வீட்டில் சிலந்தி வலை இருக்கா? விரட்டி விட்டாலும் மீண்டும் வருதா? பணம் கையில் நிக்காது.. இதை பாருங்க
சென்னை: வீட்டில் சிலந்தி வலை இருப்பது நல்லதா? கெட்டதா? சிலந்திகள் வீட்டிற்குள் ஆகாத பூச்சியினமானும்.. வாஸ்துபடி வீடுகளில் சிலந்தி வலை இருந்தால், பணம் நிற்காது.. சிலந்தி வலைகள் எதிர்மறை ஆற்றலை வீட்டிற்குள் ஈர்க்கக்கூடியவை.. எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், அவை கரைந்து கொண்டேயிருக்கும். சிலந்திகள் வீட்டிற்குள் இருப்பதால் வேறு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்? சிலந்திகளை அகற்ற என்ன செய்யலாம்?
சிலந்தி வலைகள் எப்போதுமே நல்ல விஷயமாக கருதப்படுவதில்லை.. வீட்டில் எதிர்மறை ஆற்றலை, நெகட்டிவ் எனர்ஜியை அதிகப்படுத்திவிடும்.. ஒற்றுமையாக இருக்கும்போதுகூட, பிரிவினைக்குள் ஆளாக நேரிடும்..

நிதிநிலை பற்றாக்குறை
தேவையில்லாமல், பணம் கரைந்து கொண்டேயிருக்கும்.. காரணமே இல்லாமல் கோபப்படுவது, சோம்பல், குழப்பம், பதட்டம் அனைத்துமே ஏற்படும். அதாவது, வீட்டிற்குள் சிலந்தி வலைஇருந்தால், நிதிநிலை பற்றாக்குறை, செலவுகள், வீண் விரயம் ஏற்படும்.. படுக்கை அறையில் சிலந்தி வலைகள் இருந்தால், அது தம்பதியிடையே பிணக்கத்தை தரும்.
பூஜை அறையில் சிலந்தி வலை இருந்தால், குடும்பத்தில் தீரா கஷ்டங்கள் ஏற்படும். சமையலறையில் சிலந்தி வலை பின்னப்பட்டிருந்தால், குடும்பத்தில் யாருக்காவது உடல்நலம் பாதிக்கப்படலாம். எனவே, சுத்தம் செய்து, சிலந்தி வலைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
சிலந்தி வலைகள்
அப்படி சுத்தம் செய்தும் மீண்டும் மீண்டும் சிலந்திகள் வீட்டிற்குள் வந்தால், புதினா எண்ணெய் பயன்படுத்தலாம்.. காரணம், சிலந்திகளுக்கு புதினா வாசனை பிடிக்காது. சில துளிகள் புதினா எண்ணெயை நீரில் கலந்து, ஜன்னல்கள், கதவுகள், மற்றும் சிலந்தி வலை பின்னும் இடங்களில் தெளித்துவிடலாம்.
அதேபோல, ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களின் தோல்களை கொண்டு, ஜன்னல், கதவு இடுக்குகள், ஷெல்ப்புகளில் தேய்க்கலாம், இந்த வாசனை சிலந்திகளை வரவிடாமல் தடுக்கும்.. பெட்ரோலியம் ஜெல்லியை லேசாக ஜன்னல், கதவு வாசலில் தடவினாலும் பலன் கிடைக்கும்.
சோடியம் நீராவி பல்பு
தேவையற்ற நேரங்களில் ஜன்னல்களை மூடி வைக்கலாம்.. குளிர் அதிகமான நேரங்களிலும், வீட்டின் ஜன்னல்கள், கதவுகளை மூடி வைக்கலாம். இரவில் தேவையில்லாத நேரங்களில் வீட்டிற்கு வெளியே விளக்குகள் எரிவதை அணைக்கலாம்.
பூச்சிகளை ஈர்க்காத மஞ்சள் அல்லது சோடியம் நீராவி பல்புகளை பயன்படுத்தலாம். பெட்ரோலியம் ஜெல்லியை ஜன்னல் பிரேம்கள் மற்றும் கதவு வாசலில் தடவினால், சிலந்திகள் ஊர்ந்து செல்வதைத் தடுக்கலாம். அல்லது வெறுமனே தண்ணீரில் கரைத்த கற்பூரத்தை துணியில் நனைத்து, சிலந்தி வலைகள் பின்னும் இடங்களில் தடவி விடலாம். அதேபோல சிலந்தியை விரட்ட கிராம்பு, புதினா, வெங்காயம் தோலையும் பயன்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications