Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செத்துப்போன தாத்தா பாட்டி உங்கள் வீட்டுக்கு வந்து சாப்பிடுறாங்களா? கனவு உணர்த்தும் உண்மை இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நமக்கு நெருங்கிய சொந்தங்கள் நம்மீது பாசமாக இருந்த தாத்தா பாட்டி, பெற்றோர்கள் திடீரென இறந்து விட்டால் நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது. அவர்களின் மறைவு நம்முடைய மனதை வாட்டி வதைக்கும். இறந்து போனவர்கள் நம்முடைய கனவில் வந்து நம்முடன் பேசுவது போலவோ, நம்முடன் சாப்பிடுவது போலவோ கனவு வரும். இது போல கனவு அடிக்கடி வந்தால் என்ன பலன் கிடைக்கும் நல்லதா? கெட்டதா? கனவு சாஸ்திரம் என்ன சொல்கிறது பார்க்கலாம்.

கனவு சாஸ்திரம்: நாம் காணும் கனவு எல்லாம் பலிப்பதில்லை. சில கனவுகள் நம்முடைய ஆழ் மன எண்ணங்களை இரவு நேரங்களில் தூக்கத்தில் நமக்கு வெளிப்படுத்துகிறது. சில கனவுகள் பலிக்கும். சில கனவுகள் சாதாரணமாக வந்து விட்டு போய்விடும். இறந்தவர்கள் அடிக்கடி கனவில் வருகிறார்கள் என்று சிலர் சொல்ல கேட்டிருப்போம். அது பற்றி கனவு சாஸ்திரம் என்றழைக்கப்படும் அபிதான சிந்தாமணி கலைக்களஞ்சியம் எனும் நூல் கூறும் பலன்களை பார்க்கலாம்.

 Iranthu Ponavaragan kanavil vanthu sappital enna palan: Kanavugalum palangalum in spirituality

கனவில் சடலம்: கனவில் யாராவது இறந்து போவது போல கண்டால் நம்முடைய துன்பங்கள் விலகப்போகிறது என்று அர்த்தம். இறந்து போனவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கும் என்று அர்த்தமாகும். இறந்து போனவர்களின் சடலத்தை நாம் தூக்கி செல்வது போல கனவு கண்டால் நம்முடைய துன்பங்கள் விலகப்போகிறது என்று அர்த்தம். இறந்து போன நம்முடைய முன்னோர்கள் நம்முடைய கனவில் வந்து நமக்கு ஆசி வழங்கினால் நமக்கு சகலவிதமான நன்மைகளும் ஏற்படும் என்று அர்த்தம்.

செல்வம் அதிகரிக்கும்: மறைந்த உங்கள் தந்தை கனவில் வந்தால் உங்களால் தீர்க்கமுடியாத பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போகிறது என்று அர்த்தமாகும். உயிரிழந்த உறவினர்களுடன் சிரித்து பேசுவது போல கனவு வந்தால் நமக்கு பெயரும் புகழும் ஏற்படப்போகிறது என்று அர்த்தம். உங்களுடைய துன்பங்களை போக்குவதற்கு அவர்கள் உதவி செய்யப்போகிறார்கள் என்று அர்த்தமாகும். உயிரிழந்த உறவினர்கள் நம்முடைய வீட்டிற்கு வந்து சாப்பிடுவது போல கனவு வந்தால் நமக்கு நற்பெயரும் செல்வ செழிப்பும் ஏற்படப்போகிறது என்று அர்த்தமாகும்.

எச்சரிக்கும் பெற்றோர்: இறந்துபோன தாய் மற்றும் தந்தையை கனவில் கண்டால் வர இருக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்தார்கள் என்று பொருள். இறந்து போன தாய் கனவில் வந்தால் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கப்போகிறது என்று அர்த்தம். சில நேரங்களில் நாமே இறந்து பாடையில் வைக்கப்பட்டது போல கனவு வரும். அப்படி வந்தால் பயப்பட வேண்டாம் ஆயுள் அதிகரிக்கும் என்று அர்த்தமாகும். வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

சண்டை வரும்: நாம் உறவினர் வீட்டிற்குப் போய் சாப்பிடுவது போல கனவு கண்டால் குடும்பத்தில் சண்டை வரும் என்று அர்த்தம். உறவினர்களுடன் நம்முடைய வீட்டிற்கு வந்து வாழை இலை போட்டு சாப்பிடுவது போல வந்தால் திருமணம் நடைபெறும் என்று அர்த்தம். மலத்தை மிதிப்பது போலவே மலத்தையோ கனவில் கண்டால் பண வருமானம் அதிகரிக்கும். களவு போன பொருள் திரும்ப கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+