பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் தலை சீவக் கூடாது! ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் தலை சீவுவதோ, தலை முடியை விரித்து வைத்திருப்பதோ கூடாது என தாய்மார்கள் கூறுவது ஏன் தெரியுமா?

இதுகுறித்து தமிழ் குவோராவில் சாமுவேல் ஜோசப் ராஜ் என்பவர் கூறியிருப்பதாவது: நமது தமிழ் சமூகத்தில் குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகம் கூறப்படும் ஒன்று சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பெண்கள் தலை சீவக்கூடாது என்பதாகும்.

spirtuality hair

இதனை பழக்கம் என்று சொல்லலாம் அல்லது நம்பிக்கை என்று கூட சொல்லலாம். இன்றும் இந்த பழக்கம் பெரும்பாலான கிராமங்களில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதனை மூடநம்பிக்கை என்று கூறுவார்கள். ஆனால் அதற்கு பின்னால் பல எதார்த்த உண்மைகள் உள்ளது.

இந்த பதிவில் மாலை நேரத்தில் ஏன் தலைசீவ கூடாது என்று சொல்கிறார்கள் என்பதற்கான பதிலை பார்க்கலாம்.

நமது சமூகத்தில் பெரும்பாலும் நிலவும் ஒரு மூடநம்பிக்கை முடியை பற்றியதாகும். அம்மாக்கள் எப்பொழுதும் சூரியன் அஸ்தமித்தவுடன் முடியை சீவக்கூடாது என்று தங்கள் மகள்களுக்கு கூறுவார்கள். மாலை நேரத்தில் முடியை விரித்து போடவும் கூடாது என்று கூறுவார்கள்.

இது மட்டுமின்றி முடி தொடர்பான பல மூடநம்பிக்கைகள் நமது சமூகத்தில் நிலவிதான் வருகிறது.

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு முடியை விரித்து போட கூடாது என்று அனைவரும் கேள்விப்பட்டிருப்போம்.

இதற்கான காரணமாக சொல்லப்படுவது, எதிர்மறை சக்திகள் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகுதான் அதிகம் வெளியே வருமாம். இந்த சமயத்தில் அவை மிகவும் வலிமை வாய்ந்ததாக இருக்கும், அழகான மற்றும் நீண்ட முடி உள்ள பெண்கள் அவற்றை எளிதில் கவர்வார்கள். இதனால் அந்த பெண்கள் அந்த எதிர்மறை சக்திகளால் பாதிப்பு ஏற்படக்கூடும். இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.

இரவு நேரங்களில் தலைவாரக் கூடாது என்ற கூற்றின் பின்னால் எந்த அறிவியல் பூர்வமான காரணங்களும் இருப்பதாக தெரியவில்லை. என்னால் யூகிக்க முடிந்ததைக் கூறுகிறேன்.

முடி தவறி ஏதாவது உணவுப்பண்டங்களிலோ அல்லது வேறு எங்காவது விழுந்து விடக்கூடாதென கூறியிருக்கலாம்.
இரவு நேரங்களில் தலை வாரும்பொழுது தலையில் பேன் இருந்தால் அது எங்காவது விழ வாய்ப்புள்ளது. அதனாலும் இப்படியான கூற்று எழுந்திருக்கலாம்.

பெரும்பாலும் தலைவாருதல் குளித்த பின்னரே நடைபெறும். எனவே இரவு நேரங்களில் குளிக்கக் கூடாது என்பதற்காக கூறியிருக்கலாம்.(எனது கற்பனையே)
அந்த காலங்களில் இரவு நேரங்களில் திரியுடன் கூடிய விளக்குகள் இருந்திருக்கும். எனவே கவனமாக இரவில் தலை வார இயலாது என நினைத்திருக்கலாம்.
இவற்றில் எது உண்மையென தெரியாது. இவை யாவும் கற்பனையே. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+