குரு பூர்ணிமா... இறைவனுக்கும் மேலானவர் குரு... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
சென்னை: இறைவனுக்கும் மேலானவராக வணங்கப்படுகிறார் குரு. நம்முடைய வாழ்க்கைக்கு வழிகாட்டிய குருவிற்கு வணக்கம் செலுத்தும் நாளாக குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. குரு பூர்ணிமாவை முன்னிட்டு இன்றைய தினம் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.
குரு பூர்ணிமா இந்தியா, நேபாளம் நாடுகளில் உற்சாகமுடன் கொண்டாடப்படுகிறது. நேபாளத்தில், மக்கள் இந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு குரு பூர்ணிமா தேதி இன்று ஜூலை 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

குரு ஒரு ஆசிரியர், வழிகாட்டி மாணவர்களை சரியான பாதையில் வழிநடத்துகிறார். குரு என்ற சொல் கு மற்றும் ரு என்ற இரு சொற்களிலிருந்து உருவானது . சமஸ்கிருத மூலமான கு என்பது இருள் அல்லது அறியாமை மற்றும் ரு என்று பொருள்படும் அந்த இருளை அகற்றுபவரைக் குறிக்கிறது. எனவே, நமது அறியாமை என்னும் இருளை நீக்குபவர் குரு.
யோக மரபில், சிவன் ஆதி குருவாக அல்லது முதல் குருவாக மாறிய நாள் குரு பூர்ணிமா என்று கூறப்படுகிறது. அவர் சப்தரிஷிகளுக்கு யோகத்தை இந்த நாளில்தான் அனுப்பினார் என்று நம்பப்படுகிறது. குரு பூர்ணிமா தினமான இன்று பிரக்யாராஜ் திருவேணி சங்கமத்தில் ஏராளமானோர் இன்று புனித நீராடினர்.

குரு பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் இன்றைய தினம் தங்களை வழி நடத்திய குருவிற்கு வணக்கமும் வாழ்த்தும் கூறி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications