கனவில் சாப்பிடும் மாமிச உணவு... அச்சுறுத்தும் எலும்பு துண்டுகள்.. நல்லதா? கெட்டதா?
சென்னை: நம்முடைய கனவுகள் சில நேரங்களில் அர்த்தம் உள்ளதாக இருக்கும். சில நேரங்களில் அந்த கனவுகளுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாத அளவிற்கு குழப்பமாக வரும். அடிக்கடி கனவில் சாப்பிடுவது போலவோ, மாமிச உணவு சாப்பிடுவது போலவோ கனவு வரும். நமக்கு மாமிச உணவு கனவில் வந்தாலோ, எலும்புகள் அடிக்கடி கனவில் வந்தாலோ என்ன பலன் என்று பார்க்கலாம்.
ஆழ்ந்த உறக்கத்தில் காணும் கனவு பலிக்கும் என்று சொல்வார்கள். அதுவும் அதிகாலை நேரத்தில் காணும் கனவு நிச்சயம் பலிக்கும் என்று கனவு சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. சில நேரங்களில் கனவில் ரத்தம் வருவது போல இருக்கும். நோயினால் பாதிக்கப்பட்டது போல கனவு காண்பார்கள். அப்படி வரும் கனவுகள் சில நேரங்களில் ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர்த்துகிறது. சிறு குழந்தைகள் கனவில் வந்தால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கப்போகிறது என்று அர்த்தம்.

மலை ஏறுவது போல கனவில் கண்டாலோ, படிக்கட்டுகள் ஏறுவது போலவோ, லிப்ட்டில் ஏறுவது போல கனவு கண்டாலோ நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய ஏற்றம் வரப்போகிறது என்று அர்த்தமாகும். கோவில், தேரோட்டம் கனவில் வந்தால் உறவினர்கள வீட்டில் இருந்து ஏதோ கெட்ட செய்தி வரப்போகிறது என்று அர்த்தம்.
நீர் ஊற்று கனவில் வந்தால், வாழ்க்கையில் அவ்வளவு எளிதாக துன்பம் ஏற்படாது என்று பொருள். விவசாயம் செய்வது போல கனவு வந்தால், கனவு கண்டவரின் வாழ்க்கை வளமாக இருக்கும் என்று அர்த்தம். உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு வந்தால் பணம், பாராட்டு வரப்போவதை உணர்த்துகிறது. முட்டை சாப்பிடுவது போல கனவு வந்தால் அது நல்ல கனவு அல்ல. ஏதோ ஒரு விதத்தில் வறுமை ஏற்படப்போகிறது என்பதை உணர்த்துகிறது.
தனியாக சாப்பிடுவது போல கனவு வந்தால் தொழிலில் நஷ்டங்கள் ஏற்படலாம் என்று அர்த்தம். விருந்து சாப்பிடுவது போல கனவு கண்டால், உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். திருமணம் ஆகாதவர்கள் விருந்து சாப்பிடுவது போல கனவு வந்தால், வெகு விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் ஆனவர்கள், விருந்து சாப்பிடுவது போல கனவு வந்தால், கூடிய விரைவில் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்று அர்த்தம். சொந்த தொழில் செய்பவர்கள், அதில் பிரச்சனைகள் ஏற்படுவது போல கனவு கண்டால், தொழிலில் புதிய சிக்கல்கள் உருவாகலாம் என்று அர்த்தம்.
தற்கொலை செய்வது போல கனவு வந்தால், ஆபத்துகள் விலகி, நன்மை பிறக்கும் என்று அர்த்தம். நண்பன் இறந்தது போல கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும் என்று அர்த்தம். எண்ணெயை தேய்த்து குளிப்பது போல கனவு கண்டால் கனவு காண்பவர் விரைவில் நோயால் பாதிக்கக்பட போகிறார் என்று அர்த்தம்.
மாமிசம் சாப்பிடுவது போல கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் தேடி வரும். கனவில் எலும்பைக் கண்டால் மிகவும் நல்லது. மனிதர்களின் எலும்பை கனவில் கண்டால், முன்னோர்கள் சொத்து அவருக்கு கிடைக்கும் என்று அர்த்தம். எதிரிகள் கனவில் வந்தால், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பேனா கனவில் வந்தால், கடிதம் வாயிலாக பொருள் வரவு ஏற்படும் என்று பொருள். எழுதுவது போல கனவு கண்டால், நல்ல செய்திகள் தேடி வரும் என்று அர்த்தம். ஏழையாகி விட்டது போல கனவு வந்தால், எதிர்பாராத வகையில் அவருக்கு செல்வம் வந்து சேரும். எல்லா வகையிலும் முன்னேறி உயர்ந்த நிலையை அடைவார்கள் என்று அர்த்தம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications