Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குளிகை நேரம் ரொம்ப நல்லது.. காலண்டரில் உள்ள குளிகையில் இதை பண்ணாதீங்க! காரிய விருத்தியே குளிகை காலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலண்டரில் ராகுகாலம், எமகண்டம் போல, குளிகை என்ற வார்த்தையும் இடம்பெற்றிருக்கும்.. குளிகை என்றால் என்ன? இந்த நேரத்தில் செய்யப்படும் காரியங்கள் என்னென்ன? செய்யக்கூடாத செயல்கள் என்னென்ன? சுருக்கமாக பார்ப்போம்.

காலண்டரில் நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் போன்றவற்றுடன் குளிகை என்ற நேரத்தையும் பதிவிட்டிருப்பார்கள்.. இதுவும் மற்ற காலங்களைப் போல், தினமும் ஒன்றரை மணி நேரம் வரக்கூடியது.. ஆனால், ராகு காலம், எமகண்டத்தில் சுபநிகழ்ச்சிகள் செய்வதில்லை. அதேபோல, குளிகை நேரத்தில், அசுப நிகழ்ச்சிகள் செய்யக் கூடாது.

spirituality kuligai kalam kuligai time

ராகுகாலம்: ராகுகாலத்தில் எமகண்டத்தில் எப்படி ஒரு நல்ல செயலை செய்ய மாட்டார்களோ, அதேபோலவே, குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக்காரியமும் திரும்பத் திரும்ப நடக்கும் என்பது நம்பிக்கையாகும். எனவே, நல்ல காரியங்களுக்கு குளிகை நேரம் உகந்ததாகவும், ஈமச்சடங்கு போன்ற கெட்ட காரியங்களுக்கு இது ஏற்புடையதில்லை என்றும் கருதப்படுகிறது.

சனீஸ்வரரின் மகன், குளிகன்.. எருமைத் தலையும் மனித உடலும் கொண்டவர். குளிர்விக்கும் தன்மையைக் கொண்ட குளிகன், ஒவ்வொரு நாளிலும் நல்ல காரியங்களைத் தொடங்கவே உருவாக்கப்பட்டவன்.. குளிகனை சனிக்கிழமைகளில் மாலை வேளைகளில் வணங்கலாம்... சனீஸ்வரனை வணங்கும்போது மனதினில் குளிகனை எண்ணி வணங்கலாம்....

சுபநிகழ்ச்சி: தினமும் ஒன்றரை மணி நேரம் ஆட்சி செய்கிறார். எனவேதான், இவரது ஆட்சி நேரமான குளிகையில், சுப நிகழ்ச்சிகளை செய்யும்போது, அதை பல்கிப் பெருகச் செய்வாராம்..

குளிகை நேரத்தில் ஒரு காரியத்தை தொடங்கினால், அது வளர்ந்துகொண்டே இருக்கும் என்பதால்தான், நகைகளை அடகுவைப்பது, கடன் வாங்குவது, வீட்டைக் காலிசெய்வது, இறந்தவர் உடலைக் கொண்டுசெல்வது போன்ற விஷயங்களை குளிகை நேரத்தில் செய்யக்கூடாது என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். பெண் பார்க்க செல்வது, நோய்க்கு மருத்துவரை சந்திப்பது, வேலைக்கு முயற்சி செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதிலும் குளிகை நேரத்தில் கடன் வாங்கினால், அந்த சுமை பெருகி கொண்டே போய்விடும்.

திருமணம்: குளிகை நேரத்தில் திருமணம் செய்ய தவிர்க்கப்படுகிறது.. குளிகை நேரத்தில் செய்யும் காரியம் திரும்ப திரும்பத் தொடரும் என்பதால் திருமணம் செய்தாலும் மணவாழ்க்கை சிறப்பானதாக இருக்காது. மணவாழ்க்கை முறிந்து, விவாகரத்து ஏற்படலாம். இதனால், மீண்டும் திருமணம் செய்யும் நிலை ஏற்படலாம் என்பதால்தான், குளிகை நேரத்தில் திருமணம் செய்வது தவிர்க்கப்படுகிறது.

மாறாக, குளிகை என்ற நல்ல வேளையில் சொத்து வாங்குவது, சுப நிகழ்வுகள், கடனை திருப்பி தருதல், பிறந்தநாள் கொண்டாடுவது போன்றவற்றை செய்யலாம்.. வங்கிக் கணக்கில் பணம் போடுவது. அடமானப் பொருளை மீட்பது, விவசாயப் பணிகளான விதை விதைத்தல், நாற்று நடுதல், மகசூல் அறுவடை செய்தல் போன்றவற்றையும் செய்யலாம்.. புதிய ஆடை, ஆபரணங்கள் அணியலாம்.

இவைகளை திரும்ப திரும்ப நடந்தாலும், அது நன்மைக்குதான் அமையும். அதேபோல, குளிகை நேரத்தில் பணத்தை சேமித்தாலும், அதுவும் நன்மையில்தான் முடியும்.

கடன் தொல்லை: கடன் தொல்லை கடுமையாக இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை பகல் 12 மணி முதல் 1.30 மணிக்குள், அல்லது சனிக்கிழமை காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் கடனில் ஒரு பகுதியை செலுத்தினால் அந்த கடன் எளிதில் குறைந்து விடும். ஒருவேளை பெரிய பாக்கி இருந்தால், வீட்டில் சிவப்பு நிற உண்டியல் அல்லது சிவப்பு நிறத் துணியில், தினமும் குளிகை நேரத்தில் பணம் கொடுக்க வேண்டியவரின் பெயரை உச்சரித்து, சிறிது சிறிதாக சேமித்து வர வேண்டும். குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் சம்பந்தப்பட்டவரிடம் கொடுத்துவிடலாம்.

அதேபோல, குளிகை நேரத்தில் குழந்தை பிறந்தால், அந்த குழந்தை சிறப்பானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. குளிகை நேரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பிரச்சினைகள் எதுவும் ஏற்படாதாம்., சுருக்கமாக சொல்லப்போனால், காரிய விருத்தி நேரம் என்று ஒரு குறிப்பிட்ட கால நேரம் தினமும் உண்டு என்பதைதான் குளிகை நேரம் என்கிறார்கள்.. இப்பட்ட குளிகை நேரம் கிடைக்க, கொடுத்து வைத்திருக்க வேண்டுமாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+