ஏழுமலையான் பக்தர்களே..அங்கப்பிரதட்சணம் செய்ய ஆன்லைன் டிக்கெட் ரிலீஸ்..உடனே புக் பண்ணுங்க
ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் இலவசமாக அவற்றை முன் பதிவு செய்து கொள்ளலாம்.
திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு திருமலையில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் டோக்கன்கள் பெறுவதற்கு பக்தர்கள் 2 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது. ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதம் அங்கப்பிரதட்சணம் செய்ய தேவையான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியாகியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். பிரம்மோற்சவ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடந்த 2020 மார்ச் 20ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கட்டண சேவைகளில் பங்கு பெறவும், அங்கப்பிரதட்சணம் செய்வதற்கும் அனுமதி நிறுத்தப்பட்டிருந்தது.
கொரோனா குறைந்ததை அடுத்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் அங்கப்பிரதட்சணம் செய்யவும் கட்டண சேவைகளில் பங்கு பெறவும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு திருமலையில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் டோக்கன்கள் பெறுவதற்கு பக்தர்கள் 2 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது.
எனவே இனிமேல் அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் பெற வரிசையில் காத்திருக்காமல் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் மாதம் அங்கப்பிரதக்ஷணம் செய்ய தேவையான டிக்கெட்டுகள் இன்று காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு உள்ளன.
இது தவிர இம்மாதம் 23ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை அங்கப்பிரதட்சணம் செய்ய தேவையான டிக்கெட்டுகளும் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் www.tirupatibalaji.gov.inஎன்ற இணையதளத்தில் இலவசமாக அவற்றை முன் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையானை நாடு முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளன்று சுவாமியை தரிசித்து வருகின்றனர். இதில் குறிப்பாக ரூ. 300 சிறப்பு தரிசன டோக்கன்களுக்கு நடுத்தர வர்க்க பக்தர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இம்மாதம் பிப்ரவரியில் வரும் 22ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலான ரூ. 300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட்டுகள் வரும் 13ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையத்தில் வழங்கப்பட உள்ளதாக ருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications