வீடு வாடகைக்கு போறீங்களா? குடியேறும் வீட்டில் தோஷம் உள்ளதா? அப்ப இந்த வாஸ்து டிப்ஸ் பாருங்க
சென்னை: பெரும்பாலானோர் குடியிருக்கும் வீட்டையே காலி செய்ய யோசிப்பார்கள்.. காரணம், குடியேறும் வாடகை வீட்டில் எந்த அளவுக்கு நன்மைகள் கிடைக்கும்? அந்த வீட்டில் ஏதாவது தோஷம் இருக்குமா? வாஸ்து சரியாக இருக்குமா? என்பது போன்ற குழப்பங்களும் சந்தேகங்களும் எழக்கூடும்.. வாடகை வீட்டில் குடியேறும்போது, அங்குள்ள தோஷம் வாடகைதாரர்களை சேருமா? அல்லது வீட்டின் உரிமையாளரை சேருமா? இவைகளை பற்றியெல்லாம் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
வாடகை வீட்டை மாற்றம் செய்யும்போது, சுப நாட்களை அறிந்து மாற்றம் செய்ய வேண்டும்.. சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி மாதங்களில் குடிபுகலாம்.. வளர்பிறை திங்கள், புதன், வியாழன், வெள்ளிகிழமைகளில் வீடு மாற்றலாம்.. பஞ்சமி, திரிதியை, சப்தமி, தசமி திதியாகவும், ரிஷபம், துலாம், தனுசு, மீனம் திரி லக்கனத்திலும் இருக்க வேண்டும்.

வீட்டை காலி செய்யும்போதே, பழைய வீட்டில் தேவையில்லாத பொருட்கள், உபயோகமில்லாத, உடைந்த பொருட்களை தவிர்க்க வேண்டும்.. பால் காய்ச்சிவிட்டு குடிபுக நேரும்போது, திருஷ்டி கழித்துவிட்டு செல்லவேண்டும். ஒரேயொரு கற்பூரம் ஏற்றி வைத்து வழிபடும்போது, துர்சக்தி எதுவானாலும் அங்கிருந்து விலகிவிடும்.
தெற்கு வாசல்
வாடகை வீடு பார்க்கும்போதே, அதன் வாசலானது தெற்கு, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்தால் அவைகளை தவிர்த்துவிடலாம். வாடகை வீட்டிற்கு சிறந்த திசை வடகிழக்கு ஆகும்.. அதேபோல வடமேற்கு, கிழக்கு மற்றும் மேற்கு போன்ற திசைகளிலும் வீடு வாடகைக்கு எடுக்கலாம்.
குடியேறும் வாடகை வீடு, வெளிச்சமும் காற்றோட்டமும் இருக்கும்படி பார்த்து வேண்டும். வீட்டின் வடிவம் சதுரம் அல்லது செவ்வகமாக இருப்பது சிறப்பு.. நீளமாகவோ அல்லது வேறு வடிவத்தில் இருக்கக்கூடாது.
அதேபோல, அந்த வீட்டின் கழிப்பறை, சமையலறை, ஷூ வைக்கும் அலமாரிகள் வடகிழக்கு திசையில் இருக்கக்கூடாது. இது தோஷத்தை உண்டுபண்ணிவிடும்.
வீட்டில் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும் இடம் சமையலறையாகும்.. எனவே சமையலறை ஒருபோதும் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு திசைகளில் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், குடும்பத்தில் பல சிக்கலை தந்துவிடும்..
தோஷம் பாதிப்பு யாருக்கு
வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷமானது, அந்த வீட்டின் ஓனரைப் பாதிக்குமா அல்லது அந்த வீட்டில் குடியிருப்பவர்களை பாதிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இதனைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கிறது.
ஆனால் பொதுவாக வாஸ்து நிபுணர்கள் சொல்வது என்னவென்றால், வீட்டில் வசிப்பவர்களைத்தான் வாஸ்து தோஷம் பெருமளவில் பாதிக்குமாம்.
அதேசமயம் வீட்டின் சொந்தக்காரரும் குறிப்பிட்ட அளவு பாதிப்பிற்குள்ளாவார். ஆனால் பெரும்பாலும் வீட்டில் வசிப்பவர்களே வாஸ்துவால் பாதிக்கப்படுவதாகவும், வீட்டின் சொந்தக்காரர் அந்த வீட்டில் வசிக்கத் தொடங்காத வரை அந்த வீட்டின் வாஸ்து தோஷம் அவர்கள் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.
ஆவணங்கள் பாதிப்பு
அதுமட்டுமல்ல, தங்கியிருக்கும் வாடகை வீட்டின் ஆவணங்கள் எல்லாம் வீட்டு உரிமையாளரின் பெயரில் இருந்தாலும்கூட, அந்த வீட்டில் தங்கியிருக்கும் நபர்களை மட்டுமே பாதிக்கும் என்று கலங்குகிறார்கள்.. எனவே, வாடகை வீட்டிற்க்கு குடியிருக்க செல்பவர்கள் கட்டாயம் வாஸ்து சரியாக உள்ள வீட்டை தேர்வு செய்து செல்வது நல்லது.
ஒருமனை கட்டப்பட்ட கட்டிடமாக இருந்தாலும், தொழிற்சாலையாகவோ, வணிகவளாகமாகவோ இருந்தாலும், உள்ளது உள்ளபடி அப்படியே வாங்குவதற்கு முன்பி, அந்த கட்டிடம் வாஸ்துபடி முழுமையாக கட்டப்பட்டுள்ளதா அல்லது வாங்கியபின் சரிசெய்யலாமா என்பதையும் பார்க்க வேண்டும். இதனைதான் வாஸ்துபிரசன்னம் பார்ப்பது என்பார்கள்.
கரண்ட் கம்பம் வேண்டாம்
எனவே கைதேர்ந்த வாஸ்து நிபுணர்களை அழைத்துச்சென்று, 100 சதவீதம் துல்லியமாக அந்த கட்டிடத்தின் எதிர்கால நிலையை தெரிந்து கொள்வது அவசியம்.
மயானம், மருத்துவமனை, போக்குவரத்து நெரிசலான மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் வாடகை வீடு எடுக்க வேண்டாம் என்றும் வீட்டைச் சுற்றி செல்போன் டவர், கரண்ட் கம்பம் இருக்கக் கூடாது என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications