வாடகை வீட்டுதாரர்கள் இதை தெரிஞ்சுக்கணும்.. வாடகைக்கு குடி போனால், இந்த 1 பொருளை கையோடு கொண்டு போங்க
சென்னை: வாடகை வீட்டில் குடியிருந்தாலும், சில வாஸ்து பிரச்சனைகள் இருக்கவே செய்யும்.. இதற்கு என்ன செய்யலாம்? குறைவின்றி பணம், நிம்மதி, ஆரோக்கியம், மகிழ்ச்சி அனைத்துமே வாடகை வீட்டில் இருந்தாலும் கிடைக்க என்ன செய்யலாம்? சுருக்கமாக பார்க்கலாம்.
பெரும்பாலானோர் குடியிருக்கும் வீட்டை மாற்றவே யோசிப்பார்கள்.. புதிய வீட்டுக்குக் குடி போவதால் சிலருக்கு நிலைமை தலைகீழாக மாறலாம்.. அல்லது புதிய வீட்டிற்கு போனால், யோகம் அமோகமாக அடிக்கலாம். இதற்கெல்லாம் காரணம் வாஸ்து அமைப்புதான்.

வாடகை வீடு: ஒருவேளை புதிதாக வாடகைக்கு குடிபுக நேர்ந்தால், அங்கு எந்தவிதமான கோளாறுகளும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, வாடகை வீடு பார்க்கும்போது அதன் வாசலானது தெற்கு, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு திசையில் உள்ள வீடுகளைத் தவிர்த்துவிடலாம். அதேபோல, அந்த வீட்டின் கழிப்பறை, சமையலறை, ஷூ வைக்கும் அலமாரி போன்றவை ஒருபோதும் வடகிழக்கு திசையில் இருக்கக்கூடாது. இது வாஸ்து தோஷத்திற்கு வழிவகுக்கும்.
குடிபோகும் வீட்டில் வெளிச்சமும் காற்றோட்டமும் அவசியம் இருக்க வேண்டும். வீட்டின் வடிவம் எப்பொழுதுமே சதுரம் அல்லது செவ்வமாகத்தான் இருக்க வேண்டும். வேறு எந்த வடிவத்திலேயோ அல்லது வேறு எந்த நீட்டிப்போ இருக்கக்கூடாது.
பழைய வீடு: பழைய வீட்டை காலி செய்யும்போதே, தேவையில்லாத பொருட்கள், உபயோகமில்லாத, உடைந்த பொருட்களை தவிர்த்துவிடலாம்.. எப்போதுமே பால் காய்ச்சிவிட்டு குடிபுக நேரும்போது, திருஷ்டி கழித்துவிட்டு செல்ல வேண்டும்.. கற்பூரம் ஏற்றி வைத்து வழிபடும்போது, துர்சக்தி எதுவானாலும் நீங்கிவிடும்..
பழைய வீட்டிலுள்ள பொருட்களை எல்லாம் எடுப்பதற்கு முன்பு, ஒரு எலுமிச்சம் பழத்தை வலது கையில் வைத்துக்கொண்டு, பூஜையறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். தற்போதுள்ள வீட்டில் நீடித்து வரும் ஆரோக்கியம், அதிர்ஷ்டம், மகிழ்ச்சி அத்தனையும் குடிபுகும் வீட்டிற்குள்ளும் நீடிக்க வேண்டும் என்றும், இந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் குல தெய்வமும், காவல் தெய்வமும், இஷ்ட தெய்வமும் புது வீட்டிற்கும் வந்து பாதுகாக்க வேண்டும் என்றும் சொல்லி சங்கல்பம் மேற்கொள்ள வேண்டும்.
மஞ்சள் துணி: பிறகு, வலது கையிலுள்ள எலுமிச்சையை மஞ்சள் துணியில் ஒன்றில் முடிச்சு போல கட்டி, நீங்கள் பயன்படுத்தும் பையில் போட்டு வைத்துவிட வேண்டும். பிறகு புதிய வீட்டிற்கு சென்று, பொருட்களை அடுக்கி வைத்து, பூஜை அறையையும் சுத்தம் செய்து விளக்கேற்றி வைத்ததுமே, பையிலுள்ள எலுமிச்சம் பழத்தை பூஜையறையின் அலமாரியில் வைத்து, வேண்டி கொள்ளலாம்.
இதனால், அந்த எலுமிச்சம்பழத்தின் மூலம், பழைய வீட்டிலிருந்த தெய்வங்கள் அந்த எலுமிச்சம் பழத்தின் மூலம் புது வீட்டிலும் குடியேறிவிடும் என்பது நம்பிக்கையாகும். அதேபோல, பஞ்சலோக நாணயங்களை, நல்ல நேரம் பார்த்து வாங்கி வந்து, வாசற்படிக்கு மேல் ஒட்டிவைக்கலாம். இதனால் துர்சக்திகள், எதிர்மறை அதிர்வுகள் குடும்பத்தை அண்டாது.. மீன் தொட்டிகளை வாங்கி வளர்ப்பதாலும், கெட்ட சக்திகள் விலகிவிடும்.
சரியான மாதம்: அதேபோல, வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் வீடு மாற்றம் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சுப நாட்கள் பற்றிய தகவல்களை ஜோதிட வல்லுனர்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.. அந்தவகையில், சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி மாதங்களில் குடிபுகலாம்.. வளர்பிறை திங்கள், புதன், வியாழன், வெள்ளிகிழமைகளில் வீடு மாற்றலாம்.. பஞ்சமி, திரிதியை, சப்தமி, தசமி திதியாகவும், ரிஷபம், துலாம், தனுசு, மீனம் திரி லக்கனத்திலும் இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications