மகாலட்சுமி வீடு தேடி வரும் போது மிஸ் பண்ணாதீங்க..இந்த தவறுகளை செய்தால் திரும்பி பார்க்க மாட்டாங்க
சென்னை: செல்வந்தராக குபேரன் அருளும், அன்னை மகாலட்சுமியின் அருளும் வேண்டும். மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை நம் மீதும் நம்முடைய வீட்டின் மீதும் பட்டாலே செல்வ வளம் அதிகரிக்கும். திடீர் பண வருமானம் வரும்.
நல்ல எண்ணம் கொண்டவர்கள் மத்தியில் மகாலட்சுமி எப்பொழுதும் நிறைந்திருப்பாள். யாருடைய வீட்டில் மகாலட்சுமி அருளால் செல்வம் நிறைந்திருக்கும் என்று பார்க்கலாம்.
சிலர் எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கையில் தங்காது வீண் செலவாகிவிடும். சிலருக்கோ ஓடி ஓடி உழைத்தாலும் பணம் கையில் வராது. கையிலே வாங்கினேன் பையிலே போடலை காசு போன இடம் தெரியலை என்று புலம்புவார்கள். பண வருமானம் அதிகரிக்கவும், வரும் பணம் நம்முடைய வீட்டில் தங்கவும் சில செயல்களை செய்ய வேண்டும்.
பாற்கடலில் அவதரித்தவள் அன்னை மகாலட்சுமி. இந்த மகாலட்சுமி தான் இந்திரன் இழந்த செல்வத்தை மீண்டும் அவனுக்குக் கொடுத்தாள். மேலும் குபேரனை அளகாபுரிக்கு அதிபதியாக ஆக்கினாள். கிருஷ்ணனின் நண்பனான குசேலனுக்கு அளவற்ற நிதியைக் கொடுத்தாள்.
மகாலட்சுமியின் அருளைப் பெற்றவர்களுக்கு பதினாறு வகையான பேறுகளும் வந்து சேரும்.லட்சுமி செல்வத்தைப் பெற்றவர்களுக்கு மதி மயக்கம் தோன்றாது. இந்தச் செல்வத்தைப் பெற்றவர்கள் மற்ற மனிதர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள். தர்ம வாழ்வை மேற்கொள்வார்கள். இந்த செல்வம் ஏழு தலை முறையையும் தாண்டி நிலைத்து நிற்கும். இந்த செல்வம் வளர்பிறை சந்திரனைப் போன்று ஓங்கி வளரும். இயல்பிலேயே கொடை உள்ளம் கொண்டவர்களின் மீது தான் லட்சுமியின் கடைக்கண் பார்வை படும்.

கணக்கு அவசியம்
நம்மிடம் வரும் பணத்தை மதித்து அதனை சேர்த்து வைத்தால் மட்டுமே அன்னை மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். நாம் பணத்தை மதிக்காமல் தேவையற்ற செலவுகள் செய்தால் நமக்கு வரவேண்டிய பணம் கூட வராமல் போய்விடும். நாம் செய்யும் செலவு குறித்து கணக்கு எழுதி வைப்பது அவசியம். கணக்கு பார்த்து செலவு செய்பவர்களிடம் காசு நிற்கும். கணக்கு பார்த்து எதற்கு செலவு செய்ய வேண்டும் எதற்கு செலவு செய்யக்கூடாது என்று பார்த்து பார்த்து செலவு செய்ய வேண்டும். கண்டபடி செலவு செய்பவர்களிடம் மகாலட்சுமி நிரந்தரமாக தங்குவது இல்லை.

இந்த தவறை செய்யாதீர்கள்
பணம் லட்சுமியின் அம்சம். வலது கையில்தான் கொடுக்க வேண்டும் வாங்க வேண்டும். தெரியாமல் கூட இடது கையினால் பணத்தை கொடுக்கவோ வாங்கவோ கூடாது. இந்த தவறை செய்தால் மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அதன் பின்னர் பணப்பிரச்சினையும் ஆரம்பமாகிவிடும்.

நன்றியோடு இருங்கள்
நமக்கு உதவி செய்தவருக்கு நாம் நன்றியோடு இருக்க வேண்டும். பணம் கொடுத்தும் நகை கொடுத்தும் உதவி செய்தவர்களுக்கு நன்றியோடு நாம் உதவியை திருப்தி செலுத்த வேண்டும். நம்மிடம் இருக்கும் பணத்தை வைத்து நாம் திருப்தி பட வேண்டும். அடுத்தவருக்கு இருக்கும் செல்வத்தை பார்த்து ஒருபோதும் ஆதங்கமோ, பொறாமையோ படக்கூடாது.

கீழே வீசி விளையாடக்கூடாது
பணம், காசு, சில்லறைகளை சிதறவிடக்கூடாது. சிலர் தேவையில்லாமல் பணத்தை வீசி விளையாடுவார்கள். நாணயங்களை கால்களில் மிதிப்பார்கள். தெரியாமல் கூட பணத்தை வீடுகளில் கண்ட இடங்களில் போட்டு வைக்கக்கூடாது. சில்லறைகளை கண்ட இடங்களில் போட்டு வைக்கக்கூடாது.

விளக்கேற்றுங்கள் விடியல் வரும்
காலை 6 மணி மற்றும் மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்றி வழிபடுபவர்கள் இடத்தில் மகாலட்சுமி எப்பொழுதுமே நிறைந்திருப்பாள். விளக்கேற்றிய பிறகு வீட்டில் இருந்து தயிர்,நெய், உப்பு, பணம் போன்றவைகளை தரக்கூடாது. விளக்கு ஏற்றாமல் இருக்கும் இல்லங்களிலும் அடிக்கடி பண பிரச்சினை வரும். வாசல் படி என்பது குலதெய்வம் வசிக்கும் ஒரு இடம் ஆகும். இந்த இடத்தில் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும். இங்கு அமர்ந்து கதை பேசுவது அல்லது தலை வாருவது போன்ற செயல்களை செய்பவர்கள் இடத்தில் பணம் தங்குவதில்லை.

நல்ல எண்ணம் அவசியம்
நல்ல எண்ணம் கொண்டவர்கள் மத்தியில் மகாலட்சுமி எப்பொழுதும் இருக்கின்றாள். அதீத கோப குணம் கொண்டவர்கள், பிறர் மீது வீண் பழி சுமத்துபவர்கள், புறம் பேசுபவர்கள் இடத்தில் மகாலட்சுமி தங்குவது கிடையாது.
அளவிற்கு அதிகமாக ஆசைப்படுபவர்கள், சோம்பேறித்தனத்துடன் இருப்பவர்கள், இரவு நேரங்களில் துணி துவைப்பவர்கள், அதிக நேரம் தூங்குபவர்கள் போன்ற சோம்பேறிகளிடம் மஹாலட்சுமி தங்குவதற்கு வாய்ப்பில்லை.

ஆடம்பரத்திற்கு கடன் தேவையா?
அடிக்கடி தேவையில்லாமல் கடன் வாங்குபவர்கள் சிலர் இருப்பார்கள். ஆடம்பரத்துக்காக கடன் வாங்குபவர்கள் இடத்தில் கடைசிவரை லட்சுமி தங்குவதில்லை. இதனால் அவர்கள் அடுத்தடுத்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். நம்முடைய தேவைக்கு நாம் சம்பாதித்து செலவு செய்ய வேண்டுமே தவிர, கடனை வாங்கி செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications