தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்யாதீர்கள்.. பில்லி, சூனியம், செய்வினை .. பாதிப்பு நீங்க பரிகாரம்
சென்னை: செய்வினை செய்பவர்கள் ஒருவரின் தலைமுடியை வைத்தும் காலடி மண்ணை எடுத்தும் கெடுதல் செய்வார்கள். எனவேதான் நம்முடைய முன்னோர்கள் நகத்தை வெட்டியும், தலைமுடியை சீவி எடுத்து அடுத்தவர்கள் பார்க்கும் வகையில் வெளியில் வீசி எரியக்கூடாது என்று சொல்வார்கள்.
நம் வீட்டில் செய்வினை இருக்கிறது என்பதை சில அறிகுறிகள் உணர்த்தும் பாதிப்பு நீங்க என்ன பரிகாரம் செய்வது என்று பார்க்கலாம்.
நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் பார்த்து சிலருக்கு பொறாமை ஏற்படும். குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தால் சிலருக்கு பிடிக்காது. குடும்ப ஒற்றுமையை குலைக்கவும், உடல் ஆரோக்கியத்தை கெடுக்கவும் சிலர் முயற்சி செய்வார்கள். அதற்கு அவர்கள் தேர்வு செய்யும் வழி செய்வினை, பில்லி, சூனியம். சமீபத்தில் ஒரு டிவி சீரியலில் கூட திருமணத்தை நிறுத்த கோவிலில் பூஜை செய்வார்கள்.

சிலர் நடந்து சென்று கொண்டிருக்கும் போதே காலில் கல் தடுக்கி ரத்தம் வரும். பெண்களுக்கு காய்கறி வெட்டும் போதோ அல்லது சாதாரணமாக வேலை செய்து கொண்டிருக்கும் போது காயங்கள் ஏற்படும். நிலை வாசல் கதவில் தலை இடிக்கும். வீட்டின் குடும்பத் தலைவருக்கு கட்டை விரல் அடிக்கடி காயம் ஏற்படும். இப்படி நடந்தால் உங்கள் வீட்டில் உள்ள குல தெய்வம் உங்களுக்கு ஏதோ ஒரு விஷயத்தை உணர்த்துகிறது என்று அர்த்தம். காரணம் குல தெய்வம் நம்முடைய நிலை வாசலில் வசிக்கிறது என்பது ஐதீகம்.
நமக்கு யாரும் செய்வினை செய்து விடக்கூடாது வீட்டிற்குள் எந்த தீய சக்தியும் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக குல தெய்வம் நம்முடைய வீட்டினை காத்துக்கொண்டிருக்கிறது. மேலும் சில அறிகுறிகள் செய்வினை இருக்கிறது என்பதை நமக்கு உணர்த்தும். சிலருக்கு மாடுகள் கனவுகளில் வரும்
நம்முடைய வீட்டிற்குள் காளை மாடு நுழைவது போல கனவு வந்தால் ஏதோ கெட்ட சக்தி வீட்டிற்குள் இருக்கிறது என்பதை உணர்த்துகிறதாம்.
பல்லி, காகம் இரண்டுமே இறை சக்தி மிக்கவை. பல்லிகளின் சத்தம் நல்லதை சொல்லும் என்று முன்னோர்கள் நம்புவார்கள். நம் வீட்டில் பல்லி நடமாட்டமே இல்லை என்றால் அந்த வீட்டில் கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியின் நடமாட்டம் இருக்கிறது என்று அர்த்தம். அதே போல பல்லிகள் நம் வீட்டில் ஏதோ ஒரு இடத்தில் இறந்து கிடந்தால் அது நம்மை காப்பாற்றுவதற்காக தனது உயிரை தியாகம் செய்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். அதேபோல, வீட்டுப் பக்கம் காகமே வராமல் இருப்பதும் சில அபசகுணம் எனக் கூறப்படுகிறது. சாம்பிராணி வாசமற்றுப் போவதும் நம் வீட்டில் ஏதோ தீய சக்தியின் ஆதிக்கம் இருப்பதற்கு அறிகுறியாக கருதப்படுகிறது.
நம்முடைய வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் திடீரென நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும். ஆடு, மாடு, கோழி, நாய், பூனை போன்றவைகளை வளர்க்கும் போது நமக்கு இருக்கும் செய்வினைக் கோளாறுகள், வளர்ப்புப் பிராணிகளை தாக்கும் என்ற நம்பிக்கை ஆன்மீகத்தில் உண்டு. வளர்ப்புப் பிராணி உயிரிழப்பது நமது மனதிற்கு கஷ்டத்தை தரக்கூடியதுதான் என்றாலும் நம்மை காக்க அந்த வாயில்லாத ஜீவன்கள் உயிரை தியாகம் செய்திருக்கிறது என்று அர்த்தமாகும்.
நம்முடைய வீட்டுத் தோட்டத்தில் நன்றாக செழித்து வளர்ந்த செடிகள் காய்ந்து போகும். அதுவும் கூட செய்வினை கோளாறு இருப்பதற்கான அறிகுறிகள் என்று சொல்வார்கள். குல தெய்வம் கோவிலுக்குச் செல்வது தாமதமாவதற்கு செய்வினைக் கோளாறு காரணமாக இருக்கலாம் என ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ஒருவருக்கு ஏவல், பில்லி, சூனியம், செய்வினை செய்ய வேண்டும் நினைப்பவர்கள் அவர்களின் காலடி மண்ணை எடுப்பார்கள். அதே போல தலைமுடி, நகங்களை எடுப்பார்கள். எனவேதான் செருப்பு போடாமல் வெளியே நடக்க வேண்டாம், தலைமுடி, நகங்களை வெட்டி யாருக்கும் தெரியாத வகையில் கீழே போடக்கூடாது என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.
செய்வினை கோளாறு இருப்பவர்கள் நிம்மதியாக இரவில் தூங்க முடியாது. நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு திடீரென கடும் உடல் சோர்வு ஏற்படும். முகம் பொலிவிழந்து பசி ஏற்படாமல் உடல் நலம் குன்றிப்போகும். சிலருக்கு கை, கால்களில் அரிப்பு அதனால் புண்கள் ஏற்படும். சிலருக்கு கைக்கால் வராமலும் போகும். மாத்திரை, மருந்துகள் எடுத்தாலும் முன்னேற்றம் இருக்காது. வீட்டின் மீது கல் விழுவது போன்ற சப்தம் கேட்கும். சாப்பாட்டில் அடிக்கடி முடி, சின்னச் சின்ன கற்கள் தென்படும். இவ்வாறான அறிகுறிகள் கெட்ட சக்தியின் ஆதிக்கம் இருப்பதை உணர்த்துகிறது.
நமக்கு செய்வினை கோளாறு இருப்பதாக உணர்ந்தால் நாம் நம்முடைய குல தெய்வத்திடம் சரணடைய வேண்டும். இஷ்ட தெய்வத்தையும், குல தெய்வத்தையும் மனமுருகி வேண்டினால் பாதிப்புகள் குறையும். மாரியம்மன், காளியம்மன் கோவிலில் எலுமிச்சை வைத்து அபிஷேகம் செய்து அதனை வீட்டு நிலை வாசலுக்கு மேலே கட்டித் தொங்கவிடலாம். இதன்மூலம், தீய சக்திகள் வீட்டை விட்டு வெளியேறிவிடும். செய்தார்க்கு செய்த வினை.. எய்தார்க்கு எய்த வினை.. வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று சொல்வார்கள். நாம் ஒருவருக்கு செய்வினை செய்தால் அது நமக்கே பாதிப்பை ஏற்படுத்தும் எனவே ஒருவர் கெட்டுப்போக வேண்டும் என்று நினைத்து செய்வினை செய்பவர்களுக்கு அது பூமராங் போல திரும்பி விடும் கவனம். நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications