இறந்தவர் வீட்டுக்கு சென்று வந்தால் குளிப்பது ஏன்? எண்ணெய் குளியல் மகத்துவம்.. தோஷம் நீக்க இது போதுமே
சென்னை: எண்ணெய் தேய்த்து குளிப்பது குறித்து ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் என்னென்ன? ஆண்கள், பெண்கள், எந்த நாளில் தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பது நல்லது? கோயிலுக்கு சென்று வந்ததும் குளிக்கக்கூடாது என்று பெரியவர்கள் சொல்ல என்ன காரணம்? இறந்தவர் வீட்டுக்கு சென்று வந்ததுமே குளிக்க சொல்ல என்ன காரணம்? ஆண்கள், பெண்கள் எந்த நாளில் தலைக்கு குளிக்கலாம்? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பது உடலுக்கு ஆரோக்கியமானதாகும்.. உடலிலுள்ள உஷ்ணம் நீங்கும்.. வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு எண்ணெய்க் குளியல் அவசியம்.. வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுத்து கொள்ளும்போது, சரும துவாரங்களிலும் அழுக்குகள் வெளியேறும்.. வேனல் கட்டிகள், கொப்புளங்கள், வேர்க்குரு, என எந்த தொந்தரவும் நெருங்காது.. சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் இருக்கும்.

எண்ணெய் குளியல் பயன்கள்
எண்ணெய் குளியல் நிம்மதியான தூக்கத்தை தரக்கூடியது.. இதனால் தலைமுடியும் வலுவடையும்.. உடல் வலி இருப்பது போன்று தோன்றினால் எண்ணெய் குளியல் எடுத்து கொள்ளலாம்.. மூட்டு வலி, முழங்கால் வலியால் அவதிப்படுபவர்களுக்கும் எண்ணெய் குளியல் நல்லது என்பார்கள்.
ஆன்மீகத்தை பொறுத்தவரை, உடல் உஷ்ணத்தை தரக்கூடிய சூரியன் மற்றும் செவ்வாயால் உண்டாகக்கூடிய உஷ்ண கோளாறுகள் எண்ணெய் குளியலால் நீங்கிவிடும்.. எனவே, விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் என 3 எண்ணெய்களையும் சமமாக கலந்து, தலையில் தேய்க்கலாம்.
3 எண்ணெய் முக்கியம்
சனி பகவானுக்கு உரிய தானியம் எள் என்பதால் எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய்யே தலைக்கு தேய்க்க பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. வாரந்தோறும் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் சனி தோஷம் விலகுகிறது, சனியினால் ஏற்படும் எலும்பு நோய்கள், வாதம் போன்றவை நீங்குகிறது அத்துடன் புதனால் ஏற்படும் நரம்பு நோய்களும், சரும நோய்கள் நீங்குகின்றன.
ஆண்கள் புதன், மற்றும் சனிக்கிழமைகளில் குளிக்கலாம்.. திங்கள், வெள்ளியில் எண்ணெய் தேய்த்து குளித்தால் முடக்கு வாதமும், செவ்வாய் கிழமைகளில் குளித்தால் முதுகெலும்பு, மாலைக் கண் நோயும், வியாழக்கிழமைகளில் குளித்தால் கால் குடைச்சலும் ஏற்படுமாம்.
இறந்தவர் வீடு
பெண்கள் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது, அறிவு விருத்தியடையும்.. செல்வம், புகழ் பெருகும்.. திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் எண்ணெய்க் குளியல் என்றால் அனைத்து செல்வங்களும் உண்டாகும் என்பார்கள்.. ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் வீட்டிலுள்ள செல்வம் வெளியேறிவிடுமாம்.
பெரும்பாலும், உச்சந்தலையில் தண்ணீர் படும்போது, உடம்பிலுள்ள சர்வநாடிகளும் ஒரு சிலிர்ப்பு சிலிர்ப்பி நமது உடலில் உதறல் ஏற்படுகிறது. இதனால் நம்மை ஆக்கிரமித்துள்ள கதிர்கள் அனைத்தும் தண்ணீரில் அடித்து செல்லப்படுவிடும்.. இறந்தவர் வீட்டில், சவம் கிடக்கும் இடத்தில் உள்ள கதிர்கள் உடம்பில் படர்ந்திருக்கும் என்பதால்தான், இறந்த வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க சொல்கிறார்கள்.
அதேபோல, கோயிலுக்கு போய் வந்தவுடன் குளிக்க கூடாது என்பார்கள்.. ஏனென்றால், கோயில் என்பது நல்ல சக்தி, நல்ல சூழ்நிலை, நல்ல கதிர்வீச்சு நடமாடும் இடமாகும்.. ஒருஇடம். அங்குள்ள கதிர்வீச்சை, குளித்து தண்ணீருடன் கலந்து வீனாக்கக் கூடாது என்பதால்தான், கோயிலிலிருந்து வந்ததும் குளிக்க கூடாது என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications