குபேரன்கிட்ட பெருமாள் வாங்கிய கடன் கூட அடைஞ்சிடும்! உன் கடன் அடையாதுனு சொல்றாங்களா? மேஜிக்கல் மே
சென்னை: கழுத்தை நெரிக்கும் கடனால் அவதிப்படுகிறீர்களா, கவலையே வேண்டாம். மே மாதம் இரு நாட்களில் நீங்கள் வாங்கிய கடனை அடைத்துவிடலாமே! இதற்கு என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இதுகுறித்து ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: வாங்கிய கடனை விரைவில் அடைக்க விரும்புகிறீர்களா?
வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் தவிப்பவர்கள், மைத்ர முகூர்த்த நேரத்தில் கடன் தொகையில் ஒரு சிறு பகுதியை திருப்பி கொடுத்தால் விரைவில் கடன் முழுவதையும் திருப்பி கொடுக்கும் வகையில் வசதி வாய்ப்புகள் உருவாகும்.
மைத்ர முகூர்த்தம் என்றால் என்ன?
அஸ்வினி நட்சத்திரமும்- மேஷ லக்னமும், அனுஷ நட்சத்திரமும்- விருச்சிக லக்னமும் கூடிய காலத்திற்கு 'மைத்ர முகூர்த்தம்' என்று பெயர். அத்துடன் செவ்வாயின் நட்சத்திரமும், சனிக்கிழமையும் இணைந்த நாளில் மேஷ, விருச்சிக லக்னத்திலும் கடனை தீர்க்கலாம்.
செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாள் மற்றும் நேரத்தில் கடனை திருப்பி கொடுக்கலாம். சூரிய, சந்திர கிரகணம் ஏற்பட்டு விலகும் சமயம் கடனை திருப்பி தரலாம். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் கடனை திருப்பி தரலாம்.
சென்ற பிறவியின் தவறுகளால் உருவான நோய் மற்றும் கடனுக்கு ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி அன்று குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு தொடர்ந்து செய்து வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.
கடன் பிரச்சனையில் இருந்து விடுபட என்ன தீர்வு?
கடன் தீர்ப்பதில் கேது பகவானும், செவ்வாய் பகவானும் மிகவும் பெரும் பங்காற்றுகின்றனர். கேதுவின் அதிதேவதையான விநாயகரை வணங்குவது, செவ்வாயின் அதிதேவதையான முருகனை வணங்குவது, கேது செவ்வாய் சேர்க்கை பெற்ற மைத்ர முகூர்த்தத்தில் கடன் அடைப்பது போன்றவை விரைவில் கடன் அடைய சிறந்த வழிகளாகும்.
மைத்ர முகூர்த்தம் எப்போது வருகிறது?
07.05.2024 செவ்வாய் அஸ்வினி மேஷ லக்னம் அதிகாலை 04.42 முதல் 06.23 வரை
23.05.2024 வியாழன் அனுஷம் விருச்சிக லக்னம் மாலை 05.38 முதல் 07.44 வரை
மைத்ர முகூர்த்தத்தில் செய்ய வேண்டியவை
முடிந்தவரை கடனை அடைக்க முயற்சி செய்யுங்கள்.
புதிய தொடக்கங்கள் : புதிய வியாபாரத்தைத் தொடங்குதல், முதலீடு செய்தல், புதிய சொத்துக்களை வாங்குதல் போன்ற புதிய தொடக்கங்களுக்கு இது சிறந்த நேரம்.
வழிபாடு
வீட்டை சுத்தம் செய்து, தெய்வ வழிபாடு செய்தல் நல்லது. எதிர்மறையான செயல்களை தவிர்ப்பது, கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications