இந்த 5 விஷயம் உங்க கனவில் நீங்க அதிர்ஷ்டசாலிதான்.. வாழை இலை, வாழைப்பூ, வாழைத்தார் தரும் சொப்பன பலன்
சென்னை: வாழை மரம் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா? வாழையிலையில் சாப்பிடுவது, வாழைத்தார்கள், வாழைப்பூக்கள் போன்றவற்றை கனவில் கண்டால், அதற்குரிய பலன்களும் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளன. அதை சுருக்கமாக பார்ப்போம்.
பொதுவாக, மனிதர்கள் பகலில் எதை பற்றி அதிகமாக யோசித்து கொண்டிருக்கின்றார்களோ, அதுவே அவர்களுக்கு இரவு கனவாக வருகிறது என்பார்கள்.. எனினும், கனவுகளில் நல்ல கனவு மற்றும் கெட்ட கனவு என்று இரண்டு உண்டு.. இதற்கான தனித்தனி பலன்களும் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளன. அந்தவகையில் வாழை மரத்தை பற்றி பார்ப்போம்.

வாழைகள்: காரணம், ஆன்மீகத்தில் வாழைக்கென்று பிரத்யேக இடமுண்டு.. புனிதமான இந்த மரத்தின் மையத்தில் உள்ள வாழைத்தண்டு நீளமானதாக இருக்கும்.. இந்து மத கலாச்சாரத்தின்படி, மக்கள் வாழை இலையில் உணவருந்துவது வழக்கம். திருமணம், கோவில் நிகழ்ச்சிகள் என பல்வேறு இடங்களில் பயன்படுத்தும் இலையாக வாழை இலை உள்ளது..
அதுமட்டுமல்லாமல், வாஸ்து சாஸ்திரத்தின் படி, வாழை செடிகளை வீட்டில் வைப்பதில் பல நன்மைகள் உள்ளன. வாழைமரம் வீட்டில் இருந்தால் குரு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கையாகும்.. திருமணத்தில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கிவிடும்..
பராமரிப்பு: வாழை மரம் விஷ்ணு, தாய் லட்சுமி மற்றும் குரு பிருஹஸ்பதி ஆகியோருடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. எனவே, நீங்கள் வாழை மரத்தை பராமரிக்கவில்லையானால், அது குடும்பத்திற்கு அசுபமாகவும், நஷ்டமாகவும் கருதப்படுகிறது என்கிறது ஜோதிடம்.
எனவேதான, வாழை மரம் பற்றி கனவுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன..
கனவில், ஒருவரின் வீட்டுக்குள் வாழை மரம் வளர்ந்தால் அவருக்கு ஆண் குழந்தை பிறக்குமாம். வியாபாரம் செய்பவர்கள் கனவில், வாழை மரம் வந்தால், அது லாபத்தையும் மற்றும் பக்தியையும் மற்றும் சந்நியாசத்தின் மீதுள்ள பற்றையும் குறிக்கும்..
வாழைப்பழம்: உங்கள் கனவில் வாழைப்பழம் வந்தால் அது நன்மைக்குரியதாகவே கருதப்படுகிறது.. வாழைப்பழம் கனவில் வந்தால், வாழ்க்கையில் புத்துணர்ச்சி கிடைத்து, நன்மை தரும் மாற்றங்கள் நடக்குமாம்.
வாழையிலையை கனவில் கண்டால், உடைகள், அன்பு, பரிவு, தாரள சிந்தையுள்ள மனிதர், சன்மார்க்கவாதி அல்லது நல்ல நடத்தையை உடைய ஒரு மனிதனை குறிப்பதாகும்.. வாழை இலையில் சாப்பிடுவது போல் கனவு கண்டால், அது லாபத்துக்கான அடையாளமாக கருதப்படுகிறது. நீங்கள் ஏதாவது தொழில் செய்வதாக இருந்தால், அது விரைவில் வெற்றி பெறும் என்றும், தனலாபத்துக்கான வரவாகும் என்றும் சொலகிறார்கள்.
வாழைத்தார்: வாழைத்தார் கனவில் வந்தால், விரைவில் திருமணம் கூடி வரப்போகிறது என்று அர்த்தமாம்.. இந்த திருமணம் உங்களுக்கோ அல்லது உங்களுடைய குடும்பத் சார்ந்தவர்களுக்கோ நடக்கும்.. மொத்தத்தில் சுபநிகழ்ச்சியை வாழைத்தார்கள் குறிக்கின்றன. கனவில் வாழைப்பூ வந்தாலும், அது நன்மைக்குரிய அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.. உங்களை சுற்றியிருந்த கஷ்டங்கள் அத்தனையும் விலகி, எதிர்பார்த்த விஷயங்களில் பலன்கள் கிடைக்க போகிறது என்று அர்த்தமாம். ஆகும்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications