வாஸ்து மூலை.. வாடகை வீட்டிற்குள் குடியேறும்போது "இதை" மட்டும் கையோடு கொண்டு போயிடுங்க.. செம டிப்ஸ்
சென்னை: வாடகை வீட்டுக்கு நீங்கள் புதிதாக குடிபுக நேரிடும்போது, ஒருசில வழக்கத்தை செய்தால், குடிபுகும் வீடு சுபிட்சமாக இருக்கும் என்று அறிவுறுத்துகிறது சாஸ்திரங்கள்.
வாடகை வீடாகவே இருந்தாலும், உறவுகளுடன் இணக்கம், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழிலில் முன்னேற்றம், தங்குதடையற்ற பணவரவு, அனைத்தையும்விட குடும்பத்தினரின் ஆரோக்கியம் போன்றவைகள் தங்கியிருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்வதற்குரிய சூழலை பெற முடியும்.

வெளிச்சம்: வெளிச்சமும் காற்றோட்டமும் ஒரு வீட்டிற்கு அத்தியாவசியமான தேவையாகும். தென்கிழக்கில் சமையலறை இருந்தால் மிகவும் நல்லது.. அந்தவகையில் வாடகை வீட்டில் புதிதாக குடிபுக நேரிடும்போது, திருஷ்டியை கழித்துவிட்டு செல்ல வேண்டும்.. அதாவது, வேறொருவர் குடியிருந்த வாடகை வீட்டிற்குள் நுழையும்போது, கற்பூரத்தை ஏற்றிவைத்து வழிபடுவார்கள்.. இதனால், பழைய தீய சக்தி முழுமையாக அகலும் என்று வாஸ்து அறிவுறுத்துகிறது.
அதேபோல வீட்டில் இரும்பின் பயன்பாட்டை குறைத்து கொள்ள வேண்டும்.. கூடுமானவரை மரத்தினாலான நாற்காலிகளை பயன்படுத்துவது நல்லது.. அதேபோல தேவையில்லாத பொருள்களை சேர்த்து வைக்கக்கூடாது.. பரண்களிலும், அடைப்புகளிலும் போட்டு வைக்கக்கூடாது.. அவ்வப்போது அவைகளை வெளியே வீசிவிடுவது நல்லது..
பூஜையறை: வீடு மாற்றும்போது, வீட்டிலுள்ள பொருட்களை எல்லாம் எடுப்பதற்கு முன்பு, எலுமிச்சம் பழத்தை வலது கையில் வைத்து கொண்டு, பூஜையறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். சாம்பிராணி தூபத்துடன் வலது கையில் எலுமிச்சையுடன் குலதெய்வத்தை நினைத்து வேண்டிக் கொள்ள வேண்டும்.
இந்த வீட்டில் நீடித்து வந்த அதிர்ஷ்டமும், சந்தோஷமும், பூஜை புனஸ்காரங்களில் செய்த நன்மைகளும், குடிபுகும் புது வீட்டிற்கும் வர வேண்டும் என்றும், இந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டு குல தெய்வமும், காவல் தெய்வமும், இஷ்ட தெய்வமும் எங்களுடனே புது வீட்டிற்கும் வந்து எங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் சொல்லி சங்கல்பம் மேற்கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்டம்: இப்போது உங்கள் கையிலுள்ள எலுமிச்சம்பழத்தை தரையில் வைக்காமல், மஞ்சள் துணியில் ஒன்றில் முடிச்சாக கட்டி உங்களுடைய கைப்பை அல்லது வேறு ஏதாவது பையில் போட்டு எங்காவது சுவற்றில் மாட்டிவிட வேண்டும். புது வீட்டிற்கு சென்று பொருட்களை அடுக்கி வைத்து, பூஜை அறையையும் தயார் செய்து விளக்கேற்றிய பிறகு, இந்த பையிலுள்ள எலுமிச்சம் பழத்தை கொண்டு போய் பூஜையறையின் அலமாரியில் வைத்து மீண்டும் வேண்டிக கொள்ள வேண்டும்.
இதனால், அந்த எலுமிச்சம்பழத்தின் மூலம், பழைய வீட்டிலிருந்த தெய்வங்கள் அந்த எலுமிச்சம் பழத்தின் மூலம் புது வீட்டிலும் குடியேறி விடும். அதிர்ஷ்டமும் புது வீட்டிற்கு வந்துவிடும்...
அருட்கடாட்சம்: அதேபோல, நாம் வசிக்கும் வீடு தெய்வங்களின் அருட்கடாட்சம் பெறுவதற்கு ஒரு எளிய பரிகாரத்தையும் செய்து கொள்ளலாம்.. அதாவது, தங்க நகை விற்பனை செய்யும் கடைகளில் விற்கப்படும் பஞ்சலோக நாணயங்களை வாங்கி வந்து, சுபமுகூர்த்த நாளில், நல்ல நேரம் பார்த்து, வீட்டின் வாயில் படிக்கு மேலே ஒட்டி வைக்க வேண்டும். இப்படி ஒட்டுவதற்கு எந்தவிதமான பேஸ்ட்டும் பயன்படுத்தக்கூடாது.
கோவில்களில் கும்பாபிஷேகத்தின்போது பயன்படுத்தப்படும் அஷ்டபந்தன மூலிகை கலவையை வாங்கி வந்து, சூடாக்கி அதை உங்கள வீட்டு வாசற்படியில் மீது தடவிவிட்டு, அதற்கு பிறகு பஞ்சலோக நாணயங்களை நேரான வரிசையில் ஒட்டி வைக்க வேண்டும்.
பஞ்சலோக நாணயங்கள்: இதனால், உங்கள் வீட்டிலுள்ள எப்படிப்பட்ட வாஸ்து தோஷங்களும் நிவர்த்தி ஆவதுடன், குடும்பத்தினருக்கும் எந்த பாதிப்புகளும் அண்டாது.. வீட்டில் இருக்கின்ற துஷ்ட சக்திகள், எதிர்மறை அதிர்வுகள் அனைத்தும் விலகி, செல்வமும், ஆரோக்கியமும் தழைக்க செய்யும். இப்போதுள்ள வாடகை வீட்டிலிருந்து, விரைவில் சொந்த வீட்டிற்கு செல்லக்கூடிய யோகத்தையும் இது ஏற்படுத்தும் என்கிறார்கள்.
வாடகை வீட்டிலிருப்பவர்கள் வாஸ்து சரியில்லாமலிருந்தால், நீங்கள் அடிக்கடி பார்க்கும் இடத்தில் மீன்தொட்டிகளை வாங்கி வைக்கலாம்.. இதனால், வீட்டின் தீயசக்திகள் நீங்குவதுடன், நம்முடைய மனதிற்கும் மகிழ்ச்சியை தரும்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications