Gokulashtami 2025: கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி எப்போது? பூஜை செய்ய உகந்த நேரம் எது?
சென்னை: கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? எந்த நாளில் வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது குறித்தெல்லாம் நாம் பார்க்கலாம்.
இதுகுறித்து ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் தேச மங்கையர்க்கரசி கூறியிருப்பதாவது: கோகுலாஷ்டமி என்று வருகிறது, கிருஷ்ண ஜெயந்தி என்று வருகிறது? இந்த மாதமா இல்லை அடுத்த மாதமா என்பது போன்ற நிறைய கேள்விகள் இருக்கின்றன. கிருஷ்ண ஜெயந்திக்கும் கோகுலாஷ்டமிக்கும் என்ன வேறுபாடு என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கிருஷ்ணர் பிறந்த அந்த அற்புதமான நாள் ஆவணி மாதம், அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் வசு தேவருக்கும் தேவகிக்கும் 8ஆவது குழந்தையாக பிறந்தார். அப்போ ஆவணி மாதம், அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் வர வேண்டும். இந்த மூன்றும் சேர்ந்து வருவது அபூர்வமான ஒன்று. சில நேரங்களில் ஆவணியில் இல்லாமல் ஆடி மாதத்தில் அஷ்டமி எனும் திதி வந்துவிடும். ஆனால் ரோகிணி நட்சத்திரம் ஆவணி மாதத்தில்தான் வரும். இதுதான் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
நட்சத்திரம்
ஒருவரது பிறந்தநாளை நாம் கொண்டாடுவது நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து கொண்டாடப்படக் கூடியது. தெய்வீகமான அந்த அவதார புருஷனாக எல்லோருக்கும் அருள் புரிய பரமாத்வாக அவதாரம் செய்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து ரோகிணி என்று வருகிறதோ அன்று கொண்டாடப்படுவது கிருஷ்ண ஜெயந்தி என்பதாகும்.
அஷ்டமி திதி
அஷ்டமி என்பது கிருஷ்ணரின் திதி, அவருடைய திதியை கணக்கிட்டு அவரது பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்றால் கோகுலாஷ்டமி என்று பெயர். தமிழகத்தில் கோயில்களில் அதிகமாக கிருஷ்ண ஜெயந்திதான் கொண்டாடப்படுகிறது.
எதை கொண்டாடுவது
ஆனால் வடஇந்தியாவில் கோகுலாஷ்டமியை விமரிசையாக கொண்டாடுவார்கள். கோகுலாஷ்டமியில் கண்ணனுக்கு விரதமிருந்து கண்ணனுக்கு கால் தடம் போட்டு அவருக்கு பிடித்த பொருட்களை வைத்து எங்க வீட்டுக்கு வா என பலரும் வழிபாடு நடத்துவர். ஒரு சிலர் கிருஷ்ண ஜெயந்தியைத்தான் கொண்டாடுவார்கள். அவரவர் வழக்கப்படி கொண்டாடிக் கொள்ளுங்கள்.
எந்த நேரத்தில் வழிபாடு
கோகுலாஷ்டமி என்பது ஆகஸ்ட் 16 ஆம் தேதி அதிகாலை 1.41 மணி முதல் இரவு 11.13 மணி வரை உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி என்று வருகிறது என்றால் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வருகிறது. கோயில்களில் செப்டம்பர் 14, 15, 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படும்.
கிருஷ்ண ஜெயந்தி 2025
செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி அஷ்டமி திதியானது காலை 9.16 மணிக்கு தொடங்குகிறது. ரோகிணி நட்சத்திரமானது பிற்பகல் 1.17 மணிக்கு தொடங்குகிறது. ரோகிணி நட்சத்திரம், அஷ்டமி திதியில் வழிபாடு செய்ய நினைத்தால் செப்டம்பர் 14 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 11.45 மணி வரை வழிபாடு செய்யலாம்.
கோகுலாஷ்டமி 2025
செப்டம்பர் 15 ஆம் தேதி பாஞ்சராத்திர ஜெயந்தி என கோயில்களில் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 16 ஆம் தேதியும் இந்த கொண்டாட்டம் தொடர்கிறது. கோகுலாஷ்டமி கொண்டாடுவதாக இருந்தால் ஆகஸ்ட் 16ஆம் தேதி அஷ்டமி திதி முழுவதும் இருக்கிறது.
எப்போது கொண்டாடலாம்?
காலை 10.30 மணி முதல் 11.50 மணி வரை வழிபாடு செய்யலாம். மாலை 6 மணிக்கு மேலும் வழிபாடு செய்து கொள்ளலாம். இந்த இரண்டில் எந்த நாளில் வணங்கினாலும் நன்மைதான். கோகுலாஷ்டமியையும் கிருஷ்ண ஜெயந்தியையும் பிரித்து பார்க்க முடியாது. குழந்தை பேறுக்காக காத்திருப்போருக்கு இந்த நாள் ஒரு வரபிரசாதம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications