வயதானவர்கள்.. பச்சிளம் குழந்தைகள்.. திருப்பதி ஏழுமலையானை ஈஸியாக தரிசனம் செய்வது எப்படி?.. இதோ வழி
திருப்பதி: 1 வயதுக்குட்பட்ட கை குழந்தை வைத்திருப்பவர்களும், மூத்த குடிமக்களும் கூட்ட நெரிசலில் சிக்காமல் திருமலை திருப்பதியில் அருள்பாலிக்கும் ஏழுமலையானை எளிதாக எப்படி தரிசனம் செய்வது என்று பார்க்கலாம்.
திருப்பதி சென்று வந்தால் வாழ்க்கையில் திருப்பம் வரும் என்பது நம்பிக்கை. ஏழுமலையானை தரிசனம் செய்ய பலரும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. வயதானவர்களும், பச்சிளம் குழந்தைகளும் கூட ஏழுமலையானை தரிசனம் செய்ய திருப்பதிக்கு உறவினர்களுடன் வருகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் 42 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர் பக்தர்கள். இதனையொட்டி புரட்டாசி சனிக்கிழமையில் இலவச தரிசன டிக்கெட்டுகளையே ரத்து செய்ய வேண்டியதாகி விட்டது. கடந்த மாதம் பிரம்மோற்சவமும் நடைபெற்றதால் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். செப்டம்பர் மாதம் 21 லட்சம் பக்தர்கள் வழிபட்டுள்ளனர் கோவில் உண்டியலில் 111 கோடியே 65 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 8 லட்சத்து 94 ஆயிரம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். ஒரு கோடியே 11 லட்சம் லட்டுகள் செப்டம்பர் மாதம் விற்பனையாகியுள்ளது.
புரட்டாசி மாதம் மற்றும் அக்டோபர் மாத பிரம்மோற்சவ விழா வருவதால் பக்தர்கள் எண்ணிக்கை இந்த மாதமும் அதிகரிக்கும். உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானமும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாக்கள், விடுமுறை நாட்கள் அடுத்தடுத்து வருவதால் இனி வரும் நாட்களிலும் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பதி கோயிலில் வயதானவர்கள் மற்றும் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தரிசனத்துக்காக நடைமுறையை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. 1 வயதுக்குள்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர் தெற்கு மாட வீதியில் திருமலை நம்பி சன்னதியை அடுத்து சுபதம் நுழைவாயில் வழியாக இலவச தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதற்கு பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
ஆதார் அட்டை அல்லது குழந்தையின் பிறப்புச் சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும். பெற்றோர் மற்றும் கை குழந்தையின் உடன்பிறந்தவர்கள் அனுமதிக்கப்படுவர். அவர்கள் அனைவரின் ஆதார் அட்டைகளையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும். தகுதியுடைய பக்தர்கள் பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை சுபதம் நுழைவாயிலில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். உடன் வரும் உறவினர்களுக்கு அனுமதி கிடையாது.
இந்த தரிசனத்திற்கு டிக்கெட் அல்லது முன்பதிவு செய்ய வேண்டியதில்லை. மாதத்தில் ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்படுவர். விடுமுறை நாட்கள், சிறப்பு விழாக்கள், பிரமோற்சவம் என பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ள நாட்களில் இந்த தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்ய வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications