சரியான பிள்ளையார் சிலை இதுதான்.. பெருகும் பணம்.. வீட்டில் வலது பக்க தும்பிக்கை விநாயகரை வைக்கலாமா?
சென்னை: விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபடுவதால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன? விநாயகர் சிலையை வீட்டின் நுழைவு வாயிலில் எப்படி வைக்க வேண்டும்? வலது பக்கமாக தும்பிக்கையை கொண்ட விநாயகரை வீட்டில் வைக்ககூடாது என்கிறார்களே? ஏன் தெரியுமா? இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
பாசிட்டிவ் ஆற்றல் அதிகரிக்கவும், அதிர்ஷ்டம் நிறைந்திருக்கவும், வீட்டில் விநாயகர் சிலைகளை வைப்பது வழக்கமாகும்.. எப்பேர்ப்பட்ட தடைகளாக இருந்தாலும் அதை தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் இந்த விநாயகர் சிலைகளுக்கு உள்ளது.. தடைகளை நீக்கும் விநாயகரின் சிலையை, வீட்டில் வைக்கும்போது பல்வேறு வெற்றிகள் குவியும்.

சிலையின் அளவு: மகிழ்ச்சியையும், செழிப்பையும் தரக்கூடியவர் விநாயகர். பெரிய சிலையோ, சிறிய சிலையோ, எதுவாக இருந்தாலும், விநாயகர் சிலையை வைத்திருந்தாலே, வீட்டிற்கு நன்மைகள் வந்து சேரும் என்று நம்பப்படுகிறது.
எனினும், விநாயகர் சிலையை வைக்கவும், வாஸ்து சாஸ்திரத்தில் சில விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. வீட்டின் வடகிழக்கு மூலை தான் விநாயகர் சிலை வைப்பதற்கான சரியான இடமாகும்... இந்த இடத்தில் பூஜை அறை இருந்தால் இன்னும் சிறப்பாகும். ஒருவேளை வடகிழக்கு மூலையில் வைக்க வாய்ப்பு இல்லாதவர்கள், விநாயகர் சிலையை வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கியவாறு இருக்கும்படி வைத்து வழிபட வேண்டும்.
படுக்கையறை: வீட்டின் கிழக்கு அல்லது மேற்கு திசையை நோக்கியும் விநாயகர் சிலையை வைக்கலாம். ஆனால், தெற்கு திசையில் மட்டும் விநாயகர் சிலையை வைக்கக் கூடாது.. அதேபோல, படுக்கை அறையிலோ, கழிவறைக்கு அருகிலோ, குளியலறை சுவரோடு ஒட்டியிருக்கும்படியோ, அல்லது படிக்கட்டுக்கு கீழேயோ விநாயகர் சிலையை வைக்கக்கூடாது.
வீட்டின் முக்கிய நுழைவாயிலுக்கு எதிராக விநாயகர் சிலையை வைப்பதால், திருஷ்டிகள் அத்தனையும் நீங்கிவிடும். வீட்டிற்குள் நுழையும் அனைத்து தீய சக்திகளையும் தடுத்து, வளத்தை கொண்டு வருவார் கண் திருஷ்டி பிள்ளையார். ஆனால், விநாயகர் சிலையை எப்போதுமே வீட்டின் கதவுக்கு வெளியே வைக்க கூடாது.
நுழைவாயில்: விநாயகரை முகப்பு வாயிலில் வைத்தால் ஜோடியாக தான் வைக்க வேண்டும். அதிலும், ஒன்று நுழைவாயிலை பார்த்த வண்ணம் இருக்க வேண்டும். இன்னொன்று அதற்கு எதிர்புறமாக பார்த்திருக்க வேண்டும். காரணம், ஏதாவது ஒரு அறையில் விநாயகர் பின்புறத்தை பார்த்தபடி வைத்தால், வறுமை வந்து சேர்ந்துவிடுமாம். இதனை ஈடு செய்யவே, இன்னொரு சிலையை எதிர் திசையில் வைக்க வேண்டும் என்கிறார்கள்.
அதேபோல, வலது பக்கமாக தும்பிக்கையை கொண்டுள்ள விநாயகரை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், வலது பக்கமாக தும்பிக்கை விநாயகர் என்றால், பூஜையின்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.. கூடுதலாக பராமரிக்க வேண்டியிருக்கும். ஆனால், இவைகளை வீடுகளில் தொடர்ந்து செய்வது கடினம் என்பதால்தான், வலது பக்க தும்பிக்கை விநாயகரை தவிர்க்க சொல்கிறார்கள்.
விநாயகர் சிலைகள்: கோவில்களில் இவைகளை எல்லாம் தினமும் கடைப்பிடிக்க முடியும் என்பதால், இந்த சிலைகளை கோவில்களில் மட்டுமே பார்க்க முடிகிறது.. எனவே, வீட்டில் விநாயகர் சிலையை வைக்க வேண்டுமானால், இடது பக்கமாக அல்லது நேராக உள்ள அல்லது காற்றில் இருக்கும் தும்பிக்கையை கொண்ட விநாயகரை வைப்பதே சிறந்தது என்று அறிவுறுத்துகிறார்கள்.
இதனை அறிவியல் ரீதியாக பார்த்தோமானால், நம்முடைய மூளையானது வலப்பகுதி, இடப்பகுதி என்று பிரிக்கப்பட்டுள்ளது. இடது பக்க மூளையானது, உடலின் வலது பக்கத்தையும், வலது பக்க மூளையானது, உடலின் இடது பக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.. நம்முடைய சாஸ்திரத்தில் இதனையே பிங்கலை, இடகலை நாடிகள் என்கிறார்கள்.
வலது மூளை: உங்களின் வலது பக்க மூளை செயல்படும் போது இடது பக்க நாசியில் சுவாசம் வரும். அதே இடது பக்க மூளை செயல்படும் போது வலது பக்க நாசியில் சுவாசம் வரும். இந்த சித்தாந்தத்தை அடிப்படையாக வைத்துத்தான் விநாயகருக்கு வலம்புரி, இடம்புரி விநாயகர் என துதிக்கையில் வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
மாம்பழத்தோல் மற்றும் வேப்பங்கொட்டையால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலையை வாங்கி, வீட்டின் பிரதான நுழைவாயிலில் வைத்தால் நல்லது. பணம் தங்கியிருக்க வேண்டுமானால், வெள்ளெருக்கு விநாயகர் சிலையை வைத்து வழிபடலாம். விநாயகப் பெருமானுடன் ஸ்படிக லட்சுமியை வழிபட்டால் செல்வமும், நல்ல அதிர்ஷ்டமும் உண்டாகும். உட்கார்ந்த நிலையிலுள்ள விநாயகர் சிலையை வீட்டிலும், நின்ற கோலத்தில் விநாயகர் சிலையை தொழில் செய்யும் இடங்களில் வைத்தால் முன்னேற்றம் கிடைக்கும்.
-
வைகாசி விசாகம் 2026: முக்கியத்துவம், புராண கதை: வைகாசி விசாக தேதி மற்றும் பூஜைக்கான நேரம் -
பித்ருக்களின் ஆசியைப் பெற வேண்டுமா? சனி அமாவாசையில் தவறவிடக் கூடாத தர்ப்பண முறைகள்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications