திருப்பதி ஏழுமலையானின் சிலையில் இருப்பது உண்மையான கூந்தலா? அர்ச்சகர்கள் சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி வெங்கடாஜலபதியின் சிலையில் இருக்கும் முடி பெருமாளுடையது என கூறுகிறார்கள். ஆனால் அந்த முடி எப்போதும் சிக்கே ஆகாதாம். பட்டு போல் இருக்குமாம். சிலையில் முடி வந்தது எப்படி என்ற மர்மம் நீடித்து வருகிறது. இது பெருமாளுடைய முடி என அர்ச்சகர்கள் கூறுகிறார்கள்.

திருமலை திருப்பதியில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து திருப்பதி கோயிலில் சாந்தி பூஜைகள் செய்யப்பட்டன.

tirupati spirtuality tirumala

திருப்பதியில் எத்தனை சர்ச்சையிருந்தாலும் அங்கு செல்லும் பக்தர்களின் கூட்டம் குறையவே குறையாது. இந்த திருப்பதிக்கு நாள்தோறும் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் வரை வருகிறார்கள். பிரம்மோற்சவம் காலத்தில் பக்தர்களின் எண்ணிக்கை 5 லட்சம் வரை இருக்கும்.

உலகிலயே மக்கள் அதிகம் சென்றுவரும் கோயிலாக திருப்பதி உள்ளது. திருப்பதியில் வழங்கப்படும் லட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இதனால் திருப்பதி லட்டு என்ற பெயரை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது. திருமலை கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் இருக்கிறது. திருமலையே எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும்.

ஆயினும் பெருமாளின் சிலை 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பமாகவே இருக்கும். தினந்தோறும் காலை வேளையில் பெருமாளுக்கு பூஜைகளை செய்யும் போது அவருடைய உடலில் வியர்வை இருக்கும். பெருமாள் அணிந்திருக்கும் நகைகளை அர்ச்சகர்கள் எடுத்தால் கொதிக்குமாம்.

திருப்பதி பாலாஜி முன்பு எரிந்து கொண்டிருக்கும் அணையா விளக்கை யார் ஏற்றினார்கள். எப்போது முதல் இந்த விளக்கு எரிந்து வருகிறது என்பது குறித்தெல்லாம் தெரியவில்லை. ஆனால் இந்த விளக்கு பல நூறாண்டுகளுக்க மேலாக எரிந்து கொண்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

திருப்பதி கோயிலில் பெருமாளுக்கு சாத்தப்படும் பூக்கள் காய்ந்துவிட்டால் அவற்றை கர்ப்ப கிரகத்தின் வெளியே தூக்கி எறிய மாட்டார்கள். அதற்கு பதிலாக சுவாமிக்கு பக்க வாட்டில் ஒரு நீர் வீழ்ச்சி இருக்கிறது அங்கு வீசி விடுவார்கள். அதன் பிறகு அர்ச்சகர்கள் அந்த நாள் முழுவதும் சுவாமியின் பின்புறத்தை பார்க்கவே மாட்டார்களாம். இவ்வாறு தூக்கி வீசப்பட்ட பூக்கள் திருப்பதியிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ள எர்பேடு என்ற இடத்தில் இருக்குமாம்.

அது போல் திருப்பதி பெருமாளின் வாகனம் கருடன். திருப்பதி மலையும் பார்ப்பதற்கு கருடன் போல் இருக்கும். ஏழுமலையான் சிலையில் உண்மையான முடி இருக்கிறது. இந்த முடி எப்போதும் சிக்காகுவதே இல்லையாம். மிகவும் சாஃப்ட்டாக பட்டு போல் இருக்குமாம். ஒரு சிலையில் எப்படி உண்மையான முடி வந்தது என்பதே அதிசயமாக இருக்கிறது என்கிறார்கள்.

திருப்பதி பாலாஜிக்கு நீங்கள் உடையை சாற்ற வேண்டும் என்றால் 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமாம். திருப்பதி பாலாஜி கோயிலில் தினமும் காலையில் அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்தில் இடம் பெறும் வாசனை திரவியங்கள் எல்லாம் ஸ்பெயின், நேபாளம், சீனா, பாரீஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+