முருக பக்தர்களுக்கு குட்நியூஸ்.. மார்கழியில் பழனி மலைக்கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு
பழனி: மார்கழி மாதம் முழுவதும் பழனி மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 17 முதல் ஜனவரி 15ஆம் தேதி வரைக்கும் அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.
மார்கழி மாதம் மகத்துவமான மாதம். இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு அனைவரும் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும், சிவ ஆலயங்களில் திருவெம்பாவையும் ஒலிக்கும். முருகன், ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள் அதிகாலையிலேயே கோவிலுக்கு வருகை தருவார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் மற்றும் உபகோயில்களான திருஆவினன்குடி கோயில், பெரியநாயகி அம்மன் கோயில், லட்சுமி நாராயண பெருமாள் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கி ஜனவரி 15ஆம் தேதி வரை தனுர் எனப்படும் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.
காலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். திருக்கோயிலின் உபகோயிலான பழநி ரதவீதியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயில், பாலசமுத்திரத்தில் உள்ள அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் டிசம்பர் 23ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை 4 மணிக்கு நடைபெறும்.
பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 27ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் நடைபெறும். ஜனவரி 15ம் தேதி தனுர் மாத பூஜை பூர்த்தி நடைபெறும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications