ஆகஸ்ட் மாதம் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க பிளானா? இலவச தரிசன டிக்கெட்டுகள் எப்போது தெரியுமா?
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக இலவச தரிசன டிக்கெட் மே 23 ஆம் தேதி முதல் வெளியிடப்படும்.
உலக புகழ் பெற்ற திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள். இதே தொடர் விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள், பிரம்மோற்சவம் உள்ளிட்டவைகளின் போது லட்சக்கணக்கானோர் வருகை தருவதும் உண்டு.

எந்த ஒரு தெய்வமாக இருந்தாலும் அதை எவ்வளவு நேரமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என தோன்றும். அந்த அளவுக்கு அழகு தெய்வங்கள். அப்படியிருக்கும் உலக பணக்கார கடவுளான ஏழுமலையானுக்கு வியாழக்கிழமைகளில் துளசி மாலையுடன் பஞ்சகட்சம் வேட்டி கட்டப்பட்டு சிம்பிளாக அலங்காரம் செய்யப்பட்டிருக்கும்.
மற்ற நாட்களில் அவருக்கு தடபுடலாக அலங்காரம் இருக்கும். இதனால் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் மக்களை ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்திலேயே சுவாமியை பார்க்க அனுமதிப்பர். அதன் பின்னர் "ஜர்கண்டி ஜர்கண்டி" என விரட்டிவிடுவர். அதிலும் அதிக கூட்டம் இருந்தால் கேட்கவே வேண்டாம்.
மிக தொலைவில் இருந்தபடியே தரிசனம் செய்ய வைப்பர். இந்த நிலையில் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்படும் டிக்கெட்டிற்காக பலர் காத்து கொண்டிருப்பார்கள். அந்த வகையில் ஆகஸ்ட் மாத தரிசனத்திற்கான டிக்கெட் தேதி வெளியாகியுள்ளது.
அதன்படி ஸ்ரீவாரி ஆகஸ்ட் மாதத்தின் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் மே 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இந்த சேவைக்கான டிக்கெட்டுகளை மின்னணு டிப் செய்வதற்கான ஆன்லைன் பதிவு மே 20ஆம் தேதி காலை 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை பெறுபவர்கள் மே 20 முதல் 22 ஆம் தேதி மதியம் வரை 12 மணிக்குள் பணம் செலுத்தினால் டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்படும்.
அது போல் ஸ்ரீவாரி கோயிலில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறும் கல்யாணோத்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வருடாந்திர பவித்ரோத்ஸவம் சேவை டிக்கெட்டுகள் மே 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். ஆகஸ்ட் மாதத்திற்கான அங்கபிரதட்சிணம் டோக்கன்களும் மே 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
ஆகஸ்ட் மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் மே 23 ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் மே 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். திருமலை மற்றும் திருப்பதியில் மாதத்திற்கான அறை ஒதுக்கீடு டிக்கெட் மே 24 அன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.
மேலும் 27ஆம் தேதி திருமலை திருப்பதி ஸ்ரீவாரி சேவை கோட்டா காலை 11 மணிக்கும் நவநீத சேவை மதியம் 12 மணிக்கும் வெளியிடப்படும். இந்த தேதிகளில் முன்பதிவு செய்தால் ஏழுமலையானை அருகில் இருந்து தரிசனம் செய்யலாம்.












Click it and Unblock the Notifications