அரசு வேலை வீடு தேடி வரணுமா? 9 வாரம் பரிகாரங்கள் போதாது, கோதுமை பால் அவசியம்.. வரம் தரும் வன்னி மரம்
சென்னை: பெரும்பாலானோருக்கு அரசு வேலை மீது தனிப்பிரியம் இருக்கும்.. ஆனால், இந்த அரசு வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது.. எத்தனையோ பேர் விண்ணப்பித்துவிட்டு, காலம் முழுவதும் காத்து கிடக்கும் நிலைமையும் உள்ளது.. அரசு வேலை அல்லது தற்போதுள்ளதைவிட பெரிய சம்பளத்துக்கு வேலைக்கு சென்றால்தான், குடும்பத்தை சமாளிக்க முடியும் என்ற நெருக்கடியும் இன்று பலருக்கும் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், அரசு வேலை கிடைக்க பரிகாரம் ஏதாவது உள்ளதா? எப்படி செய்வது?
அரசு வேலை கிடைக்க வேண்டுமானால், தினமும் அரச மரத்தடி விநாயகருக்கு நீர் ஊற்றி அபிஷேகம் செய்து வரலாம்.. ஆஞ்சநேயரை வணங்கி தினமும் அனுமன் சாலிசா படிப்பவர்களுக்கும் வேலையில் சிக்கல் இருந்தாலும் நீங்கிவிடும்.. தினமும் முடியாவிட்டாலும், செவ்வாய்க்கிழமைகளில் மட்டுமாவது அனுமன் சாலிசாவை படித்து வரலாம்.
அரசு வேலை கிடைக்க பைரவரை வழிபட்டு வரலாம்.. 9 வாரங்கள் தொடர்ந்து பைரவரை வழிபடலாம். அதன்பின்னர் அர்ச்சனை, அபிஷேகம் போன்ற பூஜைகளைச் செய்து, வேலை கிடைப்பதில் உள்ள தடைகள் நீங்கி நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று வேண்டி கொண்டால் பலன் கிடைக்கும்.

போலீஸ், ராணுவம் பணிகள்
போலீஸ், ராணுவம், தீயணைப்புத்துறையில் பணிபுரிய ஆசை என்றால், செவ்வாய்கிழமைகளில் விரதம் மேற்கொண்டு முருகனை பிரார்த்தித்து வரலாம்.. புதன்கிழமை, வெள்ளி கிழமையன்று, அம்மன் கோவிலில் அகல் விளக்கு போடலாம். சூரிய நமஸ்காரம் செய்து வருவதாலும் அரசாங்க வேலைக்கான வாய்ப்புகள் அதிகம். சிவப்பு நிற மலர்கள் ரோஜா அல்லது செம்பருத்தி பூக்களை கொண்டு அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டு வரவேண்டும்.
சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொண்டு, அன்றைய தினம் பிள்ளையார் கோவிலுக்கு சென்று அகல் விளக்கு ஏற்றி வைத்து பிராத்தனை செய்தால், அரசு வேலை கிடைக்கும்.. அதேபோல ஒவ்வொரு மாதமும், உங்களது, பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் அரச மரத்தடி விநாயகருக்கு அருகம்புல் வைத்து செம்பருத்தி பூக்கள் மாலை சூட்டி அகல் விளக்கு ஏற்றி வைத்து வழிபடலாம்.
வன்னி மரத்து பால்
வன்னி மர பரிகாரம் செய்வதாலும் நல்ல செய்தி வரலாம்.. இதற்கு வன்னிமரத்தின் செடியை நட்டு வளர்த்து, நாள்தோறும் தண்ணீர் ஊற்றி ஓரளவு பெரிதாகும்வரை ஊற்றி வளர்ப்பதால் அரசு பணியை எளிதில் வேலை கிடைக்கும்.
ஊற வைத்த கோதுமையை அரைத்து, அதில் வெளிவரும் மஞ்சள் நிறத்திலான பாலை, வீட்டில் வளர்ந்து வரும் வன்னி மரத்திற்கு வாரம் ஒருநாள் ஊற்ற வேண்டும். பிறகு செடி பெரிதாக வளர துவங்கியதும், அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு தானமாக தரலாம். கோயிலில் நட்டு வைக்கும்போதும், அந்த செடியை சரியாக பராமரிக்க வேண்டும். இந்த பரிகாரம் அரசு வேலையை பெற்றுத்தரும் என்பார்கள்.
சிவப்பு மஞ்சள் நிற மகிமை
சிவப்பு வண்ணத்தில் சிறு துணியை பர்ஸ்களில் வைத்திருக்கலாம்.. குரு பகவானுக்குரிய மஞ்சள் நிற தோல் உடைய வாழைப்பழத்தை பிறருக்கு தானம் தரலாம்.. பசு மாட்டிற்கு கீரை, வெல்லம், கோதுமை மாவு கலந்து தரலாம். ஜீவராசிகளுக்கு உணவு தரலாம்.. இவைகளை செய்வதாலும் அரசு வேலை கிடைக்கும்.
எலுமிச்சையை கிழக்கு நோக்கி உட்கார்ந்து உங்களது தலையை 13 முறை சுற்ற வேண்டும். பிறகு நாற்சந்தி நின்று கையிலுள்ள எலுமிச்சையை 4 துண்டுகளாக வெட்டி 4 திசைகளில் வீச வேண்டும்... இதுபோலவே, கல் உப்பையும் கையில் வைத்து திருஷ்டி சுற்றி போட்டு விட்டு கை கால்களை கழுவி சுத்தப்படுத்தி விட வேண்டும். இதனால் உங்களை பீடித்துள்ள திருஷ்டிகள் விலகி நன்மை பிறக்கும்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications