கொள்ளிக்கண்ணு.. பாடாய் படுத்தும் உடல் நலக்கோளாறு.. ஆன்மீகத்தில் இருக்கும் சிம்பிள் பரிகாரம்
சென்னை: நன்றாக வாழ்ந்தால் வயிற்றெரிச்சலில் பொசுங்குவார்கள். என்ன செய்து வாழ்க்கையில் சிக்கலை உண்டாக்குவது என்று யோசிப்பார்கள். கண் திருஷ்டி பலரையும் பாடாய் படுத்தும். கொள்ளிக்கண்ணு பார்வையால் பலருக்கும் உடல் நலக்கோளாறுகள் வரும். கண் திருஷ்டியால் ஏற்படும் பாதிப்புகள் நீங்குவதற்கு ஆன்மீகத்தில் எளிமையான பரிகாரம் கூறப்பட்டுள்ளது.
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். சிலரது பார்வையே தீய சக்தியை ஏற்படுத்தும் எனவேதான் நம்முடைய வீட்டில் உள்ள பெரியவர்கள் கண்ணடி படக்கூடாது என்று சொல்லி வைத்தனர். கண் திருஷ்டி என்பது பொறாமை, கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலால் ஏற்படக்கூடியது. அதனால் எற்படும் பாதிப்பு, சிலருக்கு சிறியதாகவும், பலருக்கு தொடர்ச்சியான பின் விளைவுகளையும் தரும்.

கண் திருஷ்டி ஒரு சிலரை எளிதில் தாக்கும். லக்னம், ஐந்து, ஒன்பதாம் இடத்தில் மாந்தி இருந்தால், அந்த நபர்களை கண் திருஷ்டி எளிதில் பாதிக்கும். லக்னாதிபதி 6, 8, 12ஆம் வீட்டில் மறைந்திருந்தால், அவர்களுக்கு கண் திருஷ்டி பாதிப்பு நீண்ட காலத்திற்கு இருக்கும். சிலருக்கு செய்வினையாக மாறவும் வாய்ப்புண்டு.
கண் திருஷ்டி ஒரு சிலரை எளிதில் தாக்காது. அதற்கு ஜோதிட ரீதியான காரணங்கள் உள்ளன. ஒருவரது ஜாதகத்தில் லக்னம் மற்றும் லக்னாதிபதி வலிமையாக இருந்தால், அவரை கண் திருஷ்டி எளிதில் பாதிக்காது.
லக்னாதிபதி 8ஆம் வீட்டில் மறைந்தவர்களுக்கு கண் திருஷ்டியால் விபத்து, அல்லது உயிர் பயம் இருந்து கொண்டே இருக்கும். லக்னத்திற்கு 2, 12ஆம் வீட்டில் மாந்தி, சனி, ராகு-கேதுக்கள் இருப்பின், அவர்களின் கண் பார்வைக்கு கெட்ட சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் அதிகம்.
கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் தொழில் நஷ்டம், பொருள் இழப்பு வீண் விரைய செலவுகள் வந்து கொண்டே இருக்கும். உடல் சோர்வு, மனச்சோர்வு, இல்லாத ஒன்றை கற்பனை செய்து பயப்படுதல், கணவன் மனைவி இடையே சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை உண்டாகும். சுப நிகழ்வுகளில் தடை, மருத்துவச் செலவு, உணவை பார்த்தால் வெறுப்பு, சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, உடல் சோர்வினால் அடிக்கடி கொட்டாவி விடுவது, எதிர்மறை எண்ணங்கள் தோன்றும்.

கண் திருஷ்டி நீங்குவதற்கு வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர, திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம். ஒற்றைப் படை எண்ணிக்கையில் கற்பூரங்களை தலையைச் சுற்றி வீட்டு வாசலில் ஏற்றலாம். தேங்காயில் கற்பூரம் ஏற்றி தோஷம் இருப்பவர்களின் தலையை சுற்றி, ஊர் எல்லையில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் சிதறுகாய் உடைக்கலாம்.
ஒரு தேய்பிறை செவ்வாய்க்கிழமை தினத்தில் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கின்ற துர்க்கை அம்மனுக்கு சிவப்பு நிற புடவையை சாற்றி வழிபட வேண்டும். இதன் மூலம் வெகு விரைவில் உங்களின் அனைத்து பிரச்சனைகளும் தீரும். இந்த எளிய பரிகாரத்தை செய்பவர்களுக்கு தொழில், வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரின் கண் திருஷ்டிகள் நீங்கும் உங்கள் வீட்டை எந்த ஒரு துஷ்ட சக்திகளும் பாதிக்காது.
கஸ்தூரிமஞ்சள், பச்சைக் கற்பூரம், ஆகியவற்றை தண்ணீரில் கரைத்து செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வீட்டின் உள்ளேயும், வெளியேயும் தெளிக்க வீட்டில் நல்ல சக்தி உண்டாகும். அதேபோல் எலுமிச்சை, பூசணிக்காய் கொண்டு திருஷ்டி கழித்தால் கெட்ட சக்திகள் அகன்று விடும்.
எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவி வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.
அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் புகை காட்ட திருஷ்டி கழியும். செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி தினங்களில் வீட்டில் மாவிலை தோரணம் கட்டினால் கெட்ட சக்திகள் வீட்டிற்க்குள் வராது.

முடக்கற்றான், பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது, ஆகியவைகளைக் சேர்த்து அரைத்து அந்தப் பொடியை பசு கோமியத்தில் கரைத்து வீட்டில் தெளித்தால் தீய சக்திகள், கண் திருஷ்டி நீங்கும் நோய் பாதிப்புகள் இருந்தால் குறையும்.
வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம். கடலுக்கு போக முடியாதவர்கள் வீட்டில் உள்ள கல் உப்பை எடுத்து தண்ணீரில் கரைத்து அதனுடன் மஞ்சள் பொடியை கலந்து வீடு, கடைகளில் தெளிக்கலாம்.
ஞாயிற்றுக்கிழமை சூரியன் மறைந்த பிறகு ஏழு எருக்கன் இலைகளை எடுத்து அதில் ஒரு மிளகாய் வற்றல், சிறிதளவு கல் உப்பு, ஒரு ரூபாய் நாணயம் வைத்து தலையை உடலை சுற்றி முச்சந்திக்கு சென்று வரிசையாக ஏழு இலைகளையும் கீழே வைத்து அதை தாண்டி விட்டு திரும்பிப்பார்க்காமல் வீட்டுக்கு வந்து விட வேண்டும். இதன் மூலம் கண் திருஷ்டி கோளாறுகள் நீங்கும்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications