உங்கள் கணவர் படுக்கையில் டார்ச்சர் கொடுப்பாரா? டைவர்ஸ் ஆகிடுமா? ஜாதகத்தை வைத்தே தெரிஞ்சிக்கலாமே!
சென்னை: ஒரு பெண்ணின் ஜாதகத்தில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட கிரகம் இருந்தால் அவரது கணவர் படுக்கையில் டார்ச்சர் கொடுப்பார் என ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கின்றன. அது போல் எந்த இடத்தில் என்ன கட்டம் இருந்தால் எப்படிப்பட்ட கணவர் அமைவார் என்பதையும் பார்க்கலாம்.
இதுகுறித்து தமிழ் குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: ஜோதிடத்தில் கணவனை பற்றி கூறும் கிரகம் செவ்வாயாகும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாயின் நிலையை வைத்து அந்த பெண்ணுக்கு வரப் போகும் கணவனின் தன்மையை கூறலாம்.

காலபுருஷனுக்கு ஏழாமிடம் மனைவியை குறிக்குமிடமாகும். எனவே காலபுருஷனுக்கு முதல் வீடாகிய மேஷ ராசியின் அதிபதியை கணவனாகவும் துலா ராசியின் அதிபதியை மனைவியாகவும் குறிப்பிடுகிறது ஜோதிட சாஸ்திரம்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி அல்லது செவ்வாய் லக்னத்தில் இருந்தால் அந்த பெண் தன் கணவனை மிகவும் நேசிப்பாள். கணவன் ஒரு சிறந்த ஆண்மகனாக விளங்குவான். திருமணம் நல்லமுறையில் பெற்றோரால் பார்த்து மணமகனுக்கு நடத்திவைக்கப்படும். சொந்தமில்லை என்றாலும் அன்னியோன்னியம் மிகுந்திருக்கும்.
பெண்ணின் ஜாதகத்தில் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் இரண்டாம் பாவத்தில் நின்றால் குடும்ப வழக்கத்திற்கு மாறான காதல் திருமணம் நடைபெறும். கணவன் மனைவி உறவு நிலை அன்பானதாக இருந்தாலும் நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. கணவன் உறவினராக இருக்க கூடும். மனைவி எப்போதும் கணவரை திட்டி கொண்டே இருப்பார்.
கணவர் பாவம் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திற்க்கு மூன்றாம் பாவத்தில் நின்றால் காலதாமதமான திருமணம் நடைபெறும். உறவினர் அல்லது நெருங்கிய நண்பர் வழியில் கணவர் அமைவார். சனியும் சேர்க்கை பெற்றால் பெண்ணை உறவினர்கள் பழிப்பார்கள். கணவர் மீது அதிக பாசம் வைப்பார்.
பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் அல்லது ஏழாமதிபதி லக்னத்திற்கு நான்கில் நின்றால் மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வு அமையும். சனி ராகுவுடன் சேர்க்கை பெற்றால் தாழ்ந்த குலத்தை சேர்ந்தவரை கணவனாக அடைந்து மகிழ்ச்சியற்ற வாழ்க்கை அமையும். வீடு வாசல் வண்டி வாகனங்கள் எல்லாமே கிடைக்கும் ஆனால் மகிழ்ச்சி என்பது மட்டும் இருக்காது. வாழ்க்கை போராட்டமாகவே அமைந்து விடும்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் ஐந்தாம் பாவத்தில் நின்றால் சிறந்த குடும்பத்திலிருந்து நன்கு கற்ற அழகானவரை பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைப்பார்கள். மகிழ்ச்சியான திருமண வாழ்வு அமையும். சுபர் பார்வை இருந்தால் மனதிற்கு பிடித்தபடி காதல் திருமணம் நடக்கும்.
பெண்ணின் ஜாதகத்தில் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் ஆறாம் பாவத்தில் நின்றால் அந்த பெண்ணே தேர்ந்தெடுத்த வரனை கணவனாக அடைவாள். சிலருக்கு பெற்றோர் பார்த்து வரன் அமையும் கணவனை அந்த பெண் மிகவும் நேசிப்பாள். ஆனாலும் கணவனால் பல துன்பங்களை அடைந்து மகிழ்ச்சியற்ற நிலை ஏற்படும்.
பெண்ணின் ஜாதகத்தில் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் ஏழாமிடத்தில் இருப்பது காதல் திருமணத்தை குறிக்கும் அமைப்பாகும். குரு அல்லது புதன் ஏழாமிடத்தோடு தொடர்பு கொண்டால் பெற்றோரால் அங்கிகரிக்கப்பட்டு மகிழ்சியான திருமணம் அமையும். கணவன் அன்பானவராக அமைவார். குரு/புதன் சேர்க்கை பெறவில்லை என்றால் குறைந்த வயதிலேயே திருமணம் நடைபெற்று கணவனுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும்.
ஒரு பெண்ணின் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் எட்டாம் பாவத்தில் நின்றால் அந்த பெண்ணே தேர்ந்தெடுத்த மகிழ்சியற்ற திருமண வாழ்க்கை அமையும். கால தாமதமான திருமணம் நடைபெருவதோடு முறையற்ற வகையில் கணவனை அடைந்து மகிழ்ச்சியற்ற வாழ்க்கை ஏற்படும். கணவன் குடிகாரனாக பல தீய பழக்கங்களோடு அமைவதெல்லாம் இந்த அமைப்பில்தான் ஏற்படும். அவசர அவசரமாக திருமணம் செய்து நிதானமாக துக்கம் அனுபவிக்கும் நிலையாகும்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தின் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் பாக்கிய ஸ்தானம் எனப்படும் ஒன்பதில் இருப்பது உன்னதமான அமைப்பாகும். சிறந்த கணவனை அடைந்து மகிழ்சியான வாழ்க்கை ஏற்படும். திருமணத்தால் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் பத்தாமிடத்தில் நின்றால் உடன் பணிபுரியும் ஆண்மகனை அந்த பெண்ணே தேர்ந்தெடுத்து திருமணம் செய்து மகிழ்சியான வாழ்வு அமையும்.
கணவன் நல்ல வசதி படைத்தவனாக இருப்பார். சுபர் பார்வை இருந்தால் பெற்றோர் பார்த்த நல்ல வரன் அமையும். பெண்ணின் ஜாதகத்தின் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் பதினோரமிடத்தில் இருக்க குடும்ப உறவினரில் கணவன் அமையப் பெற்று பொன் பொருள் மற்றும் பல லாப அமைப்புகளை பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாமதிபதி அல்லது செவ்வாய் பன்னிரெண்டில் நிற்க தானே தேர்ந்தெடுத்துக் கொண்ட முறையற்ற சமுதாயத்திற்கு புறம்பான திருமண வாழ்க்கை அமையும். குருபார்வை பெற்றால் பெற்றோர் ஆதரவு உண்டு. என்றாலும் கணவனால் படுக்கை சுகத்திறக்காக படாத பாடு படுத்தப்பட்டு மகிழ்ச்சியற்ற நிலையில் பிரிந்து வாழவோ அல்லது கணவனை இழந்து வாழவோ நேரும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்கள் சமூகவலைதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இதை நம்புவதும் நம்பாததும் அவரவர் மனநிலையை பொருத்தது. இதனால் ஏற்படும் விபரீதங்களுக்கு நிறுவனம் பொறுப்பாகாது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications