Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணவன் மனைவி சண்டையா? மீனாட்சி அம்மன் கோவில் பள்ளியறை பூஜை பாருங்க..ஒற்றுமை தானா வரும்

Subscribe to Oneindia Tamil

மதுரை: சிலரது வீடுகளில் தினசரி சண்டைதான் போர்க்களமாக இருக்கும். சண்டை சச்சரவாக இருப்பவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் தினசரியும் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரிசனம் செய்தால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பலன்கள் கிடைக்கும். சிவன் சக்தி ஐக்கியத்தை உணர்த்தும் இந்த பள்ளியறை பூஜையை தம்பதி சமேதராக காண்பவர்களின் குடும்பங்களில் ஒற்றுமை அதிகரிக்கும்.

நமது தமிழ்நாட்டில் இருக்கும் 38,000 பழமையான ஆலயங்களில் 27,000 சிவாலயங்கள் ஆகும். 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளியறை பூஜை அனைத்து ஊர்களிலும், அனைத்து ஆலயங்களிலும் நடைமுறையில் இருந்து வந்தது. தமிழ்நாட்டில் எந்த ஊர்களில் எல்லாம் பள்ளியறை பூஜை நடைபெறவில்லையோ அந்த ஊர்களில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தம்பதிகள் பெருமளவு குறைந்துவிட்டதாக கூறுகின்றனர் பெரியோர்கள்.

எல்லா கோவில்களையும் போல, மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும்போல பள்ளியறை அம்மன் சன்னதியில் இருக்கிறது. இரவு அர்த்த ஜாமத்தில் மல்லிகை பூவால் கூடாரம் அமைத்து வெண்தாமரைகளால் மீனாட்சியின் பாதங்கள் அலங்கரிக்கப்பட்டு, வெண்பட்டால் அம்மனை அலங்கரித்து கிடைக்கும் அன்னையின் திருக்காட்சி காண கண்கோடி வேண்டும்.

Husband and wife fight? Watch Meenakshi Amman Temple Palliyarai Pooja

இரவு பள்ளியறைக்கு சுந்தரேஸ்வரரின் வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமி சன்னதியில் இருந்து பள்ளியறை வரும்.
பாதுகைகள் வந்த பின் அன்னைக்கு விசேஷ ஆரத்தி அதாவது மூக்குத்தி தீபாராதனை நடக்கிறது.
உள்ளே இருக்கும் பெரும்பாலான வண்ணம் வெள்ளை. எனவேதான் அன்னையின் மூக்குத்தியை மிக தெளிவாக தரிசிக்க இயலும்.

அத்தோடு மூன்று வகையான தீபங்கள் காட்டப்படும் அதில் கடைசி தீபம் அம்மனின் முகத்திற்க்கு மிக அருகில் காட்டுவார்கள். அவ்வாறு காட்டப்படும் போது மிக தெளிவாக அம்மனின் திருமுகத்தினை தரிசிக்கலாம்.
மூன்றாவது தீபாராதனைக்குப் பிறகு அன்னையின் சன்னதியில் திரை போடப்படும். அவ்வாறு திரையிட்ட பின்னர் அன்னையின் மூக்குத்தி பின்புறமாக தள்ளப்பட்டு விடும்.

மூக்குத்தியானது ஒரு செயினுடன் இணைக்கப்பட்டு அந்த செயினின் இன்னொரு பகுதி அம்மனது பின்புறத்தில் இணைக்கப்பட்டு இருக்கும். இவ்வாறு செய்த பிறகே அன்னையின் சார்பாக அன்றைய கட்டளைக்கான பட்டர் ஈசனை வரவேற்று பள்ளியறைக்கு எழுந்தருளச் செய்வார்.

அதாவது மூலஸ்தானத்தில் இருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு பாதபூஜை செய்து பள்ளியறைக்கு அழைத்துச் செல்வதாக ஐதீகம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் இந்த பள்ளியறை பூஜை பார்க்கப் பார்க்கத் திகட்டா காட்சியாகும்

பள்ளியறை பூஜை சிவ சக்தி ஐக்யத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்திற்கு சிறப்பு அதிகம். அதன் பின்னர் அம்பிகையின் சன்னதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை, பால், பழங்கள், பாடல்கள், வாத்ய இசை என்று சகல உபசாரங்களுடன் இரவு கோவில் நடை சார்த்தப்படுகிறது.

கணவன் மனைவி ஒற்றுமைக்கு மதுரை மீனாட்சி கோவிலில் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரிசித்தால் நல்ல பயனைக் கொடுக்கும் என்பதும் மீனாட்சி கோவிலில் மறைந்துள்ள பள்ளியறை பூஜை தரிசன ரகசியமாகும்.

Husband and wife fight? Watch Meenakshi Amman Temple Palliyarai Pooja

குழந்தை பாக்கியம் இல்லாதோர், பிள்ளை வரம் வேண்டுவோர் காலையில் மீனாட்சி அம்மனின் சின்னஞ்சிறு சிறுமி அலங்காரத்துடன் நடக்கும் ஆராதனையை தரிசித்து மனமுருகி வேண்டினால் அன்னை சந்தான பாக்கிய பலனை கட்டாயம் தருவாள்.

சின்னச் சின்ன பிரச்சினைகள் கூட பெரிய சண்டையாக மாறி விவாகரத்துவரை போகிறது சண்டை நீங்கி சமாதானம் அடைய கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்க சிவன் ஆலயங்களில் நடைபெறும் பள்ளியறை பூஜையை சிலமுறை பார்க்க வேண்டும். அதுவும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரிசிப்பவர்களின் வீடுகளில் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

பள்ளியறை பூஜைக்கு பல்லக்கில் சிவன் நகர்வலம் வரும் போது சிவபுராணம் படிக்க வேண்டும். பள்ளியறை பூஜையை தினம் தினம் தரிசனம் செய்தாலே வளமான வாழ்க்கை அமையும். பள்ளியறை பூஜைக்கு பல்லக்கு தூக்கி சுமக்கும் பாக்கியம் பெற்றவர்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதிகளாக மாறுவார்கள். பள்ளியறை பூஜைக்கு பூக்கள் கொடுப்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பள்ளியறை பூஜைக்கு நெய், நல்லெண்ணெய் கொடுப்பவர்களுக்கு கண் பிரச்சினைகள் தீரும் என்பது நம்பிக்கை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+