யோகம் தரும் நாள்.. தங்கம் இல்லாட்டி என்ன? அட்சய திருதிக்கு இதை வாங்குங்க.. கல் உப்பு தரும் பலன்கள்
சென்னை: அட்சய திருதியை தினத்தில் செய்யப்படும் எந்தவொரு நல்ல காரியமும் இரட்டிப்பு பலனை பெற்றுத்தந்துவிடும் என்பார்கள்.. அதனால்தான் எந்தவொரு புதிய முயற்சியையும் இந்த நன்னாளில் துவங்குவார்கள்.. அதேபோல அட்சய திருதி என்றாலே குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும் என்று நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், ஏழ்மை நிலையில் உள்ளவர்களால் தங்கம் வாங்க முடியாது. அப்படியானால் என்ன செய்யலாம்?
அட்சய திருதியை நாளில் வியாபாரத்தை சிலர் துவக்குவார்கள்.. சிலர் கட்டிடங்கள் கட்ட பூமி பூஜை செய்வார்கள்.. இதைத்தவிர தங்கம் வாங்குவது, வீடு தானம் செய்வது மற்றும் வழிபாடு செய்வது என எண்ணற்ற காரியங்களில் ஈடுபடுவார்கள். இதனால் நாம் மேற்கொள்ளும் நல்ல காரியங்களும் பல மடங்காக பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

குடும்பத்தில் நிம்மதி
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், அந்த வருடம் முழுவதும் தங்கம் சேரும் என்பதால் பலரும் தங்கம் வாங்க முயல்வார்கள். ஆனால், இப்போதைய தங்கம் விற்கும் விலையில், தங்கத்தை பற்றி நினைத்துகூட பார்க்க முடியாது.. எனவே, வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் கடன்வாங்கியாவது தங்கம் வாங்க முயற்சிப்பார்கள். இதனால், குடும்பத்தில் நிம்மதிதான் கெடும்.. தங்கம் வாங்க வசதியில்லாதவர்கள், வெள்ளி வாங்கலாம்.. வெள்ளியும் வாங்க முடியாமல் போனால், கல் உப்பு வாங்கலாம்.
அட்சய திருதியை நாளில் கல் உப்பு வாங்குவது எதிர்மறையான அதிர்வலைகளை நீக்கி, குடும்பத்துக்குள் நல்லிணக்கத்தை உண்டுபண்ண உதவும்.. அட்சய திருதியன்று உப்பை வாங்கி வீட்டுக்குள் கொண்டு வருவது, வீட்டிற்கு சமநிலை, ஆசீர்வாதம், நீண்டகால ஸ்திரத்தன்மையை கொண்டுவருவதாகவும் கருதப்படுகிறது..
சிறந்த சுத்திகரிப்பான்
அதுமட்டுமல்ல கல் உப்பு என்பது மிகச்சிறந்த சுத்திகரிப்பான்.. ஆற்றலைக் கொண்டு செல்லக்கூடிய அற்புத பொருள்.. எதிர்மறையை உறிஞ்சிவிடும் தன்மை கொண்டது. எனவே எதிர்மறையான அதிர்வலைகள், தீய தாக்கங்கள் இருந்தால், அனைத்தையும் இந்த கல் உப்பு நீக்கிவிடும்.. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கல் உப்பை, அட்சய திருதி நாளில் வாங்கி வீட்டுக்குள் வைத்தால், தூய்மை, சமநிலை மேம்படும். பாசிடிவ் அதிர்வலைகள் பரவும்.. சுற்றுப்புறத்திலும் இணக்கமான சூழ்நிலை ஏற்படும்..
கல் உப்பு, அரிசி
அட்சய திருதி நாளில், வசதியுடையவர்கள் தங்கத்தையே வாங்கினாலும்கூட, கல் உப்பு கட்டாயம் வேண்டுமாம்.. இதனால் வீட்டிற்குள் எதிர்மறை கிரக தாக்கங்களை அமைதிப்படுத்தி, வாழ்வாதாரம் தங்குதடையின்றி செல்ல உதவும்..
அதேபோல அரிசி வாங்கி வீட்டில் வைக்கலாம்.. ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கலாம். அட்சய திருதியை நாளில் அரிசி, உப்பு, போன்றவற்றை வாங்குவது போலவே, தானமும் வழங்குவார்கள். சுருக்கமாக சொல்லப்போனால், குறைவில்லாமல் கொடுப்பதே நிறைவோடு வாழ உகந்த செயல் என்பதுதான், இந்த அட்சய திருதி நாளில் உணர்த்தப்படும் செயலாகும்.












Click it and Unblock the Notifications