தாலி கயிறு மாற்றும்போது இது முக்கியம்.. ஆடி 18 நாளில் இந்த "2 பொருளும்" கட்டாயம் வாங்கணும்.. ஏன்?
சென்னை: ஆடி 18 நாளை வரவுள்ள நிலையில், இந்த விசேஷ நாளில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது தெரியுமா? சில முக்கியமான விஷயங்களையும் ஆடிப்பெருக்கின்போது கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.
ஆடிப்பெருக்கு இந்த 2024ம் ஆண்டில் நாளை ஆகஸ்ட் 3ம் தேதி சனிக்கிழமையன்று வருகிறது. நாளை பிற்பகல் வரை புனர்பூசம் நட்சத்திரமும் பிறகு பூசம் நட்சத்திரமும் வருகிறது. காலை 7.45 முதல் 8.45 வரை மட்டுமே நல்ல நேரம் உள்ளது.. அதேபோல, மாலையில் 4.45 முதல் 5.45 வரை நல்ல நேரம் உள்ளது. அதன் பிறகு அமாவாசை திதி ஆரம்பமாகிவிடுகிறது.

சிறப்பு நாள்: நாளைய தினம் சனிக்கிழமை என்பதால், காலை 9 முதல் 10.30 வரையிலான நேரம் ராகு கால நேரமாகவும், பகல் 01.30 முதல் 3 மணி வரையிலான நேரம் எமகண்ட நேரமாகவும் உள்ளால், காலை 9 மணிக்குள் வழிபாட்டினை முடித்துவிடுவது நல்லது.
இந்த ஆடி 18 தினத்தன்று, பெண்கள் கருப்பு நிற ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும் என்பார்கள்.. மாறாக, மங்களகரமான சிவப்பு, மஞ்சள் நிறத்தில் ஆடைகளை உடுத்த வேண்டும்.. அல்லது திருமண புடவையையும் அணிந்து கொள்ளலாம். கை நிறைய வளையல் அணிந்து, மஞ்சள் பூசி கொண்டு கடவுளை வணங்க வேண்டும்.

மஞ்சள் பிள்ளையார்: வீட்டில் பூஜை செய்யும்போது, மஞ்சளில் பிள்ளையார் செய்து வைத்து, வழிபட வேண்டும். பிள்ளையாருக்கு விளக்கேற்றி விட்டு பிறகுதான், அம்பாளுக்கு நெய்வேத்தியம் படைத்து வழிபடவேண்டுமாம்.
அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய் வற்றல், எண்ணெய் போன்றவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்ள வேண்டும். வீட்டில் கசப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். வெண்ணெய், நெய் போன்ற பொருட்களை உருக்காமல் இருப்பது நல்லது.
அன்னதானம்: ஆடி 18 அன்று கடன் கொடுக்கக்கூடாது.. மிகவும் முக்கியமான நாள் என்பதால், அன்னதானத்தை வழங்கலாம்... அதிலும் பெண்கள் அன்னதானம் வழங்குவது சிறப்பு. அன்னதானம்கூட தர முடியாவிட்டால், வெறும் தண்ணீராவது தந்து உதவலாம்.. அதேபோல, சுமங்கலி பெண்கள் 3 அல்லது 5 பேருக்கு, மஞ்சள், குங்குமம், வளையல், பூ வைத்து தானம் தரவேண்டும்.
ஆடிப்பெருக்கில் தாலி கயிறு மாற்றுவது மாங்கல்ய பலத்தை அதிகரிக்க செய்யும் என்பார்கள்.. அதனால், கழுத்தில் தாலி சரடு அணிந்திருந்தாலும்சரி, கயிறு அணிந்திருந்தாலும்சரி, சரட்டில் மஞ்சள் கயிறு இருப்பதும் அவசியம். ஒருவேளை, கயிறு மட்டுமே கட்டியிருந்தால், இந்த சிறப்பு நாளில், புதிய சரடு மாற்றிக் கொள்ளலாம். ஆனால், நல்ல நேரம் பார்த்துதான், சரடு மாற்ற வேண்டும்.
2 பொருட்கள்: ஆடிப் பெருக்கு தினத்தன்று தங்கம் அல்லது வெள்ளி வாங்குவது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.. ஆனால், வசதியில்லாத பட்சத்தில், சிறிய குண்டு மஞ்சளாவது வாங்க வேண்டும்.. குண்டு மஞ்சள் மகாலட்சுமியின் ஸ்வரூபமாக கருதப்படுவதால், இதுவே தங்கத்திற்கு இணையானதாக கருதப்படுகிறது.. அதேபோல, குபேரனின் அம்சமாக உப்பு பார்க்கப்படுவதால், புதிதாக கல் உப்பு வாங்கி வீட்டில் ஜாடியில் நிரப்பி வைக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications