ஆடி அமாவாசை! சதுரகிரி மலையில் அதிசய ஜோதி புல்! பழனிக்கும் சதுரகிரிக்குமான தொடர்பு என்ன?
சென்னை: ஆடி அமாவாசை தினத்தன்று மிகவும் விசேஷம் கொண்ட சதுரகிரி மலையில் இத்தனை தீர்த்தங்களும் எண்ணற்ற மூலிகைளும் இருக்கிறது. இங்கு இன்றும் ரிஷிகளும் சித்தர்களும் அருவமாக இருப்பதாக நம்பப்படுகிறது. சதுரகிரி மலையின் சிறப்புகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: சித்தர்கள் வாழும் சதுரகிரி மலை
ஆடி அமாவாசை 🌑
தை அமாவாசை🌑
நவராத்திரி கொலு உற்சவம்

சதுரகிரியும் திருவண்ணாமலையும் எத்தனை முறை சென்றாலும் ஒவ்வொரு முறையும் அதன் பிரம்மாண்டத்தை உணர்வதில் தவறியதே இல்லை. நோய் தீர்க்கும் மலை; சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும் மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள்.
சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை சேகரித்து செல்கிறார்கள். திசைக்கு நான்கு கிரிகள் வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர். தாணிப்பாறை அடிவாரம் கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம் மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை " சஞ்சீவி மலை " என்கின்றனர்.
சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது. ஆடி அமாவாசை முக்கிய விழா, தை அமாவாசை , மகா சிவராத்திரி , சித்ரா பவுர்ணமி மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும். பழனியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்த போதே செய்ததாக கூறப்படுகிறது.
இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்கு இந்த புல்லை உபயோகித்து உள்ளார்கள். மகாலிங்கம் கோயில் வடக்கில் ஊஞ்சல் கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.
ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும் தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.
சதுரகிரி மலையில் மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர். மலைக்கு மேல் சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும் உங்கள் வயிறை குளிரவைக்க ஸ்ரீலஸ்ரீ காளிமுத்து சுவாமி மடம் உள்ளது. உங்களுக்கு குறைந்தபட்சம் கஞ்சியோ கூழோ பழைய சோறோ நிச்சயம் கிடைக்கும்.
24 மணி நேரமும் என்பது தான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால் முன் கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும். சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர்.
சதுரகிரியில் தீர்த்தங்கள்.
சந்திர தீர்த்தம்: சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் " சந்திர தீர்த்தம்" இருக்கிறது . இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை , காமம் , குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.
கௌண்டின்னிய தீர்த்தம் : சந்திர தீர்த்தத் திற்கு வடபுறத்தில் உள்ளது இந்த தீர்த்தம் இது தெய்வீக தன்மை வாய்ந்த நதியாகும் . வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும் ரிஷிகளும் சிவபெருமானிடம் வேண்ட ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு லிங்கத்தில் மறைந்தார் என்பது ஜதீகம்.
கங்கை, கோதாரி, கோமதி , சிந்து, தாமிரவருணி , துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளில் நீராடிய பலனுண்டு. இந்த நதியில் நீரா டுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு " பாவகரி நதி " என்னும் பெயரும் உண்டு.
சந்தன மகாலிங்கம் தீர்த்தம்: இது சதுரகிரியின் மேல் " காளிவனம் " என்கிற இருண்ட வனம் ஒன்று உள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக சிவபெருமானை விட்டு பிரிந்து அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும்.
இப்புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும். இது தவிர சதுரகிரியில் பார்வதிதேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய திருமஞ்சனப் பொய்கை உண்டு. காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட பிரம்மா தீர்த்தம் ஒன்று காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது. இதுதவிர கோரகர், இராமதேவர் , போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கபட்ட பொய்கைத் தீர்த்தம்.
பசுக்கிடைத் தீர்த்தம் குளிராட்டி தீர்த்தம் போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன. மகாலிங்கம் கோயிலில் இருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய் கையில் நீர்வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை மகரிஷிகளும் சித்தர்கள் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகிரியில் வீற்றிருக்கிறார்கள். இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications