Madurai: பக்தருக்காக வெண் பொங்கல், புளி சாதம் செய்த மதுரை மீனாட்சியம்மனின் திருவிளையாடல் தெரியுமா?
மதுரை: மதுரை மீனாட்சியம்மன், தனது பக்தருக்காக சமையல் செய்த திருவிளையாடல் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மதுரை மீனாட்சியம்மன் எப்போது தன் பக்தர்களை காக்கும் கடவுளாகவே இருக்கிறாள்.
இதுகுறித்து பிரியா லட்சுமணன் என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தன் பக்தருக்காக சமையல் செய்த மீனாட்சி அம்மனின் திருவிளையாடல் குறித்து தெரியுமா? மீனாட்சி அம்மன் கோயில் மடபள்ளியில் வேலை செய்து கொண்டிருந்தவர் சீனிவாசன்.

இவர் மீனாட்சி அம்மனின் தீவிர பக்தர். ஒரு நாள் ரொம்ப களைப்பாக இருப்பதால் மடபள்ளியை உட்புறமாக தாழிட்டு கொண்டு "அம்மா மீனாட்சி, எனக்கு களைப்பாக இருக்கிறது. நான் தூங்க போகிறேன். கொஞ்ச நேரம் கழித்து என்னை எழுப்பிவிடுமா, நான் அப்போதுதான் பிரசாதம் செய்ய முடியும்" என வேண்டிக் கொண்டு சீனிவாசன் தூங்க சென்றுவிட்டார்.
மடபள்ளி தட்டும் சப்தம்
கொஞ்ச நேரம் கழித்து மடபள்ளியை தட்டும் சப்தம் கேட்டு சீனிவாசன் திடுக்கிட்டு எழுந்தார். "அம்மா மீனாட்சி என்னை கைவிட்டுவிட்டியே, என்னை எழுப்பாமல் இருந்துவிட்டாயே, நான் எப்படி பிரசாதம் செய்வேன்" என கலங்கியவாறே மடபள்ளி கதவை திறந்தார்.
சேவகர்கள்
அங்கு ராஜாவின் சேவகர்கள் நின்று கொண்டிருந்தனர். "அம்பாளுக்கு தீபாராதனை காட்ட போகிறார்கள். பிரசாதம் தயாராகிவிட்டதா" என சீனிவாசனிடம் கேட்கிறார்கள். சீனிவாசன் திருதிருவென விழித்துக் கொண்டே நிற்கிறார்கள்.
விழித்த சீனிவாசன்
அவர் விழிப்பதை கண்ட சேவகர்கள், "கொஞ்சம் தள்ளுங்க! நாங்களே உள்ளே போய் பார்த்துக் கொள்கிறோம்" என கூறிவிட்டு சேவகர்கள் மடபள்ளிக்குள் சென்றனர். அப்போது ஒரு பக்கம் பொங்கல், இன்னொரு பக்கம் புளி சாதம் என வகை வகையாக பிரசாதங்கள் தயாராகி இருந்தன.
பிரசாதங்கள்
அதை பார்த்த சேவகர்கள் அந்த பிரசாதங்களை அன்னைக்கு படைக்க கொண்டு செல்கிறார்கள். ஆனால் சீனிவாசனுக்கோ ஒன்றும் புரியவில்லை. குருக்கள் அம்பாளுக்கு பிரசாதங்களை நெய்வேத்தியம் செய்துவிட்டு தீபாராதனை காட்டுவதற்காக திரையை விலக்கிய போது அங்கு மீனாட்சி அம்மனின் மாணிக்க மூக்குத்தி காணாமல் போய்விடுகிறது.
மீனாட்சி அம்மன்
இதை பார்த்த குருக்கள் அம்மா மீனாட்சி என்ன சோதனை இது என கேட்டு கதறுகிறார். அப்போது அங்கிருந்த சீனிவாசனுக்கு இதையெல்லாம் பார்த்து அச்சமாகிவிடுகிறது. அப்போது ஒரு அசரிரீ ஒலி கேட்கிறது. "யாரும் பயப்படாதீங்க, என் பிள்ளை சீனிவாசன் களைப்பாக இருப்பதால் தூங்க சென்றார், நான் எழுப்புவதற்கு சென்ற போது அவர் மிகவும் அசதியில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அயர்ந்த குழந்தை
குழந்தை அயர்ந்து தூங்கும் போது எந்த தாயாவது எழுப்புவாளா? அதனால் நானே பிரசாதம் செய்யலாம் என போனேன். மடபள்ளியில் வெளிச்சம் குறைவாக இருந்ததால் எனது மூக்குத்தியை அங்கேயே கழற்றி வைத்துவிட்டு பிரசாதத்தை நானே செய்து முடித்துவிட்டேன். மூக்குத்தியை மடப்பள்ளியில் பாருங்கள். அங்க இருக்கும்" என அந்த அசரிரீ சொன்னது.
காலில் விழுந்த சீனிவாசன்
இதை கேட்ட சீனிவாசன், மீனாட்சி அம்மனின் காலில் விழுந்து கதறுகிறார். "அம்மா எனக்காக பிரசாதமெல்லாம் செய்திருக்கிறாய், இதற்கு நான் என்ன புண்ணியம் செய்தேனோ" என கூறியபடியே கதறி அழுதார். இவ்வாறு அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலில் மீனாட்சிக்குத்தான்
மதுரை மாநகரின் வைகை ஆற்றில் இந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலில் முதலில் மீனாட்சிக்குத்தான் பூஜை செய்யப்படுகிறது. பிறகுதான் சுந்தரேஸ்வரருக்கு பூஜை செய்யப்படும்.
-
வைகாசி விசாகம் 2026: முக்கியத்துவம், புராண கதை: வைகாசி விசாக தேதி மற்றும் பூஜைக்கான நேரம் -
Vaikasi Visagam: வைகாசி விசாகம் 2026! திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications