சொந்த வீடு வாங்கணுமா? கேட்டது கிடைக்க செய்யும் அதிசயம்.. இந்த 2 பரிகாரம் போதுமே.. பணகஷ்டம் நீங்கும்
சென்னை: தீராத பிரச்சனைகள் தீர வேண்டுமானால், கடன் உள்ளிட்ட இன்னல்களிலிருந்து விடுபட வேண்டுமானால், எளிய பரிகாரங்கள் கை கொடுத்து உதவுகின்றன.. இந்த பரிகாரங்களை முறையாகவும், மனதார பிரார்த்தித்து செய்ய வேண்டும். அதில் 2 பரிகாரங்களை பார்ப்போம்.
அனைவருக்குமே சொந்த ஆசை கனவு இருக்கத்தான் செய்யும், செவ்வாய் என்பதையே வருவாய் என்பார்கள்.. அதனால் அன்றைய தினம், கடவுள்களிடம் உங்கள் கோரிக்கையை வைத்தால் உடனே நிறைவேறும் என்பார்கள் பெரியவர்கள்.

செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை வழிபட்டால் சொந்த வீடு கட்டும் யோகம் கிடைக்கும். செவ்வாய்க்கிழமை விரதம் மேற்கொள்வதால் கூடுதல் பலன் கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமை: அதாவது, செவ்வாய்க்கிழமை காலையில், முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு, வீட்டுக்கு வந்து பால் அல்லது பழச்சாறு மட்டும் குடித்து விரதம் மேற்கொள்ள வேண்டும். மலை 6 மணிக்கு மீண்டும் முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமை செய்து வரும்போது, புதுவீடு யோகம் வருவதுடன், செவ்வாய் தோஷமும் மெல்ல நீங்குமாம்.
அதேபோல வீட்டில் குறைவின்றி செல்வத்தை பெற வேண்டுமானால், ஆண்டிமனியை ஒரு திறந்த பாட்டிலில் வைத்து, மறைவான இடத்தில் புதைத்துவிட வேண்டும். இதனால் விரைவில், குடும்ப முன்னேற்றத்தில் மாற்றம் தெரியும். சனிக்கிழமையன்று காய்ந்த தேங்காயை ஆற்றில் மிதக்க வைக்கலாம்.. இதை தொடர்ந்து செய்து வந்தாலும், நிதி சிக்கல் மறைந்து, பணப்புழக்கம் அதிகமாகும்.
உப்பு பரிகாரம்: உப்பு பரிகாரமும், பணப்பற்றாக்குறையை தீர்க்க உதவுகிறது.. இதற்கு பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, 2 கைகளிலும் உப்பினை வைத்து கொண்டு கிழக்கு திசை நோக்கி உட்கார வேண்டும். மடியில் ஒரு வெள்ளை காகிதத்தை வைத்து, கைகளை உங்கள் தொடைமீது வைத்து, உள்ளங்கை மேல் நோக்கி இருக்கவேண்டும். பிறகு கைகளை உப்புடன் இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டும்.
இப்போது உங்களது வேண்டுதலை மனம்விட்டு சொல்ல வேண்டும். இறுதியில், அந்த உப்பினை ஓடும் நீரில் போட்டு விட வேண்டும். இதுபோல 2 வாரங்கள் செய்து வந்தாலே, உங்களுடைய கோரிக்கை நிறைவேறும்.
பண வருமானம்: அதேபோல, ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையில், குளித்து பூஜைகளை செய்து முடித்துவிட்டு, அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, கல் உப்பு வாங்கி வர வேண்டும்.. அதனை உப்பு பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் இப்படி செய்து வரும்போது பண வருமானம் அதிகரிக்குமாம். வளர்பிறையில் வரக்கூடிய திருதியையன்று, அன்னதானம் செய்தாலும் கடன் பிரச்சினைகள் தீரும்.
அதேபோல, வெள்ளிக்கிழமை காலை 5 வெற்றிலை, 5 கொட்டை பாக்கு, 5 ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றை பூஜையில் வைத்து மகாலட்சுமி வழிபாடு செய்ய வேண்டும். பிறகு இவை அனைத்தையும் ஒரு பேப்பரில் மடித்து வைக்க வேண்டும். இதேபோல மறுவாரமும் செய்ய வேண்டும். அப்படி செய்யும்போது, ஏற்கனவே பேப்பரில் மடித்து வைத்திருந்ததை ஒரு உண்டியலில் போட்டு வைக்கலாம்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை












Click it and Unblock the Notifications