கூரையை பிச்சிக்கிட்டு கொட்டணுமா பணம்? அப்ப இந்த பொருளை வீட்டில் வைத்து பாருங்க! பெஸ்ட் வாஸ்து டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆமை புகுந்த வீடு விளங்காது என்று சொல்லி சொல்லியே, ஆமைகளை ஒதுக்கி வைத்துவிட்டார்கள்.. உண்மையை சொல்லப்போனால் ஆமைகள் தரும் நன்மைகள் ஏராளம் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.
இயல்பாகவே, மெதுவாக நடந்து செல்லக்கூடியது ஆமை.. இப்படிப்பட்ட ஆமை ஒரு வீட்டுக்குள் எளிதாக நுழைந்துவிட முடியாது.. அதன் வேகத்துக்கு வாசலை கடந்து வீட்டுக்குள் வரவே பல மணி நேரம் ஆகும்..

என்ன காரணம்: இவ்வளவு மெதுவாக நடந்து வரும் ஆமை, வீட்டுக்குள் நுழைவதை கூட கவனிக்காமல் இருந்தால், அந்த வீட்டில் அந்நியர் வந்துபோனாலும் தெரியாது. இப்படி அலட்சியமாகவும், சோம்பேறித்தனமாகவும் இருக்கும் வீட்டையே, "ஆமை நுழைந்த வீடு உருப்படாது" என்று சொல்லி வைத்தார்களாம்.

Spirituality Vastu Tips

அதுமட்டுமல்ல, முயலாமை, இயலாமை போன்ற ஆமைகள், நம்முடைய வீட்டிற்குள்ளும் வந்துவிட்டால் நம்மால் எந்த வகையிலும் முன்னேற்றம் அடைய முடியாது என்பதால்தான் ஆமை புகுந்த வீடு முன்னுக்கு வராது என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். கல்லாமை, பொறாமை, அறியாமை போன்றவையே ஆபத்தானவையே தவிர, மென்மையான ஆமைகள் கிடையாது.

சகுனம்: ஆமைக்கும் கெட்ட சகுனத்திற்கும் வேறு எந்த ஒரு தொடர்பும் கிடையாது... ஆமைகள் மென்மையான, சாதுவான பிராணியாகும்.. சுமார் 150 ஆண்டுகள்வரை உயிர் வாழக்கூடியவை என்பதால் சீனர்களும் அமெரிக்கப் பூர்வகுடி மக்களும் ஆமையை ஆரோக்கியத்துக்கும் நீண்ட ஆயுளுக்கும் அடையாளமாக நினைக்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, முக்கிய வாஸ்து பிரச்சினையைப் போக்கும் நிவாரணியாகவும் ஆமைகளை சீனர்கள் பார்க்கிறார்கள்.

ஆமையானது தன்னுடைய சரீரத்தோடு ஒட்டியிருந்தாலும், ஆபத்து நேரிடும்போது அல்லது தேவைகள் ஏற்படும்போது, ஓடுகளிலிருந்து தன்னை விடுவித்து, தலை உள்ளிட்ட பாகங்களை உள்ளிழுத்து அடக்கி கொள்ளும். அதுபோலவே, மனிதர்களும், இந்த லெளகீக வாழ்வின் மீதான பற்றிலிருந்து ஒன்றியும், ஒன்றாமலும் இருத்தல் வேண்டும் என்ற தெய்வீக ஞானத்தை ஆமைகள் உணர்த்துகிறதாம்.

மகாவிஷ்ணு: அந்தவகையில், ஆமைகள் மகாவிஷ்ணுவின் அவதாரமாக போற்றப்படுகின்றன.. மகாவிஷ்ணுவின் கூர்ம அவதாரமாக கருதப்படுவதால், இறைவனின் அம்சமாகவும், அதிர்ஷ்டங்களை அள்ளிக் கொடுக்கக்கூடியதாகவும் ஆமைகள் கருதப்படுகின்றன. ஆனால், உயிருள்ள ஆமையை வீட்டில் வளர்க்கக்கூடாது. சிலர் மீன்களை போல நீர்த்தொட்டிகளில் ஆமைகளை வளர்ப்பார்கள். இது குடும்பத்துக்கே தீங்கை தந்துவிடுமாம்.

ஆமை சிலைகளை அதாவது உலோகத்தால் ஆன சிலைகளை வீட்டில் வாஸ்துப்படி வைத்திருப்பதால், பொருளாதார நிலை மேம்படும்.. எதிரிகளை வீழ்த்தும் வல்லமை கிடைக்கும்.. பணத்தை ஈர்க்கும் சக்தி ஆமை சிலைக்கு உள்ளதாம்..

கண்ணாடி பாத்திரம்: அந்தவகையில், ஒரு கண்ணாடி கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஆமை சிலையை வைத்திருந்தால், அது அதிர்ஷ்டமாகவே கருதப்படுகிறது. இதனை வியாபாரம் செய்யும் இடங்களில் வைத்தால் லாபம் பெருகுவதுடன், கண் திருஷ்டியும் நீங்கும் என்பார்கள்.

அல்லது ஒரு தட்டை எடுத்துக்கொண்டு, அதில் தட்டில் தண்ணீரை ஊற்றி, அதில் ஆமை சிலையை வைக்க வேண்டும். அந்த ஆமையின் மேல் நாம் ஏதாவது ஒரு நாணயத்தையும் வைக்க வேண்டும். ஆமைகளின் வாய் திறந்தபடி சிலைகள் இருந்தால், அதன் வாயிலும் நாணயத்தை வைக்கலாம். இந்த ஆமைக்கு நாலா பக்கமும் அதாவது 360 டிகிரியும் நேர்மறை ஆற்றல்களை வெளிப்படுத்தும் தன்மை இருக்கிறது.

வடக்கு திசை: ஆமை சிலைகளை வடக்கு திசையில் வைக்கலாம். இதனால் பணம், செல்வம் வீட்டில் தங்குதடையின்றி வரும் என்று வாஸ்துவில் நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், குடும்பத்தில் நேர்மறை ஆற்றல் பெருகும்..வடமேற்கு திசையிலும் ஆமை சிலைகளை வைக்கலாம். இதன்மூலம் பிள்ளைகளின் வாழ்க்கையில் ஏற்றம் பிறக்கும்.

மரத்தினாலான ஆமை சிலைகளை வீட்டில் கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் வைக்கலாம். இதனால், குடும்பத்தில் பிணக்குகள், குழப்பங்கள் நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். வடகிழக்கு பகுதியில் ஸ்படிக ஆமையை வைக்கலாம்.. தூக்க குறைபாடு உள்ளவர்கள், படுக்கையறையிலும் ஆமை சிலையை வைக்கலாம்..

வெற்று காகிதம்: ஒரு வெற்று பேப்பரில் சிவப்பு பேனாவால் உங்களது விருப்பத்தை எழுதி, உலோக ஆமைக்குள் வைத்தால் அதுவிரைவில் நிறைவேறுமாம்.. வீட்டிற்கு ஆமை சிலைகளை வாங்க வேண்டுமானால், புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் வாங்கலாம் என்று அறிவுறுத்துகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+