கூடியவை.
மந்திரம்: தூங்க செல்வதற்கு முன்பு ஏதாவது ஒரு மந்திரத்தை மீண்டும் மீண்டும் உச்சரிப்பதால் மனதில் அமைதி உணர்வு ஏற்படும். இது நிம்மதியான தூக்கத்துக்கு வழிவகுக்கும். விருப்பத்திற்குரிய கடவுளின் மந்திரத்தை சொல்லலாம். ஆஞ்சனேயரின் பெயரைக் கூறிவிட்டு படுப்பது மிகவும் நல்லது.
வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக்கூடாது.. வடக்கு பக்கமாக வைத்து தூங்கினால், இதுபோன்று கிடைமட்டமாக இருக்கும்போது, மெதுமெதுவாக ரத்தம் மூளை நோக்கி ஈர்க்கப்படும்... மூளையில் ரத்த ஓட்டம் அதிகப்படியாக இருந்தால், தூக்கத்தை கெடுத்துவிடும். ஒருவேளை மூளையில் ஏற்கனவே ஏதாவது பலவீனம் இருந்தாலோ அல்லது முதுமையில் இருந்தாலோ, தூக்கத்திலேயே இறந்து போவதற்கு வாய்ப்பும் உள்ளது. மூளையில் ரத்தக்கசிவும் ஏற்படலாம்.
எனவே, கிழக்கு திசையில் தலை வைத்து தூங்குவது மிகவும் நல்லது... காரணம், இந்த திசையில் இருந்து வரும் நேர்மறை ஆற்றல்கள், உடலுக்கு அனைத்து வகையான நேர்மறை ஆற்றலையும் வழங்கும். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் உங்களை வைத்திருக்க உதவும்.
தெற்கு திசை: தெற்கு திசையில் தலை வைத்து வடக்கு திசை நோக்கி கால்களை நீட்டி தூங்கினால், புகழ், செல்வம், வெற்றி தேடி வரும் உடல் ஆரோக்கியமும் மேம்படும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. மேற்கு திசையில் தலை வைத்து தூங்கினால், பணக்காரர்களாகவும், பெயர் புகழுடன் வாழ்வதற்கான வாய்ப்பும் அதிகரிக்குமாம்..
படுக்கையறையில் சந்தன வாசனை தரும் திரவியத்தை தெளிக்கலாம்.. காரணம், சந்தனம் ராகு தோஷத்தையும் ராகுவால் உண்டாகும் விளைவுகளையும் குறைக்கக்கூடியது.. ராகுவின் தசை நடந்தால், சந்தன சோப்பு மற்றும் தூபக்குச்சிகளைப் பயன்படுத்த வேண்டும். அதேபோல, வெள்ளியால் செய்யப்பட்ட 2 இரண்டு பாம்புகளை ஆற்றில் விடுவதால், ஜாதகத்தில் ராகுவின் நிலை வலுப்பெறுவதுடன், தூக்கமின்மை பிரச்சனையிலிருந்தும் விடுபடலாம் என்கிறார்கள்.
பரிகாரம்: இரவு தூக்கம் சரியாக வராவிட்டால், எளிய பரிகாரம் ஒன்றையைம் செய்யலாம்.. தூங்க செல்வதற்கு முன்பு, உள்ளங்கைகளில் 1 ஸ்பூன் காபித்தூள், 1 ஸ்பூன் கல் உப்பு, இரண்டையும் எடுத்து, உங்கள் தலையை 27 முறை சுற்ற வேண்டும்.
பிறகு எதிர்ப்பத திசையில் மறுபடியும் 27 முறை சுற்றி, 1 டம்ளர் சுத்தமான தண்ணீரில் இந்த 2 பொருட்களையும் போட்டு ஒரு ஸ்பூனில் நன்றாக கரைத்து, பாத்திரம் கழுவும் வாஷ்பேசினில் கொட்டிவிட வேண்டும். இப்போது குளித்துவிட்டு வந்து, அனுமனை நினைத்து கொண்டு படுத்தாலே நிம்மதியான தூக்கம் வரும் என்கிறது சாஸ்திரம்.












Click it and Unblock the Notifications