Gold: தங்கத்துடன் "இந்த" பொருளையும் சேர்த்து வாங்குங்கள்! கோல்டா குவியும்! எந்த ஓரையில் வாங்கணும்?
சென்னை: தங்கம் வாங்கும் போது அத்துடன் சில பொருட்களை சேர்த்து வாங்க வேண்டும். அப்படி வாங்கினால் தங்கம் மேலும் மேலும் சேர்ந்து கொண்டே இருக்கும் என்கிறார்கள். தங்கம் வாங்கும் போது நல்ல நேரம் பார்த்து போவது ஒரு புறம் இருந்தாலும் இன்னொரு நேரத்தில் வாங்கினால் லட்சுமி கடாட்சம் என்று கூறுகிறார்கள்.
சென்னையில் கடந்த 3 நாட்களுக்கு பிறகு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இன்றைய தினம் தங்கம் விலை சவரன் ரூ 67,200 ஆகும். அது போல் வெள்ளியின் விலையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனாலேயே தங்கத்தின் விலை குறைவாக இருக்கும் நேரத்தையும் கருத்தில் கொண்டு நகைக் கடைக்கு கிளம்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
எந்த நாளில் தங்கம்
இந்த நிலையில் எந்த நாளில் தங்கம் வாங்க செல்கிறோமோ அந்த நாளில் தங்கத்துடன் குறிப்பிட்ட பொருளை வாங்கினால் தங்கம் மென்மேலும் சேரும் என்பது ஐதீகம். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
எந்த கிழமையில் வாங்கலாம்
திங்கள்கிழமை- இந்த நாள் செல்வ வளத்திற்கான அடையாளம் ஆகும். இந்த நாளில் தங்கம் வாங்கும் போது துளசி, கற்பூரம், லவங்கம், பச்சை கற்பூரம், பச்சை பயிறு ஆகியவற்றை வாங்க வேண்டும். இதனால் மன நிம்மதி, குடும்ப சாந்தி, தெய்வ அனுகிரகத்தை தரும்.
செவ்வாய்க்கிழமை- சுப்பிரமணியனுக்கான நாளாகும். இந்த நாளில் தங்கம் வாங்கும் போது துவரம் பருப்பு சேர்த்து வாங்க வேண்டும். வாழ்க்கையில் தைரியம், வெற்றி, உடல் ஆரோக்கியத்தை அள்ளித் தரும்.
புதன்கிழமை- ஞானத்திற்கும் வியாபார வளர்ச்சிக்கும் பொறுப்பான நாளாகும். தங்கம் வாங்கும் போது பச்சை பயிறு சேர்த்து வாங்க வேண்டும். விவாகரத்து, வாக்குவாதங்கள், மனதளவிலான குழப்பங்களை தீர்க்கும்.
வியாழக்கிழமை- கல்வி, குரு, கிருபை, ஆன்மீக முன்னேற்றத்திற்கு சிறந்த நாளாகும். தங்கம் வாங்கும் போது கருப்பு மூக்கடலையை சேர்த்து வாங்க வேண்டும். இது ஞானத்தையும் பாக்கியத்தையும் தரும்.
வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமியின் நாள். அன்றைய தினம் வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். அன்றைய தினம் தங்கம் வாங்கும் போது அரிசியையும் சேர்த்து வாங்குவது நல்லது., லட்சுமி கடாட்சம், செல்வ சேர்க்கை, வீட்டில் அமைதியை உறுதிப்படுத்தும்.
சனிக்கிழமை- நீண்ட முயற்சியின் எதிரொலிதான் இந்த சனிதக்கிழமை! இந்த நாளில் தங்கம் வாங்கும் போது பச்சை பயிறையும் சேர்த்து வாங்க வேண்டும். அப்போது அதை அணிந்தவர்களுக்கு தீமைகள் விலகி, சாதகமான சக்தியை கொடுக்கும்.
ஞாயிற்றுக்கிழமை-சூரிய பகவானின் நாளாகும். அதிகாரம், புகழ், சக்தி ஆகியவையின் தொடர்புடையது. இந்த நாளில் தங்கம் வாங்கும்போது துளசி, கற்பூரம், லவங்கம் போன்றவற்றையும் சேர்த்து வாங்கினால், நன்மை அதிகரிக்கும். இது நற்பயனை கொடுக்கும். உயர்வு நிலை மற்றும் வம்சம் பாக்கியம் கொடுக்கும்.
தங்கத்தை எங்கு வைக்க வேண்டும்
நீங்கள் வாங்கும் தங்கத்தை கண்ணாடி பெட்டியில் வைத்திருக்க வேண்டும். அதனுடன் அந்த நாளுக்குரிய பொருளையும் வைத்திருக்க வேண்டும். அது போல் தங்கம் வாங்க ராகு காலம், எமகண்டம் இல்லாத நேரத்திலும் அஷ்டமி, நவமி இல்லாத நாளிலும் போய் வாங்குகிறோம்.
நல்ல நேரம் எது
நல்ல நேரத்தை கருத்தில் கொண்டு வாங்குவதை போல் சுக்கிர ஓரையில் தங்கம் வாங்கலாம். அதை காலண்டரில் அல்லது கூகுளில் பார்த்தால் தெரியும். சுக்கிர ஓரை உங்களுக்கு தோதுபடாவிட்டால் குரு ஓரையில் போய் வாங்கலாம். இப்படியாக தங்கத்தை ஐதீகத்துடன் வாங்கி பலனடையுங்கள்.
மளிகை கடையில் இல்லை
தங்கத்தை என்ன மளிகை கடையிலா வாங்குகிறோம் என கேட்காதீர்கள். இதன் பொருள் என்னவெனில் ஒன்று நீங்கள் வாங்கும் நாளுக்குரிய பொருளை கடைக்கு சென்று வாங்கிக் கொண்டு அதை பையில் வைத்துக் கொண்டு நகைக் கடைக்கு செல்லுங்கள்.
பூஜை அறை
இல்லாவிட்டால் பாதுகாப்பாக உணர்கிறீர்கள் என்றால் தங்கம் வாங்கிக் கொண்டு அந்த நகையுடனேயே மளிகைக் கடையில் அந்த நாளுக்குரிய பொருளை வாங்கலாம். அதுவும் இல்லாவிட்டால் தங்கத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு பிறகு மளிகை கடைக்கு போய் அந்த நாளுக்குரிய பொருளை வாங்கலாம்.
-
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
Gold rate today: காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications