நல்லதே நினைக்கும் செல்லப்பிராணிகள்.. நேர்மறை ஆற்றல் அதிகரிக்க வளர்க்கும் திசை.. வாஸ்து டிப்ஸ்
சென்னை: நம்முடைய வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு நாம் சரியான திசையில் அறைகளை ஒதுக்கி தர வேண்டும். செல்லப்பிராணிகள் அமைதியாக விளையாடிக்கொண்டிருந்தால் நம்முடைய வீட்டில் நேர்மறை சக்திகள் அதிகரிக்கும். எதிர்மறை சக்தியை விரட்டியடிக்கும் திறன் செல்லப்பிராணிகளுக்கு உண்டு என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் வீட்டு உரிமையாளர்களை பாதுகாக்கும். செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு உணர்வு ரீதியான உறவை உருவாக்கும். செல்லப்பிராணியின் ஒவ்வொரு சத்தமும் வீட்டு உரிமையாளருக்கு ஏதாவது ஒன்றை உணர்த்திக்கொண்டே இருக்கும். நாய் வளர்ப்பவர்கள் இதை நன்கு உணர்ந்திருப்பார்கள். நாய்கள் நன்றி உள்ளவை. விசுவாசமானவை.

வீட்டின் எதிர்மறை ஆற்றலை விரட்டி நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் சக்தி நாய்களுக்கு உண்டு. நமக்கு ஏதாவது ஒன்று நடக்கப்போகிறது என்று நாய்கள் உணர்ந்து நம்மை காப்பாற்றும். நமக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படப்போகிறது என்று உணர்ந்து அதற்கேற்ப நம்மை பாதுகாக்கும் சக்தி நாய்களுக்கு உண்டு. நாய்களை வளர்ப்பதன் மூலம் மன அழுத்தம் விலகும். வாஸ்துபடி நாய் வளர்ப்பது வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
ஒருசிலர் வீடுகளில் பசு வளர்ப்பார்கள். பசு புனிதமான விலங்கு. எந்த தீய சக்தியையும் வீட்டிற்குள் நுழைய விடாது. மாட்டு கொட்டில் வைத்து பராமரிப்பவர்கள் வடமேற்கு திசையில் வைத்து வளர்க்கலாம். செல்வத்தின் அதிபதி மகாலட்சுமியின் அம்சமாக பசு போற்றி வணங்கப்படுகிறது. பசுவை வளர்ப்பதன் மூலம் நம்முடைய ஆரோக்கியம் அதிகரிக்கும் வீட்டில் செல்வ வளம் பெருகும்.
கிளிகள் பேசும் பேச்சை கேட்டாலே மன அழுத்தம் நீங்கும். சிலர் வீட்டில் லவ்பேர்ட்ஸ், கிளிகள் வளர்ப்பார்கள். கிளிகளை வடக்கு திசையில் கூண்டு வைத்து வளர்க்க வேண்டும். காதல் பறவைகள் கூண்டுகளை வடகிழக்கு அல்லது கிழக்கு திசையிலோ வடமேற்கு திசையிலோ வைத்து வளர்க்க வேண்டும்.
வடக்கு பகுதியிலோ, கிழக்குப் பகுதியிலோ செல்லப்பிராணிகளை வளர்த்தால் அவை மகிழ்ச்சியோடு இருக்கும். அக்னி மூலையான தென்கிழக்கு பகுதியில் செல்லப்பிராணிகளை வளர்த்தால் அவை அமைதியற்றவையாக இருக்கும். எனவே செல்லப்பிராணிகளை அமைதியான முறையில் வளர்க்க வேண்டும்.
வாஸ்து மீன்களை சிலர் வளர்ப்பார்கள். மீன்கள் வீட்டின் குடியிருப்பாளர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். மீன்கள் நல்ல ஆரோக்கியத்தையும் தருகின்றன. நம்முடைய வீடுகளில் மீன் தொட்டியை வளர்த்தால் நம்முடைய கவலைகள் நீங்கும். மனச்சோர்வு குறையும். வீட்டில் மீன் தொட்டியை கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் வைப்பதே சிறந்தது. மீன் தொட்டியை வீட்டின் தென்கிழக்கு பகுதியில் வைத்தால், அது அளவுக்கு அதிகமாக கண்டதை பற்றி சிந்திப்பதைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும். மீன் தொட்டியை எந்த சூழ்நிலையிலும் சமையலறையில் மட்டும் வளர்க்கக் கூடாது. படுக்கை அறையில் மீன் தொட்டியை வைத்திருக்கக்கூடாது. இதனால் வீட்டில் பண இழப்பு தான் ஏற்படும். மன அமைதியும் குறையுமாம். எனவே சரியான திசையில் மீன் தொட்டியை வைத்து வளர்க்க செல்வ வளமும் மன அமைதியும் அதிகரிக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications