மகாலட்சுமி வீட்டில் தங்க.. துடைப்பத்தை இப்படி வைங்க.. தானமாக துடைப்பம் தரலாமா? டோர்மேட் வாஸ்து கலர்
சென்னை: வீட்டிலுள்ள பொருட்களை வாஸ்துப்படி வைக்க வேண்டும், பயன்படுத்த வேண்டும்.. அதிலும் மகாலட்சுமிக்கு உரிய பொருட்கள் என்றால், அதில் பிரத்யேகமான கவனம் செலுத்த வேண்டும். அதில் ஒன்றுதான் துடைப்பம்.. வாஸ்து சாஸ்திரப்படி துடைப்பத்திற்கு மரியாதை செய்வது அன்னை மகாலட்சுமியை மகிழ்விக்கும் என்பார்கள்.. அந்தவகையில், வீட்டை சுத்தப்படுத்த பயன்படும் துடைப்பதை எங்கு எப்படி வைப்பது? எப்படி வைப்பது என்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அவைகளை பற்றி பார்ப்போம். அதேபோல, வாசலில் போடப்படும் டோர் மேட் பற்றியும் வாஸ்துவில் சொல்லப்பட்டுள்ளதை சுருக்கமாக பார்ப்போம்.
துடைப்பம் என்பதே செல்வச்செழிப்பின் அடையாளமாகும். எனவேதான் மற்றவர்கள் பார்வையில் துடைப்பத்தை எப்போதுமே வைக்ககூடாது..

வீட்டை பெருக்கும்போது, முதலில் மேற்கு அல்லது வடக்கு திசையில் இருந்து பெருக்க வேண்டுமாம்.. இதனால் லட்சுமி உங்களுடன் தங்கியிருக்கக்கூடும்..
பழைய துடைப்பம்
வீட்டிலுள்ளவர்கள் வெளியே சென்றதுமே வீட்டை பெருக்கவோ, துடைக்கவோ கூடாது.. இது முன்னேற்றத்துக்கு தடையாகிவிடும்.. அப்படியே பெருக்குவதாக இருந்தாலும், ஒருமணி நேரம் கழித்து பெருக்கலாம்.
வீட்டில் தெற்கு மற்றும் மேற்கு இடையே துடைப்பத்தை வைப்பது மிகவும் நல்லது.. ஆனால், செங்குத்தாக வைக்காமல் துடைப்பத்தை எப்போதும் படுத்தவாறு வைக்க வேண்டும். அதாவது துடைப்பத்தின் முகம் எப்போதும் கிழக்கு நோக்கி இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.
மகாலட்சுமி அம்சம்
ஒருசிலர் வீட்டை காலி செய்யும்போது பழைய துடைப்பத்தை அங்கேயே விட்டுவிட்டு செல்வார்கள்.. இது தவறானதாகும்.. மகாலக்ஷ்மியை பழைய வீட்டிலேயே விட்டுச் செல்வதாகிவிடும்.. ஒருவேளை அந்த துடைப்பம் பழையதாகியிருந்தால், அதை அப்படியே போடாமல், தனித்தனியாக பிரித்து போட்டுவிட வேண்டும்.
துடைப்பம் வாங்குவதாக இருந்தால் தேய்பிறை நாட்களில் துடைப்பம் வாங்கலாம்.. அல்லது செவ்வாய், சனிக்கிழமைகளில் வாங்கலாம்.. இதில் சனிக்கிழமை கூடுதல் சிறப்பாகும்.. இதனால் குடும்பத்தில் நிதிநிலைமையும் மேலோங்கும்.. எக்காரணம் கொண்டும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துடைப்பம் வாங்க கூடாது..
தானமாக துடைப்பத்தை தரக்கூடாது
துடைப்பத்தை மட்டும் யாருக்கும் தானமாக தரக்கூடாது. அதேபோல துடைப்பம் சிறியதாக இருந்தால், அதை பயன்படுத்தக்கூடாது.. உடனடியாக புதிதாக வாங்கிவிட வேண்டும்.. அதேபோல எப்போதுமே வீட்டை பெருக்கிக்கொண்டே இருக்கக்கூடாது.. காலை மற்றும் மாலை நேரங்களில் சுத்தப்படுத்தினால் போதும். அடிக்கடி பெருக்கி கொண்டிருந்தால், வீட்டிற்கான சேதாரங்கள் அதிகமாகுமாம்.
துடைப்பத்தை தலைகீழாக வைத்தால், குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் பெருகும்.. அதேபோல வீட்டிற்கு வெளியே துடைப்பம் வைப்பதை தவிர்க்க வேண்டும். துடைப்பத்தை மிதிக்க கூடாது.. வீட்டை சுத்தப்படுத்தக்கூடிய துடைப்பம், எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.. அதில் தலைமுடி உள்ளிட்டவைகள் சிக்காதபடி, படியாதபடி பார்த்து கொள்ளவேண்டும்..
டோர் மேட்கள் நிறம், வடிவம், திசைகள்
வீட்டு வாசலில் போடப்படும் டோர் மேட்களின் நிறங்களும், திசைகளும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.. வீட்டின் பிரதான கதவு அதிர்ஷ்டத்துடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கருதப்படுவதால், இந்த இடம் சுத்தமாக இருக்க வேண்டும். நேர்மறை ஆற்றல் இந்த கதவின் வழியாகத்தான் வீட்டிற்குள் நுழைகின்றன என்பதால், இங்கு போடப்படும் டோர் மேட்டுகளும் சுத்தமானதாக இருக்க வேண்டும்.
பிரதான கதவு கிழக்கு திசையில் இருந்தால், மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் டோர் மேட் வாங்கலாம். கதவு மேற்கு திசையில் இருந்தால், மிதியடி பச்சை, நீலம் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். கதவு வடக்கில் இருந்தால், மஞ்சள், கிரீம், வெள்ளை, பச்சை கலரில் டோர் மேட் வாங்கலாம். நுழைவுவாயில் தெற்கில் இருந்தால் பச்சை, வெள்ளை, இளஞ்சிவப்பு நிறத்தில் வைக்கலாம்.
டோர்மேட் எப்போதும் செவ்வக வடிவத்தில் இருக்க வேண்டும். இதனால் குடும்ப உறவுகள் தழைக்கும்.. வட்ட வடிவத்தில் மிதியடிகள், திருமணம், காதல் வாழ்க்கையை மேம்படுத்துமாம். சதுரம் அல்லது ஓவல் வடிவ மிதியடிகளை பயன்படுத்தினால், வீட்டில் பணப்பிரச்சனை வராது என்பார்கள்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications