கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லை நீங்கணுமா? ரெண்டே ரெண்டு இலை போதுமே.. சூப்பர் பரிகாரம் செய்து பாருங்க
சென்னை: குடும்பத்தில், செல்வம், ஆரோக்கியம், மகிழ்ச்சி போன்றவை நிலையாக தங்கியிருக்க வேண்டுமானால் ஒருசில விஷயங்களில் கூடுதல் கவனத்தை செலுத்தினாலே போதும்.. அதிலும் கடன் தொல்லை அதிகமாகிவிட்டால், அவைகளிலிருந்து சில பரிகாரங்களும் கை கொடுக்கின்றன என்கிறார்கள் பெரியவர்கள். அந்தவகையில் ஒருசிலவற்றை மட்டும் இங்கே பார்ப்போம்.
எப்போதுமே பரிகாரங்களை செய்வதால் மட்டுமே, கடன் பிரச்சனைகள் நீங்காது. இந்த பரிகார்ஙகளுடன், கடனை அடைப்பதற்கான முயற்சியையும் சேர்த்து மேற்கொள்ளும்போது, எளிதில் அப்பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

கடன் சுமை அதிகரித்து விட்டால் விநாயகருக்கு செவ்வாய் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரவேண்டும்.. இப்படி செய்து வந்தால் கடன் குறையும்... பூஜை நேரங்களில் கணேஷ் சாலிசா அல்லது உங்களுக்கு விருப்பமான மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
கடன் தொல்லை: தினமும் காலையில் சூரியன் உதித்ததுமே, ஒரு கிண்ணம் நீர் எடுத்து சூரியனை வணங்கவேண்டும். இதனால், நேர்மறையான ஆற்றல்கள் அதிகரிப்பதுடன், நிதி ஸ்திரத்தன்மையை ஈர்க்க செய்யும்.
ஒரு சிறிய படிகாரத்தின் மீது சிவப்பு குங்குமத்தை தடவ வேண்டும். பிறகு அதை ஒரு வெற்றிலையில் சுற்றி, அரச மரத்தின் கீழ் வைக்கவும். இந்த தீர்வு கடனில் இருந்து விரைவாக விடுபட உதவுகிறது.
அதேபோல, பிரியாணிக்கு சமைக்கும் போது பயன்படுத்தப்படும் பிரியாணி இலைகளை வைத்தும் பரிகாரம் செய்யலாம்.. இதற்கு, எந்தவொரு ஓட்டையோ, கிழிசலோ இல்லாத நல்ல பிரியாணி இலை ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்..
பிரியாணி இலை : இலையில் பச்சை நிற பேனாவில் உங்களது கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று எழுத வேண்டும். அல்லது உங்கள் கடன் தொகையையும், கடன் விரைவில் அடைய வேண்டும் என்றும் எழுத வேண்டும். அல்லது கடன் பெற்றிருக்கும் நபரின் பெயரை அதில் எழுதி, அவரிடம் வாங்கிய கடன் அடைய வேண்டும் என்று எழுதிக் கொள்ள வேண்டும்.
பிறகு உங்கள் முன்பு, மண் அகல் விளக்கு அல்லது மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக்கொண்டு, இரவு மணி 11.11 ஆனதுமே, அந்த பிரியாணி இலையை உங்களது தலையை 11 முறை சுற்றி அந்த விளக்கில் எரித்துவிட வேண்டும்.. அப்படி எரிக்கும்போது மனதிற்குள் கடன் அடைய வேண்டும் என்று 11 முறை சொல்ல வேண்டும். பிரியாணி இலையை எரித்த பிறகு வரும் சாம்பலை கால் மிதி இல்லாத இடங்களில் கொட்டி விட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். இந்த பரிகாரம் விரைவில் நல்ல பலனைதரும்.
வெள்ளை எருக்கன் இலை: அதேபோல, வெள்ளை எருக்கன் இலைகளை வைத்து எளிய பரிகாரங்கள் செய்யலாம். அல்லது வெறுமனே எருக்கன் இலையில் இப்பரிகாரம் செய்யலாம். இதற்கு ஒரேயொரு எருக்கன் இலையை, மஞ்சள் நீரில் சுத்தமாக கழுவி, சிவப்பு நிற மையால் உங்களது கடன் தொகையை எழுத வேண்டும்.
பிறகு சாம்பிராணி கரண்டியில் இலையை வைத்து, அதன்மீது வேப்ப எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 2 சொட்டு ஊற்ற வேண்டும். அடுத்ததாக, அதன் மீது ஒரு கற்பூரத்தை வைத்து, வீட்டிற்கு வெளியில் கொண்டுவந்து ஏற்ற வேண்டும். கற்பூரம் எரிந்து முடிக்கும்வரை உங்கள் பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6:30 மணியிலிருந்து 7:30 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய செய்தால் சிறப்பு.












Click it and Unblock the Notifications