தானமாக வெள்ளி தந்தால் என்னாகும் தெரியுமா? இந்த ராசிக்காரர்கள் குடையை தானம் செய்தால் சூப்பர் பலன்கள்
சென்னை: தானம் கொடுக்கும் வழக்கமானது ஆன்மீகத்தில் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால், எத்தனையோ சொல்ல முடியாத சிக்கல்களில், கஷ்டங்களில் பலரும் சிக்கியிருப்பார்கள்.. கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையிருந்தும், தீராத நோய் பாதிப்புகளிலும் மீள முடியாமல் இருக்கும்போது, சில பொருட்களை தானம் செய்தால், உடனடி பலன் கிடைக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அந்தவகையில் என்னென்ன பொருட்களை தானம் வழங்கினால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
ஒருவர் தானம் வழங்கினால், அவரது குடும்பத்திலுள்ள தரித்திரங்கள் விலகி நன்மை பிறக்கும் என்பது நம்பிக்கையாகும். தானம் தருவதால், அவரது கர்ம வினைகள் தீருவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. . தானம் செய்வதால், தீய வினைகள் நீங்கி சுபிட்சமான வாழ்வு கிட்டும்...

தானம் செய்வதால் நன்மைகள்
ஆனால், தானம் அளிக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கேற்ற பலன்கள் உண்டு. உதாரணத்துக்கு மஞ்சள் தானம் செய்தால் மங்களம் உண்டாகும். அன்னதானம் செய்தால், சகல பாக்கியங்களும் உண்டாகும்... அரிசி தானம் செய்வதால் பாவங்கள் தொலையும். ஆடை தானம் செய்வதால் ஆயுள் விருத்தியாகும். எண்ணெய் தானம் செய்வதால் கர்ம வினைகள் நீங்கி கடன்கள் குறையும் என்பார்கள்.
காலணி தானம் செய்வதால் பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும்.. தேன் தானம் செய்வதால் புத்திர பாக்கியம் ஏற்படுவதுடன், இனிய குரல் வரும்... நெய் தானம் செய்வதால் வீடுபேறு அடையலாம்.. பால் தானம் செய்வதால் சௌபாக்கியம் கிட்டும்.. வெள்ளியை தானம் செய்தால் பித்ருகள் ஆசிகிடைக்கும். தங்கத்தை தானம் செய்தால், புண்ணியம் கிடைக்கும். தேங்காய் தானம் செய்தால் காரியம் வெற்றி பெறும்.
தானம் செய்ய வேண்டிய பொருட்கள்
இதில் பசுவை தானம் செய்ய வேண்டியிருந்தால், அநத் பசு கன்றுடன் கூடியதாக இருக்க வேண்டும். சித்திரை மாதத்தில் வளர்பிறை அல்லது தேய்பிறையில் வரும் சதுர்த்தியன்று விரதமிருந்து பசுவை தானம் செய்ததால், இறைவனின் பூரண ஆசி கிட்டி, எம பயம் விலகும் என்பார்கள்.
அதேபோல குடை தானம் செய்தால், தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும். குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.. சமுதாயத்தில் நன்மதிப்பு கூடும்.. தவறான வழியில் சேர்த்த செல்வத்தால் ஏற்படும் பாவம் விலகும்.. மேலும், குடையை தானமாக வழங்கினால் வருண உலகத்தில் நம்முடைய ஆன்மா 1000 வருடங்கள் வாழும் என கருட புராணம் கூறுகிறது.
அனைவருமே குடை தானம் செய்யலாம் என்றாலும், மேஷம், தனுசு ராசிக்காரர்கள் குடைதானம் செய்யும்போது கூடுதல் பலன் கிடைக்கும்.
எந்தெந்த கிழமைகளில் தானம் செய்யலாம்
அதேபோல எந்தெந்த கிழமைகளில் என்னென்ன தானம் செய்யலாம் என்றும் ஆன்மீகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.. அந்தவகையில், ஞாயிற்றுக்கிழமை அரிசி, வெல்லம், பருப்பு உள்ளிட்ட உணவு பொருளையும், மஞ்சள் நிற ஆடைகளையும் தானம் செய்தால், புகழ், கௌரவம் மற்றும் ஆரோக்கியம் கிடைக்குமாம்.
திங்கள்கிழமை, அரிசி, பால், தயிர், வெண்ணெய், வெள்ளை உடை, வெள்ளி, முத்துக்கள் போன்றவற்றை தானம் செய்வதால் மனம் அமைதி பெறும். செவ்வாய்க்கிழமை நிலம், பருப்பு, நிலக்கடலை, சிவப்பு நிற பழம், ஆடைகளை தானம் செய்தால், உடல், மனதில் சக்தி பிறக்கும், தைரியம் கிடைக்கும். புதன்கிழமைகளில் பச்சைப் பயறு, பச்சை நிற ஆடைகளை தானம் செய்தால் வியாபாரம் விருத்தியாகும்.
வியாழக்கிழமைகளில் மஞ்சள் துணிகள், மஞ்சள், வளையல் போன்றவற்றை தானம் செய்தால், அறிவும், அதிர்ஷ்டமும் கிடைக்கும்.. வெள்ளிக்கிழமையில், அரிசி, பால், தயிர், வெள்ளை ஆடைகள், சர்க்கரை போன்றவற்றை தானம் செய்தால் செல்வம், அதிர்ஷ்டம், மகிழ்ச்சி பெருகும். சனிக்கிழமைகளில், எள், கடுகு, உளுந்து, கருப்பு ஆடைகள், இரும்புப் பொருட்களை தானம் செய்தால், சனி பகவானின் உக்கிரப் பார்வையில் இருந்து நிவாரணம் பெற முடியும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications