பூஜை அறையை முதல் நாள் இரவே சுத்தம் செய்து! மறுநாள் பூஜை செய்வது சரியா? தவறா?
சென்னை: பூஜை அறையை முதல் நாள் இரவே சுத்தம் செய்து, அடுத்த நாள் அப்படியே பூஜை செய்வது சரியா தவறா? என்ற குழப்பம் பலருக்கு நீண்ட காலமாக இருக்கும். ஆனாலும் காலில் சக்கரத்தை கட்டி சுற்றாத குறையாக வேலை வேலை என ஓடிக் கொண்டிருப்பதால் அது குறித்து அதிகம் சிந்திக்க முடியாமல் இருக்கிறது.
இதுகுறித்து ரங்கா என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: "தினமும் இதே வேலையா போச்சு, யார் தான் இப்படி மாமிசத்தை எம்பிரான் முன்னால் சிந்தி விட்டு செல்கிறாரோ?"

- அலுத்துக் கொண்டே சுத்தம் செய்தார் அந்த வேதியர்.
கொண்டு வந்த குடத்து நீரை ஸ்வரம் தப்பாமல் ருத்ர ஜபம் சொல்லி அபிஷேகம் செய்து, பக்தியுடன் லிங்க திருமேனிக்கு அலங்காரமும் செய்து, வில்வ மாலை சார்த்தி அழகு பார்த்தார்.
திருஷ்டி படாமல் இருக்க எம்பிரானுக்கு தீப ஆராதனையும் செய்து நெற்றியில் மண் ஒட்ட விழுந்து வணங்கினார்.
இன்றைக்கு ஒளிந்திருந்து என்ன நடக்கிறது? ஒரு கை பார்த்து விடுவோம் என்று மனதில் உறுதி பூண்டார்.
பரிதி மறையும் நேரம்.
வேட்டுவன் இலை நிறைய இளம் மான் இறைச்சியுடன் வந்து சேர்ந்தான். சிந்தி இருக்கும் மலர்களையும், வில்வ மாலையையும் எம்பிரான் திருமேனியிலிருந்து முதல் வேலையாக களைந்தான்.
வாய் நிறைய வைத்திருந்த நீரை லிங்க திருமேனியில் பீய்ச்சி அடித்தான். நாலு வில்வ இலைகளை லிங்கத்தின் தலையில் வைத்து, கறியை அன்பொழுக எம்பிரான் முன்னால் வைத்து விட்டு, சிறிது எடுத்து அவர் வாயிலும் ஊட்டி விட்டான்.
ஈஸ்வரா! இது என்ன கொடுமை? - மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த வேதியருக்கு மர்மம் விலகியது, ரத்தம் கொதித்தது.
கைலையம்பதிக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.
"சரி, இன்றைக்கு தரமான சம்பவம் ஒன்று நடக்க இருக்கிறது" என்று அறம் வளர்த்த நாயகியும் மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.
அந்த சித்தன் போக்கை, சிவன் போக்கை உமையொருபாகத்தியும் அறிந்திலள்.
லிங்க திருமேனியின் வலது கண்ணில் இருந்து ரத்தம் வடிய, சரேலென ஒரு அம்பினால் தன் கண்களை பிடுங்கி வலது பக்கம் அப்பினான். வேதியர் மயங்கி விழாத குறை.
இப்பொழுது இடது கண்ணிலிருந்தும் குருதி. அந்த சிவம் சோதிக்க முடிவு செய்து விட்டால் முடிவேது?
வேடனும் சளைக்காமல் இன்னொரு அம்பினை உருவி, தனது ஒரு காலை எடுத்து லிங்க திருமேனியின் இடது கண்ணருகே அடையாளம் வைத்துக் கொண்டு, தன் இடக்கண்ணையும் பிடுங்கி, லிங்கத்தில் அப்ப,
"போதும்! கண் அப்ப! கண் அப்ப!
ரிஷப வாகனத்தில் உமையோடு எம்பிரான் காட்சியளித்து வேடனை ஆரத் தழுவிக் கொண்டார். வேடன் கண்ணப்ப நாயனார் ஆகி விட்டார்.
வேடன், பார்த்துக் கொண்டிருந்த வேதியர் என எல்லோருக்கும் அன்று சிவ தரிசனம் கிட்டியது.
இப்பொழுது சொல்லுங்கள், வேதியரின் பக்தி சிறந்ததா? வேட்டுவன் பக்தி உயர்ந்ததா?
இரண்டுமே சரி தான்.
அவரவர் தம் தர்மப்படி சிவ வழிபாடு செய்தனர். முறைகள் வெவ்வேறாக இருந்தாலும் பக்தியில் ஒரு குறையும் இல்லை.
அதற்காக எல்லோரையும் மான் கறியுடன் எம்பிரான் கோவிலுக்கு கிளம்ப சொல்லவில்லை. மனம் நிறைய பக்தியுடன், சிவ சிந்தனையுடன் செல்லுங்கள்.
பதிலுக்கு வருவோம்,
பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும் என்ற அந்த எண்ணமே சிறந்தது. முதல் நாள் இரவு சுத்தம் செய்து விட்டு, பக்தியோடு மறு நாள் காலையில் இறை வழிபாடு செய்தால் மறுக்கவும் செய்வானோ அந்த மருந்தீசன்?
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே!" - திருமந்திரம் 1823
இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications