வீட்டில் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றலாமா? எள் தீபம் வைக்கலாமா?
சென்னை: வீட்டில் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றலாமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அது போல் சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றலாமா என்பதையும் பார்க்கலாம்.
இதுகுறித்து நானறிந்த ஆன்மீகம் எனும் ஐடியில் கூறியிருப்பதாவது: மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ள படம், விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.

வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.
திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.
அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.
கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை, கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.
எலுமிச்சை பழத்தில் விளக்கை கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.
சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.
சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது.
இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.
நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும்.
திருப்பதி, திருத்தணி, பழனி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.
ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்கு செல்லும் போது அதைக் கழற்றி வைத்துவிட்டுத்தான் செல்ல வேண்டும். கோயில் மூடியிருக்கும் போது திருமஞ்சன பூஜையின் போது திரையிட்டிருக்கும் போதும் வழிபடக் கூடாது.
குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது. விக்கிரத்திற்கு தீபாராதனை நடக்கும் போது கண்களை மூடிக் கொண்டு வணங்கக் கூடாது.
பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் தலையில் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.
செவ்வாய், புதன், வெள்ளிக்கிழமை குத்து விளக்கை துலக்கக் கூடாது.
இறந்த முன்னோர்களின் படங்களை (அவர்கள் தெய்வமாகி விட்டிருந்தாலும்) சாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம்.
வாழைப்பழம் சாப்பிட்டபின் மோர் சாப்பிடக் கூடாது.
பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.
புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள கிருஷ்ணர், ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.
கர்ப்பிணி பெண்களோ அல்லது அவர் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக் கூடாது.
இறந்தவர்களின் ஆன்மாக்கள் வண்ணத்துப்பூச்சியினுள் புகுந்து இறப்பு ஏற்பட்ட நாளிலிருந்து கொஞ்ச காலம் வரை நம் வீட்டைச் சுற்றி வரும். ஆகவே மரணம் ஏற்பட்ட ஒரு வீட்டிற்குள் அடிக்கடி வண்ணத்துப்பூச்சி பறந்துக் கொண்டிருந்தால் அந்த வீட்டில் அந்த ஆன்மாக்களின் ஆசியால் சந்தோஷம், சுபகாரிய நிகழ்வும், தீர்க்காயுளும் உண்டாகும்.
சிங்கம், புலி, கரடி ஆகிய கொடிய மிருகங்களின் பொம்மைகளை உங்களுடைய வீடுகளில் வைப்பதன் மூலம் எதிரிகளின் தொல்லை அடங்கும்.
உங்கள் வீட்டில் துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தால் கண்ணூறு தாக்கி இருப்பதாக உறுதி செய்து உங்கள் வீடு முழுக்க உப்பு கலந்த நீரால் கழுவி விட்டால் கண்ணூறு போய்விடும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications