நாளை ஹனுமன் ஜெயந்தி! இந்த 5 ராசிக்காரர்களுக்கு காசு, பணம், துட்டு மணி மணி! அதிர்ஷ்டம் கொட்டும்!
சென்னை: ஹனுமன் ஜெயந்தி நாளில் 5 ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணமழை வரும் என ஜோதிடர்கள் சொல்கிறார்கள். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம். மேலும் அனுமன் ஜெயந்தி எப்போது கொண்டாடப்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
ஹனுமனை கலியுக தெய்வம் என அழைக்கிறோம். நம் வாழ்வில் இருக்கும் சங்கடங்களை நீக்குபவர். அவர் ஸ்ரீராமரின் தீவிர பக்தர் என்பது அனைவருக்கும் தெரியும்.

அனுமன் ஜெயந்தி ஏப்ரல் 12 ஆம் தேதியான நாளை கொண்டாடப்படுகிறது. நாளைய தினம் சிவனையும் பெருமாளையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும். அனுமன் ஜெயந்தி நாளில் அனுமனை வணங்கினால் நீங்கள் சந்தித்த துன்பங்கள், தொல்லைகள் எல்லாம் நீங்கும்.
ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். அனுமனுக்கு பொரி, அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர், பழங்கள், வாழைப்பழம் போன்றவைகளை நெய்வேத்தியமாக வைக்கலாம்.
அனுமன் ஜெயந்தி அன்று அனுமனுக்கு வீட்டிலேயே பூஜை செய்யலாம். இல்லாவிட்டால் கோயிலில் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ளலாம். அனுமன் சாலிசா பாடலாம். அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றினால் தடைகள் நீங்கும். பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அவருக்கு ஸ்ரீராமஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயல்களும் வெற்றியடையும் என்பது ஐதீகம்.
இந்த நாளில் மேஷம், சிம்மம், கன்னி, கும்பம், தனுசு ஆகிய ராசிகளுக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கிறது. அவர்களுக்கு நன்மை கிடைக்கும்.
மேஷம்- மேஷ ராசிக்காரர்களின் நீண்ட காரியங்கள் நிறைவேறும். உங்களுக்கு பலரது ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். இந்த நாளில் புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அது வருங்காலத்தில் நல்ல வளத்தை கொடுக்கும். காலங்காலமாக கிடைக்காமல் இருந்து வந்த பணம் கிடைக்கும். நிதி நிலைமையும் சீராகும். பணத்திற்கு திண்டாடியவர்கள் இனி அவர்கள் கையில் பணம் புரளும்! வானத்தின் நீல நிறத்தில் உடை அணியுங்கள், நல்லதே நடக்கும்.
சிம்மம்: அனுமன் ஜெயந்தி நாளில் சிம்ம ராசிக்காரர்களுக்கு தங்கள் தொழிலில் மிகப் பெரிய வாய்ப்பகள் கிடைக்கும். எந்த முடிவு எடுத்தாலும் சரியாக ஜாக்கிரதையாக எடுங்கள். உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் அனுகூலமாக இருக்கும். உங்கள் உடல்நலமும் ஆரோக்கியமடையும். உங்கள் இணையுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
கன்னி- கன்னி ராசிக்காரர்களே இந்த அனுமன் ஜெயந்தி உங்கள் வாழ்வில் ஒளியேற்ற போகிறது. வேலையில் உள்ளவர்களுக்கு அதை விட நல்ல வேலைக்கான அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் கிடைக்கும். உங்களுடன் பணியாற்றுவோர் உங்களை மதிப்பார்கள். உங்கள் புகழ் உயரும். நிதி நிலைமை நல்லபடியாக மாறும். மெரூன் நிறத்தில் ஆடை அணியுங்கள்.
தனுசு- தனுசு ராசிக்காரர்களே இந்த அனுமன் ஜெயந்தி உங்களுக்கு பணப்பலன்களை கொடுக்க போகிறது. லட்சுமி கடாட்சம் இருக்கும். பொருளாதாரத்தை முன்னேற்ற பல்வேறு புதிய வாய்ப்புகள பெருகும். உங்கள் பணி வெற்றி பெறும். உங்கள் டயட்டில் அக்கறை காட்டுங்கள். உடல்நலம் சீராக இருக்கும். உங்களது அதிர்ஷ்ட நிறம் ஊதாவாகும்.
கும்பம்- கும்ப ராசிக்காரர்களுக்கு அனுமன் ஜெயந்தி முதல் தொழிலில் நல்ல மாற்றங்கள் கிடைக்கும். அவர்களின் நிதி நிலைமையும் சீராகும். முன்பை காட்டிலும் பணத்தை சேமிப்பீர்கள். வாழ்வில் வெற்றி பெற உங்களுக்கு யாராவது உதவுவார்கள். வியாபாரம் விருத்தியாகும். பச்சை நிறத்தில் ஆடை அணியுங்கள்.
அனுமன் ஜெயந்தி அன்று அனுமனுக்கு வடைமாலை சாற்றுங்கள். இதனால் அளவில்லாத நன்மைகள் கிடைக்கும். ராகு, கேது தோஷங்களும் நீங்கும்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications