மறந்தும் இந்த மாதத்தில் வீடு ஷிப்ட் பண்ணாதீங்க.. கிரகப்பிரவேசத்துக்கு பெஸ்ட் நாள் எது தெரியுமா? வாவ்
சென்னை: வாடகை வீடு அல்லது சொந்த வீடு என எங்கே நாம் குடிபுகுந்தாலும், அதற்குரிய வழிவகைகளை செய்ய வேண்டும். அந்தவகையில், வாடகை வீட்டிற்குள் நுழைவதற்கான உகந்த மாதங்கள் என்ன தெரியுமா? கிரகப்பிரவேசம் செய்யும்போது மறக்கக்கூடாது விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
நாம் நிரந்தரமாக வாழப்போகும் வீடு என்பதால், ஒரு கோவில் போலவே பாவிக்க வேண்டும்.. அந்தவகையில் புதுவீட்டில் கிரகப்பிரவேசம் செய்தால், பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளாகவோ, லக்ன முகூர்த்தமான 6 மணி முதல் 7 மணிக்குள்ளாகவோ செய்துவிட வேண்டும்.. ஆனால் காலை 9 மணிக்கு மேல் கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது.

கோமாதா: வீட்டின் உரிமையாளர்கள், வேட்டி, துண்டு, புடவை அணிந்திருக்க வேண்டும்.. வீடு கட்டியிருக்கும் பகுதியில் உள்ள ஒரு கோபுர வாசலில், சுவாமி படம், அரிசி, உப்பு, பருப்பு, நிறைகுடம், காமாட்சி தீபம், பழங்கள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி, தாம்பூலம், தேங்காய் போன்றவற்றை வைத்திருக்க வேண்டும்.. அப்போது மங்கல வாத்தியங்கள் முழங்க வீட்டு வாசலுக்கு மந்திரம் பாடிக்கொண்டே வரவேண்டும்
அதேபோல, வீட்டு வாசலில் ஒரு பசுவையும் , கன்றையும் அழைத்து வந்து வீட்டை பார்த்தபடி நிறுத்த வேண்டும். அலங்கரிக்கப்பட்ட பசுவுக்கும், கன்றுக்கும், துணி, மாலை அணிவித்து, அரிசியும் வெல்லமும், அகத்திக் கீரையையும் தர வேண்டும். தூப, தீபம் காட்ட வேண்டும். பிறகு, அந்த வீட்டு பெண் கையில் காமாட்சி விளக்கை ஏந்தியபடி கணவனுடன் சேர்ந்து, பசுவையும் கன்றையும் வீட்டிற்குள் அழைக்க வேண்டும்.. அதன்பிறகே வீட்டிற்குள் விநாயகர் பூஜை, கலச பூஜை, யாக வழிபாடு போன்றவை நடத்த வேண்டும்.
பால் காய்ச்சலாம்: 9 அல்லது 4 செங்கல் வைத்து, அதற்கு பூ, சந்தனம், குங்குமம் வைத்து, அதன்மீது புதிய பாத்திரம் வைத்து, பால் காய்ச்ச வேண்டும்.. பால் பொங்கிவரும் போது கடவுளை பிரார்த்திக்க வேண்டும்.. பிறகு சாமி படத்தின் முன்பாக காய்ச்சிய பாலை வைத்து, விநாயகர், குலதெய்வம், இஷ்ட தெய்வம், லட்சமி, சரஸ்வதி ஆகியோரை நினைத்து ஆரத்தி காட்ட வேண்டும்.
வாடகை வீடு குடிபோக வேண்டியிருந்தால், சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, பங்குனியில் குடியேறலாம்.. ஆனால் கிரகப்பிரவேசம் செய்து குடிபோவதாக இருந்தால், பங்குனி மாதத்தை தவிர்த்துவிடலாம். ஆனால், மாசி, பங்குனி, ஆனி, ஆடி, புரட்டாதி, மார்கழி போன்ற மாதங்களில் வீடு குடிபோதை தவிர்க்கலாம். அதேபோல, திங்கள், புதன், வியாழன், வெள்ளி போன்ற நாட்களை வீடு குடிபோக தேர்ந்தெடுக்கலாம்.
வாடகை வீடு: அதேபோல, ஒருவர் தங்கியிருக்கும் வாடகை வீட்டின் ஆவணங்கள் எல்லாம் வீட்டு உரிமையாளரின் பெயரில் இருந்தாலும், அந்த வீட்டில் தங்கியிருக்கும் நபர்களை மட்டுமே பாதிக்கும் என்று நம்புகிறார்கள்.. அதனால், வாடகை வீட்டிற்க்கு குடியிருக்க செல்பவர்கள் கட்டாயம் வாஸ்து சரியாக உள்ள வீட்டை தேர்வு செய்து செல்வது நல்லது என்று அறிவுறுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications