பர்ஸில் பணம் தங்கணுமா? கொடுத்த கடன் திரும்ப வரணுமா? வீட்டில் வசம்பு இருக்கா? கல் உப்பு? ஈஸி பரிகாரம்
சென்னை: சிலருக்கு எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் வீட்டில் தங்காது.. அதேபோல, பிறருக்கு கொடுத்த கடனை திரும்ப வாங்க முடியாமல் இழுத்தடித்தவாறே இருக்கும். இவைகளுக்கெல்லாம் எளிய பரிகாரங்கள் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளன.
பொதுவாக வீடு என்றாலே பணம் செலவாகி கொண்டேயிருக்கும். அதிலும் வரவைவிட செலவு எகிறிவிடும். இதனால் குடும்பத்தில் நிம்மதியின்மை, தம்பதிக்குள் தகராறு, குடும்பத்தில் குழப்பம், பெரியவர்களுடன் மனஸ்தாபம் போன்றவை ஏற்படும்.

இதற்கெல்லாம் வீட்டிலுள்ள எதிர்மறை ஆற்றல்களும் ஒரு காரணமாகும்.. கண் திருஷ்டி, பில்லி, சூனிய கோளாறுகள் போன்ற தீயசக்திகள் நமக்கே தெரியாமல், வீட்டிற்குள் நுழைந்து ஆட்டிப்படைக்கும். இதுபோன்ற சிக்கல்கள் இருந்தால், 2 வகையான எளிய பரிகாரங்களை செய்யலாம். இதன்மூலம் பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.
கடன் பிரச்சனை: முதலாவதாக, கடன்பிரச்சினை தீர செவ்வாய்கிழமை, செவ்வாய் ஹோரையில் பரிகாரம் செய்யலாம். வீட்டு பூஜையறையில் மகாலட்சுமியையும் குல தெய்வத்தையும் நினைத்து தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பிறகு 3 கை பிடி அளவு கல் உப்புக்களை தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ள வேண்டும். இதற்காக புதிய கல் உப்பு பாக்கெட் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் வாங்கிவைத்துக்கொள்வது நல்லது.
பூஜையறையில் உட்கார்ந்து, 3 முறை உங்களுடைய உள்ளங்கை நிறைய, கல் உப்பினை கிண்ணத்திலிருந்து எடுத்து, மஞ்சள் துணியில் வைக்க வேண்டும். இப்படி 3 முறை உப்பை எடுக்கும்போது, கடன் பிரச்சனை,. பணப்பிரச்சனை தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
பூஜையறை: பிறகு, உப்பு வைக்கப்பட்டுள்ள மஞ்சள் துணியை முடிச்சு போட்டு கட்டி, இந்த முடிச்சினை மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் வைத்து விடவேண்டும். ஒரு வாரம் கழித்து வரக்கூடிய செவ்வாய்கிழமையில், செவ்வாய் ஓரையில், பூஜை அறையில் இருக்கக்கூடிய கல் உப்பை எடுத்து சுத்தமான தண்ணீரில் போட்டு கரைக்க வேண்டும்.
மஞ்சள் துணியில் கட்டியுள்ள கல் உப்பை, உள்ளங்கைகளால் எடுத்து 3 முறை தண்ணீரில் கரைக்கும்போதும், கடன் தொல்லையும் இதுபோல கரைய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே கரைக்க வேண்டும். இறுதியில், உப்பு தண்ணீரை கால்படாத இடத்தில் கொட்டிவிடலாம். இதனால் விரைவில் பலன் கிடைக்கும்.
மஞ்சள் தூள்: அதேபோல, சிவன் கோவிலுக்கு பிரம்ம முகூர்த்த வேளையில் சென்று, பைரவர் சன்னதிக்கு முன்பாக ஒரு நெய் விளக்கு ஏற்றி வைத்து, வழிபடலாம். இதற்கு மஞ்சள் தூளை தண்ணீரில் குழைத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு குச்சியால், இந்த மஞ்சள் நீரை தொட்டு, உங்களுக்கு பணம் தர வேண்டியவரின் பெயர், தொகையை ஒரு வெற்றிலையில் எழுத வேண்டும்.
இப்படி எழுதியதை பைரவர் பாதத்திற்கு அருகில் வைத்து, "ஓம் வம் பைரவாய நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். தினமும் இப்படி பைரவர் சன்னதியில் சொல்லும்போது, முந்தைய நாள் வெற்றிலையை நீர் நிலையிலோ அல்லது கால் படாத இடத்திலோ போட்டு விட்டு, அடுத்த நாள் வேறு எழுதி வைக்கலாம். இதனால், உங்கள் பணம் விரைவில் உங்களை வந்து சேரும்.
வசம்பு முடிச்சு: அதேபோல, ஒரு வெள்ளை துணியில் 2 துண்டு வசம்பு, 2 ஏலக்காய், 2 கருப்பு ஏலக்காய், சிறிது பச்சை கற்பூரம் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து முடிச்சு போல கட்டி, பணம் வைக்கும் பெட்டி அல்லது இடத்தில் வைக்கலாம்.. இந்த பொருட்களுக்கெல்லாம் பணத்தை ஈர்க்கும் தன்மை உண்டு என்பதால், பணம் தடையின்றி வரத்துவங்கும். வீட்டின் முன்வாசலிலோ அல்லது பின்வாசலிலோகூட இந்த முடிச்சினை கட்டி வைக்கலாம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications