தவளைக்கு கல்யாணமா? கழுதைக்கு ஊர்வலமா?ஆல மரம், அரச மரத்துக்கு மெகா வழிபாடு.. மழை வருமா? என்ன காரணம்
சென்னை: அரச மரத்திற்கும், ஆல மரத்துக்கும் திருமணம் செய்து வைத்தால் மழை வருமா? தவளை, கழுதை போன்றவற்றிற்கு திருமணம் செய்து வைப்பதால் மழை கிடைக்குமா?
2 நாட்களுக்கு முன்புகூட மேற்கு வங்க கிராம் ஒன்றில் ஆலமரத்துக்கும், அரச மரத்துக்கும் திருமணம் நடந்தது. இரண்டு மரங்களுக்கும் மணமகள், மணமகன் போல அலங்காரம் செய்யப்பட்டது.

திருமணம்: ஆண்கள், பெண்கள் குழந்தைகள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட சுமார் 3000-க்கும் மேற்பட்டோர், வழக்கமாக கல்யாணத்துக்கு செல்வது போலவே, இந்த திருமணத்துக்கு பட்டுப்புடவை உள்ளிட்ட ஆடைகளை அணிந்து வந்தார்கள். அதைவிட முக்கியமாக, சிலபேர் தொலைதூரத்திலிருந்து பஸ்ஸில் கிளம்பி வந்து, இந்த கல்யாணத்தில் பங்கேற்றனர்.
கல்யாணத்தில் எல்லாருக்கும் அரிசி மற்றும் பருப்பு கஞ்சி (கிச்சூரி அல்லது கிச்சடி என்று அழைக்கப்படுகிறது) மற்றும் தின்பண்டங்கள் பரிமாறப்பட்டன. இதுபோலவே, கடந்த வாரம் மத்திய பிரதேசத்தின் மண்ட்சௌர் மாவட்டத்திலும், கழுதைக்கு கழுதை திருமணம் செய்து வைக்கப்பட்டது..
குலோப் ஜாமூன்: இதற்காக கழுதைகளையும் மணமக்கள் போல அலங்காரம் செய்து கிராம மக்கள் அழைத்து வந்திருந்தனர்.. கல்யாணம் சிறப்பாக நடந்ததால், 3 கிலோ வரையில் குலாப் ஜாமுன் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
அரச மரத்தை ஆணாக பாவித்து அதற்கு புது வேட்டியும், வேப்ப மரத்துக்கு பட்டுப்புடவையும் சுற்றி திருமணம் நடத்தப்படும்.. அந்தந்த வீட்டில் உரிமையாளரே வேப்ப மரத்துக்கு பொட்டு வைத்து தாலி கட்டிவிடுவார்.. இதில் கலந்து கொண்டவர்கள் மொய் செய்வார்கள்.. கிளம்பும்போது அவர்களுக்கு வளையல்களும் பூவும் வைத்து தரப்படும்.
மழை பொழிவு: ஒவ்வொரு வருடமும் மழை வேண்டி இதுபோன்ற சடங்குகள் நடந்து கொண்டிருக்கின்றன.. பயிர் நடவு செய்துவிட்டு, விலங்குகளுக்கு, அல்லது மரங்களுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பது கிராம மக்களின் நூற்றாண்டு நம்பிக்கையாக உள்ளது. அதற்கேற்றவாறு பயிர் நடவு செய்த ஒரு வாரத்திலேயே மழையும் பெய்துவிடுகிறதாம்..
இதற்கு பின்னால் ஆன்மீக காரணம் ஒன்று உண்டு.. அரச மரமும் வேப்ப மரமும் இணைந்திருப்பது, சிவசக்தியின் வெளிப்பாடு என்கிறார்கள்.. அரசமரம் சிவபெருமான்.. வேப்ப மரம் தேவியின் சக்தி.. தனக்கு அருகில் வேறெந்த மரத்தையும் வளரவிடாத அரசமரம், வேப்பமரத்தினை மட்டும் தனக்குள்ளேயே வளர அனுமதிப்பது அதிசயமாக கருதப்படுகிறது. எப்போதுமே அரசமரத்தையும் வேப்ப மரத்தையும் ஒன்றாக யாரும் நட்டு வைப்பதில்லை. இவை தானாகவே ஒன்றிணைந்து வளருகின்றன என்பது அறிவியலாகும்.
மகா விஷ்ணு: மழை வேண்டி, தவளைகளுக்கும் திருமணம் நடத்தப்படுகிறது.. நிலம், நீர்வாழ உயிரினங்களான மீன், ஆமை போன்றவைகள் மகாவிஷ்ணுவின் அவதாரமாக உள்ளது.. அந்தவரிசையில் தவளையும் நீரிலும், நிலத்திலும் வாழும் உயிரினமாக கருதப்படுவதால், இப்படியொரு முறை ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
தவளை 2 முறை கத்தினால், இந்த திருமணம் செய்யப்படுமாம்.. மழைப்பெருக்கம் அதிகமாக இருக்கும்போதுதான் தவளையின் இனப்பெருக்கமும் அதிகமாகும்.. தவளைக்கு திருமணம் செய்து வைக்க இதுவும் ஒருகாரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.. ஆனால், தவளை, கழுதை போன்றவற்றிற்கு திருமணம் செய்வது குறித்த அறிவியல் பூர்வமாக காரணம் எதுவும் தெரியவில்லை.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications