கனவில் கோயில் வந்தால் என்ன செய்யணும்? இந்த கனவு வந்தால் அதிர்ஷ்டம் அடிக்க போகுதுன்னு அர்த்தமாம்! செம
சென்னை: கனவுகளின் பலன்கள் குறித்து நமது பழங்கால சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. கனவு சாஸ்திரம் என்பது நாம் காணும் கனவுகளின் அர்த்தங்களை விளக்குகிறது. ஒவ்வொரு கனவுக்கும் ஒரு பலன் உண்டு என்றும், எந்த நேரத்தில் கனவு கண்டால் என்ன பலன் கிடைக்கும் என்றும் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன. அவற்றை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
நள்ளிரவு 1 மணிக்கு கனவு கண்டால், அதன் பலன் கிடைக்க ஒரு வருடம் ஆகும். 2 மணிக்கு கனவு கண்டால், மூன்று மாதங்களில் பலன் தெரியும். அதிகாலையில் காணும் கனவு உடனே பலிக்கும் என்று கூறப்படுகிறது. கனவில் எலுமிச்சம் பழம் கண்டால் நல்லது. அதுவும் ஒருவர் நமக்கு தருவதாக கனவு கண்டால், அதைவிட நல்லது.
கனவு சாஸ்திரத்தில், நாம் அன்றாட வாழ்வில் காணும் காட்சிகளே கனவாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லப்படுகிறது.
உதாரணமாக, திருமணமாகாதவர்கள் பாம்பு கடித்து இரத்தம் வருவது போல் கனவு கண்டால், விரைவில் திருமணம் நடக்கும். திருமணக் கோலத்தில் கனவு கண்டால், சமூகத்தில் அந்தஸ்து கூடப்போகிறது என்று அர்த்தம்.

வானம், நட்சத்திரம் கனவில் வந்தால்
வானத்தில் நட்சத்திரங்கள் கூட்டமாக இருப்பது போல் கனவு கண்டால், வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வானவில் கனவில் வந்தால், செல்வாக்கு அதிகரிப்பதுடன், பதவியும் கிடைக்கும் என்கிறார்கள்.
நதி, குளத்தில் நீந்துவது போல கனவு வந்தால், அது ஒரு நல்ல செய்தியாக கருதப்படுகிறது. கனவில் மழை வந்தால், செல்வம் கொழிக்கும்.
தாமரை பூக்களை கனவில் கண்டால், உங்கள் துன்பங்கள் விரைவில் தீரப்போகிறது என்று அர்த்தம். யானையை கனவில் கண்டால், அரசாங்க வேலை கிடைக்கும். அதே யானை உங்களுக்கு மாலை அணிவிப்பது போல் கனவு வந்தால், பதவி உயர்வு கிடைக்கும்.
கோயில்கள் கனவில் வந்தால் என்ன பலன்?
கோயில்களைப் பற்றிய கனவுகளும் சாஸ்திரத்தில் துல்லியமாக சொல்லப்பட்டுள்ளன. கனவில் கோயில் வந்தால், அந்தக் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்று பொருள். ஒருவேளை நீங்கள் ஏற்கனவே ஒரு கோரிக்கை வைத்து வேண்டிக்கொண்டிருந்தால், அந்த பிரார்த்தனை நிலுவையில் இருப்பதால், அதை நினைவூட்டுவதற்காக கனவில் அந்த கோவில் தோன்றுகிறதாம். எனவே, நிலுவையில் உள்ள பிரார்த்தனையை அல்லது நேர்த்திக் கடனை உடனடியாக நிறைவேற்றி விட வேண்டும்.
கோயில் பற்றிய கனவுகள்
பெரும்பாலும் ஆழ்மனதில் உள்ள எண்ணங்களே உறங்கும் போது கனவில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பார்கள். கனவில் வந்த கோவிலுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு, அது என்ன தொடர்பு என்பதை குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். முடிந்தால், அந்தக் கோயிலுக்கு திருப்பணிகளையும் செய்யலாம்.
கோயில் நடை திறந்து, அதில் நீங்கள் செல்வது போல கனவு கண்டால், உங்கள் ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெறும்.
கோயில் கருவறைக்கு சென்று இறைவனுக்கு மாலை அணிவிப்பது போல கனவு வந்தால், பண வரவு விரைவில் வரப்போகிறது என்று பொருள். இறைவனை கனவில் கண்டால், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும், கல்யாணமாகாதவர்களுக்கு சுப செய்தி கைகூடும். கோவில் கோபுரம் கனவில் வந்தால், கோபுரம் போல உங்கள் வாழ்க்கையும் உயர்ந்து செல்லும்.
கோவில் தெப்பக்குளம் கனவில் வந்தால்
கோவிலின் தெப்பக்குளம் கனவில் வந்தால், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் வரும். பிள்ளையார் சிலை அல்லது பிள்ளையாரை வழிபடுவது போல கனவு வந்தால், அது மிகவும் நல்லது. விநாயகர் குதிரையில் வருவது போல் கனவு வந்தால், மங்களகரமான நிகழ்வு நடக்கப் போகிறது என்று அர்த்தம். இப்படி கனவு வந்தால், யாரிடமும் சொல்லக் கூடாது என்று கூறப்படுகிறது.
ஆனால், கோயிலுக்குள் செல்ல முடியாத அளவுக்கு கூட்டம் நெரிசல் இருப்பது போல கனவு கண்டால், அல்லது காளி தீபம் கனவில் வந்தாலோ, குடும்பத்திற்கு ஏதோ சிக்கல் வரப்போகிறது என்று பொருள்.
ஆக, கனவுகள் வெறும் கற்பனைகள் மட்டுமல்ல, அவை நம் வாழ்க்கையில் நடக்கவிருக்கும் சம்பவங்களின் முன்னோடியாகவும் இருக்கலாம் என்பதை கனவு சாஸ்திரம் உணர்த்துகிறது.
-
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications