அடகு வைத்த நகையை சுலபமாக மீட்க..இந்த ஒரு பொருள் போதும்..சிம்பிள் பரிகாரம் ஈஸியா செய்யலாம்
வெள்ளிக்கிழமை அன்று, இந்த பரிகாரத்தை செய்தால் அடகு வைத்த நகையை சுலபமாக மீட்டு விடலாம்சுலபமான, சக்திவாய்ந்த பரிகாரம் இது.
சென்னை: தங்க நகை வாங்குவதற்கு எத்தனை விளம்பரம் வருகிறதோ அதே போல நகையை விற்பதற்கான விளம்பரமும் அடகு வைப்பதற்கான விளம்பரமும் வருகிறது. அடகு நகைகளை மீட்டு வீட்டிற்கு கொண்டு வர நாம் சில எளிய பரிகாரங்களை செய்வது நல்லது. நம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு செய்யும் அந்த பரிகாரத்தின் மூலம் அடகு வைத்த நகைகளை எளிதில் மீட்கலாம்.
பண தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள, தங்க நகைகளை அடமானத்தில் வைத்திருப்போம். அந்த நகையை எப்படி மீட்க போகின்றோமோ? என்ற கவலை, நம்மில் பல பேருக்கு கட்டாயம் இருக்கும். நம்முடைய வருமானத்தை அதிகரித்து நகையை சீக்கிரமே மீட்டெடுக்க வேண்டும் என்றால், நம் வீட்டில் மகாலட்சுமியை வேண்டி வணங்க வேண்டும்.
இதற்கு மிகவும் சிரமப்பட தேவையில்லை. அதிக செலவும் ஆகாது. மகாலட்சுமி அம்சம் என்றாலே அது கல் உப்பு தான். இந்த கல் உப்பில் மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய, இன்னும் சில பொருட்களை சேர்த்து, இந்த பரிகாரத்தை செய்யும் பட்சத்தில், அதற்கான பலனை நம்மால் உடனடியாக பெறமுடியும் என்று நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.

பரிகாரங்கள்
முந்தைய காலங்களில் இப்படிப்பட்ட பரிகாரங்கள் எல்லாம், பெரிய அளவில் செய்யப்பட்டு வந்தன. காலத்திற்கு ஏற்ப, அந்த பரிகார முறைகள் எல்லாமே, சுலபமான முறையில் மாற்றப்பட்டு இருக்கின்றது, என்பதையும் இந்த இடத்தில் நினைவு கொள்ள வேண்டும். அப்படி ஒரு பரிகாரம் தான் இந்த பரிகாரமும் கூட. வீட்டில் இருக்கக்கூடிய உப்பை வைத்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டாம்.

புது கல் உப்பை வாங்குங்கள்
வெள்ளிக்கிழமை அன்று, கடையிலிருந்து சென்று, புது உப்பை வாங்கி வரவேண்டும். ஒரு கண்ணாடி டம்ளரிலோ அல்லது கண்ணாடி பௌலிலோ அல்லது பீங்கான் ஜாடியாக இருந்தாலும் சரி தான், உங்கள் வீட்டில் எது இருக்கிறதோ, அதை இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். பீங்கான், கண்ணாடி இந்த இரண்டினால் செய்யப்பட்ட பொருட்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

கல் உப்பு பரிகாரம்
உங்கள் வீட்டு பூஜை அறையில் அலங்காரத்தை முடித்துவிட்டு, தீபம் ஏற்றி வைத்துவிட்டு, பூஜை அறையிலேயே அமர்ந்து, இந்த பரிகாரத்தை செய்ய தொடங்குங்கள். கண்ணாடி டம்ளரில், புதியதாக வாங்கிய உப்பைக் கொட்டி நிரப்பிக்கொள்ள வேண்டும். உப்பின் மேல் மஞ்சள் பொடியை தூவ வேண்டும். குங்குமத்தையும் தூவ வேண்டும். மூன்றாவதாக பச்சரிசியால் செய்த அட்சதையை தூவி விடுங்கள். இறுதியாக அதன்மேல் ஒரு எலுமிச்சை பழத்தை வைக்க வேண்டும்.

கஷ்டங்கள் தீர பரிகாரம்
இந்த எலுமிச்சை பழத்தை வைப்பிற்கு மகாலட்சுமி திருவுருவப்படத்தின் முன்பு, மகாலட்சுமி தாயாரின் பாதத்தை தொட்டு வருமானம் அதிகரிக்க வேண்டும். கஷ்டங்கள் தீர வேண்டும். அடமானத்தில் இருக்கக்கூடிய நகை சீக்கிரமே மீட்டெடுக்க வேண்டும், என்று வேண்டிக் கொண்டு, அந்த எலுமிச்சை பழத்தை உப்பின் மேல் வைக்க வேண்டும். பரிகாரத்தை செய்யும் போது மனதில் மகாலட்சுமியை வேண்டிக்கொள்ள வேண்டும். எலுமிச்சையை கட்டாயம் மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் தொட்டு எடுக்கவேண்டும்.

என்ன செய்வது
கண்ணாடி டம்ளர் எலுமிச்சை சிறிது நேரம் அது உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இருக்கட்டும். அதன்பின்பு, அந்த டம்ப்ளரை எடுத்து நீங்கள் நகை வைக்கும் பெட்டிக்கு பக்கத்தில் வைக்க வேண்டும். பணம் இருக்கும் பீரோ பக்கத்திலும் வைத்துக்கொள்ளலாம். நகை வைக்கும் அலமாரி இருந்தால், அந்த அலமாரிக்கு பக்கத்திலும் வைத்துக்கொள்ளலாம். வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால், மூன்று நாட்கள் கழித்து, திங்கள்கிழமை இந்த பொருட்களை எல்லாம் ஓடும் தண்ணீரில் கொட்டி விடலாம். முடியாதவர்கள் ஒரு கவரில் கொட்டி கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்யும்போதே உங்களுக்கு நல்ல பலன்கிடைத்து விட்டால் மீண்டும் அடுத்த வாரம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications