திருவண்ணாமலை கார்த்திகை தீபம்! வீட்டிலிருந்தே நெய் காணிக்கை செலுத்த விருப்பமா? இதோ லிங்கை தொடுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு நெய் காணிக்கை செலுத்த விருப்பமுள்ளவர்கள் வீட்டிலிருந்து கொண்டே நெய் காணிக்கை செலுத்த வேண்டும் என்றால் இணையதளத்திலேயே பணம் செலுத்தலாம்.

கார்த்திகை தீபம் வரும் 13 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வைபவத்தையொட்டி, திருவண்ணாமலையில் மலை மீது தீபம் ஏற்றப்படும். பெரிய கொப்பரையில் வேட்டிகளை திரியாக கொண்டு டன் கணக்கில் நெய் ஊற்றி இந்த விளக்கானது ஏற்றப்படும்.

karthigai deepam 2024 tiruvannamalai 2024

இது சுமார் 20 கி.மீ. தூரத்தை சுற்றியுள்ளவர்களுக்கு நன்கு தெரியும். அது போல் இந்த தீபம் எத்தனை மழை, காற்று அடித்தாலும் ஈசனின் அருளால் 11 நாட்களுக்கு எரியும். இந்த கார்த்திகை தீபத்தையொட்டி வீடுகளிலும் மக்கள் விளக்கேற்றி வழிபடுவார்கள். சிலர் பொரி உருண்டை செய்து கடவுளுக்கு நெய்வேத்யம் செய்வதுண்டு.

இந்த திருகார்த்திகை தீபம் ஏற்றும் வைபவத்தை இத்தனை பேர் மலை மீது ஏறி சென்று பார்வையிட அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக முன்கூட்டியே பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். அந்த வகையில் இந்த முறை பெஞ்சல் புயலால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தீபம் ஏற்றும் மலை பாதை மிகவும் மோசமாகியுள்ளது. அங்கு மண்ணின் ஸ்திரத்தன்மையும் கேள்விக்குள்ளாகியுள்ளது. இதனால் இந்த முறை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக புவியியல் ஆய்வு குழுவினர் நேற்றைய தினம் ஆய்வு செய்திருந்தனர். இவர்கள் அளிக்கும் அறிக்கையை வைத்துதான் மலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது தெரியவரும்.

இதுகுறித்து கார்த்திகை தீபம் 2024 என்ற எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா வீட்டிலிருந்தே நெய் காணிக்கை செலுத்த எளிய வழி....முழு விவரம் இதோ!

யானை வளாகம் முன்பு சிறப்பு கவுண்டர்கள்:
அந்த வகையில் இந்த ஆண்டு 3500 கிலோ நெய் தேவைப்படும் நிலையில் ஆயிரம் மீட்டர் திரி காடா துணி பயன்படுத்தப்படுகிறது. கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக கார்த்திகை தீப திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்பட்டு வரும் நிலையில் மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள யானை வளாகம் முன்பு சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.

நெய் காணிக்கை: மேலும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் உள்ள பக்தர்கள் நெய் காணிக்கையாக செலுத்த பணம் செலுத்தி வருகின்றனர். பணம் செலுத்தும் பக்தர்களுக்கு அதற்கான ரசீதும் உடனுக்குடன் அனுப்பப்படுகிறது. கோவில் நிர்வாகம் சார்பாக நெய் ஏற்பாடு செய்யப்படும் நிலையில் பக்தர்கள் அதற்கான பணத்தை ஆன்லைன் மூலமும் நேரடியாகவும் செலுத்தி வருகின்றனர்.

அருணாச்சலேஸ்வரர் நெய் காணிக்கை என்ற இணையதளம்: ஒரு கிலோ நெய் காணிக்கைக்கு 250 ரூபாயும், அரை கிலோ நெய் காணிக்கைக்கு 150 ரூபாயும், கால் கிலோ நெய் காணிக்கைக்கு 80 ரூபாயும் செலுத்தலாம். வெளியூர் பக்தர்கள் ஆன்லைனில் நெல் காணிக்கை செலுத்தலாம் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் நெய் காணிக்கை என்ற இணையதளத்தில் சென்று தங்களுக்கு விருப்பமான நெய் கணக்கியை செலுத்தலாம் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

https://annamalaiyar.hrce.tn.gov.in/ticketing/service_edonation.php?tid=20343&scode=21&sscode=1&group_id=1&fees_slno=23974&group_id=1&action=P

ஆருத்ரா தரிசனம் முடிந்து பிரசாதம்: மேலும் காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு தீப திருவிழாவை தொடர்ந்து ஆருத்ரா தரிசனம் முடிந்து மை பிரசாதம் வழங்கப்படும். கோவிலில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுன்ட்டரில் பணம் செலுத்தும் பக்தர்கள் நேரடியாக பிரசாதத்தை பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைனில் பணம் செலுத்தும் பக்தர்கள் ஆன்லைனில் முகவரி பதிவிடும் நிலையில் தபால் மூலம் பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+