இன்று அனுமன் ஜெயந்தி! தப்பித் தவறியும் ஆஞ்சநேயர் படத்தை இந்த இடத்தில் வைக்காதீர்கள்!
சென்னை: அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படும் நிலையில் இன்று என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்பதை பார்க்கலாம். அது போல் அனுமன் ஜெயந்தியில் வாயுக்குமாரன் அனுமனை எப்படி வணங்கலாம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
அஞ்சனை மைந்தன் அனுமன் பிறந்த நாள் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆஞ்சநேயர் கோயில்களில் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. மேலும் வடை மாலை செய்யும் பணிகளும் நடந்தன.

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம், வெற்றிலை மாலை சூட்டப்பட உள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் பவுர்ணமியும் சேர்ந்து வருவதால் அனுமன் ஜெயந்தி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டு நவராத்திரி சைத்ராவிற்கு பதிலாக அனுமன் ஜெயந்தியின் போது பௌர்ணமி விழுகிறது. இதனால் இந்த நாள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்றைய தினம் அனுமன் புகைப்படத்தை வைத்து பூஜை செய்யலாம்.
அது போல் வாஸ்துபடி அனுமன் புகைப்படத்தை எங்கு வைக்கலாம் என்பதை பார்க்கலாம். அனுமன் பிரம்மச்சரியம் இருப்பதால் அவருடைய புகைப்படத்தை படுக்கை அறையில் வைக்கவே கூடாது. அப்படி வைத்திருந்தால் உடனடியாக எடுத்துவிடுங்கள்.
அப்படி எடுக்காவிட்டால் வாழ்க்கையில் உள்ள தீயவிளைவுகள் எதுவும் விலகாமல் உங்களுக்கு தீமையை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். ராம பக்தனான அனுமனின் படத்தை தெற்கு திசையில் வைத்து வழிபட்டால் சிறப்பானது என்கிறார்கள்.
அனுமன் தனது சக்திகளை எல்லாம் தெற்கு திசையை நோக்கித்தான் (இலங்கை) பயன்படுத்தினாராம். இந்த திசையில் இவருடைய புகைப்படத்தை வைப்பதன் மூலம் பணத்தட்டுப்பாடு ஏற்படாது. கெட்ட காரியங்களில் இருந்து அனுமன் உங்களை காப்பாற்றுவார்.
வடக்கு திசையில் அனுமன் படத்தை வைத்தால் தெற்கு திசையில் இருந்து வரும் எதிர்மறை சக்திகளை அனுமன் தடுத்து நன்மை செய்வார் என்கிறார்கள். வாஸ்து சாஸ்திரத்தின்படி இது மங்களகரமான திசை என்றும் சொல்லப்படுகிறது.
உங்களுக்கு தோஷங்கள் இருப்பதாக இருந்தால் வீட்டில் பஞ்சமுக ஆஞ்சநேயர் படத்தை வைக்கலாம். அது போல் சஞ்சீவி மலையை தூக்கிச் செல்லும் ஆஞ்சநேயரின் படத்தையும் வைக்கலாம் என்கிறார்கள். வீட்டில் இருக்கும் அனுமனின் படத்திற்கு தினமும் செந்தூரம் பூச வேண்டும். இதனால் அனுமன் மகிழ்ச்சி அடைவாராம். அது போல் முடிந்த போது லேசாக வெண்ணெய்யையும் காப்பு போல் தடவி விடலாம். எல்லாவற்றையும் விட ஸ்ரீராமஜெயம் எனும் மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருந்தால் அனுமனுக்கு மிகவும் பிடிக்கும். தன்னை காட்டிலும் ராமரை வழிபடும் பக்தர்களுக்கே அவர் நிறைய செய்வார் என்கிறார்கள்.
-
வைகாசி விசாகம் 2026: முக்கியத்துவம், புராண கதை: வைகாசி விசாக தேதி மற்றும் பூஜைக்கான நேரம் -
பித்ருக்களின் ஆசியைப் பெற வேண்டுமா? சனி அமாவாசையில் தவறவிடக் கூடாத தர்ப்பண முறைகள்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications